முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு எஸ்.என்.ஜே. டிஸ்ட்டிலிரிஸ் ஜெயமுருகன் இரண்டு கோடியே நான்கு லட்சம் வழங்கினார்!
தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் 1 லட்சம் அறிவிப்பு!!
கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாளுக்குநாள் கொரோனா பாதித்தவர்கள் அதிகரித்து வருகிறார்கள். இதனையொட்டி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள், நிறுவனங்கள் நன்கொடை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இவ்வாறு பெறப்படும் நன்கொடைகள் அனைத்தும் ஆக்சிஜன் உற்பத்தி, உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள் மற்றும் பிற மருத்துவ கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாக பயன்படுத்தப்படும் என நான் உறுதி கூறுகிறேன். இவ்வாறு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கு உண்டு என்று கூறி இருந்தார்.
அதனையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை 11-05-2021 அன்று முகாம் அலுவலகத்தில், எஸ்.என்.ஜே.டிஸ்ட்டிலிரிஸ் (Pvt ltd), நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என்.ஜெயமுருகன் சந்தித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் இரண்டு கோடியே நான்கு லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.இந்நிலையில், தயாரிப்பாளரும் திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவருமான அபிராமி ராமநாதன் 1 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.