ராமகுண்டம் உரங்கள் மற்றும் ரசாயனம் நிறுவனத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் மத்திய அமைச்சர் திரு சதானந்த கவுடா

0
227

ராமகுண்டம் உரங்கள் மற்றும் ரசாயனம் நிறுவனத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் மத்திய அமைச்சர் திரு சதானந்த கவுடா

புதுதில்லி, ஜனவரி 21, 2021

தெலங்கானா மாநிலம் ராமகுண்டத்தில் அமைக்கப்படும், உரங்கள் மற்றும் ரசாயன நிறுவனம்(ஆர்எப்சிஎல்) கட்டுமான பணிகளை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு சதானந்த கவுடா இன்று ஆய்வு செய்தார்.

தெலங்கானா ராமகுண்டத்தில், உரங்கள் மற்றும் ரசாயண நிறுவனத்துக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி அடிக்கல் நாட்டினார்.  இங்கு ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தயாரிக்கும் ஆலை வரவுள்ளது.

இங்கு நடைபெறும் கட்டுமான பணிகளை மத்திய ரசாயன மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு. சதானந்த கவுடா இன்று ஆய்வு செய்தார்.

இந்த ஆர்எப்சிஎல் திட்டத்தின் 99.85 சதவீத பணிகள் முடிந்து விட்டன. இது விரைவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மத்திய அமைச்சர் சதானந்தகவுடா அப்போது  திருப்தி தெரிவித்தார்.