ரவுண்ட் டேபிள் 100, ஆர்.சி.சி மேக்னம் உள்ளிட்ட அமைப்புகள் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு 4.5 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை வழங்கி உதவியுள்ளனர்
ஜெயின் சமூகத்தினரின் புனித நிகழ்ச்சியான பரியுஷன் பர்வ் – வின் ஒரு பகுதியாக சென்னை தியாகராயநகரில் உள்ள ஶ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரவுண்ட் டேபிள் மார்ட் 100 அமைப்பின் தலைவர் டிஆர் நிதின் விமல், ஆர்.சி.சி. மேக்னம் தலைவர் விஷால் போத்ரா ஆகியோரின் முயற்சியில் ரவுண்ட் டேபிள் 100 திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் பொஹாரா ஒருங்கிணைக்க வசதியற்ற, மாற்றுத்திறனாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் சுமார் 4.5 லட்சம் ரூபாய் செலவில் 12 மூன்று சக்கர வாகனங்கள், 28 தையல் இயந்திரங்கள் மற்றும் 6 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. இந்த பயனாளிகளை உதவிக்கரம் அமைப்பின் தலைவர் வரதக்குட்டி அடையாளம் கண்டு உதவியுள்ளார்.