மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100: கும்மிடிப்பூண்டியில் கழிவறை தொடக்க விழா!

0
92

மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100: கும்மிடிப்பூண்டியில் கழிவறை தொடக்க விழா!

மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 அமைப்பு 41ers Club 97 உடன் இணைந்து, அதன் கிராம தத்தெடுப்பு திட்டத்தின் கீழ், கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள போந்தவாக்கம் கிராமத்தில் ஐந்து கழிவறைத் தொகுதிகளைக் கட்டியுள்ளது. இந்த கழிவறைகள், மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100-ன் தலைவர் திரு.ராஜேஷ் போஹாரா, பிற உறுப்பினர்கள் மற்றும் 41ers Club 97 பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

ரவுண்ட் டேபிள் இந்தியாவின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாக ஏழைகளின் சுகாதாரம் மற்றும் கிருமிநிக்கம் உள்ளது. எனவே தான், மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 மற்றும் 41ers Club 97-ன் கிராம தத்தெடுப்பு திட்டத்தின் கீழ், ஐந்து கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இவை கிராமப்புறங்களில் உள்ள மக்களின் சுகாதாரத்தைப் பேண உதவுவதாகவும், கிராமவாசிகளுக்கு கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காத நிலையில், அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான முதல் படியை எடுத்து வைப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100-ன் தலைவர் திரு.ராஜேஷ் தெரிவித்தார்.