பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசெண்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி இன்னோவேஷன், என்டர்ப்ரனர்ஷிப் அண்ட் வென்சர் டெவலெப்மெண்ட் (MBA IEV) என்ற MBA பாடத்திட்டம் அறிமுகம்

0
211
Photo Caption: L - R: Dignitaries during the Launch of MBA - Innovation, Entrepreneurship and Venture Development - Mr. Parvez Alam, CEO & Director, CIIC; Mr. Rajan Srikanth, President, Keiretsu Forum - Chennai; Dr. A. Azad. Registrar, BSACIST; Dr. A. Peer Mohamed, Vice Chancellor, BSACIST; Mr. Sivarajah Ramanathan, Founder & CEO, Nativelead; Mr, Reji Joseph, Advisor Investor; Dr. Raja Hussain, Additional Registrar, BSACIST; Mr. Chandu Nair, Start-Up Advisor; Dr. K Srinivasan, Dean, Crescent School of Business.

பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசெண்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி இன்னோவேஷன், என்டர்ப்ரனர்ஷிப் அண்ட் வென்சர் டெவலெப்மெண்ட் (MBA IEV) என்ற MBA பாடத்திட்டம் அறிமுகம்

சென்னை,  பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசெண்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி, வண்டலூர் (BSACIST), கிரசண்ட் ஸ்கூல் ஆப் பிசினஸின் (MBA) கீழ், இன்னோவேஷன், என்டர்ப்ரனர்ஷிப் அண்ட் வென்சர் டெவலெப்மெண்ட் (MBA IEV) எனும் ஒரு புதிய பாடத்திட்டத்தை MBA படிப்பில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாடத்திட்டம், கிரசண்ட் இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் கவுன்சில் (CIIC) துணையுடன் வழங்கப்படுகிறது. இது மாணவர்களின் வேட்கையை வலுவாக்கி, வியாபாரத்தில் வளர்ச்சி மற்றும் புதுமையை ஏற்படுத்தும். மேலும், மாணவர்கள் மற்றும் வணிக நிபுணர்களை தொழில் முனைவோராக தயார் செய்யவும் இது புதிய வழி காட்டுதல்களையும் வழங்குகிறது.

இந்த MBA IEV பாடத்திட்டம், இன்குபேடர்ஸ் கொண்ட இந்தியாவின் கல்வி நிறுவனங்களுக்கான AICTE – மினிஸ்ட்ரி ஆப் எஜிகேஷன் இன்னோவேஷன் செல் (MIC) மூலம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது. மேலும், இந்த பாடத்திட்டத்தின் முக்கிய நோக்கம், புதிய தலைமுறை தொழில் முனைவோரை சரியான வணிக திறன்களுடன் வளர்ப்பது மற்றும் உருவாக்குவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதாகும். இது புதுமையானவற்றை உருவாக்கும் சாமர்த்தியம் உள்ள புதிய தலைமுறை தொழில் முனைவோரை உருவாக்குவதோடு, இந்திய உயர்கல்வி முறையை ஒரு நோக்கத்துடன் அமைத்து, ஒரே சமயத்தில் முதுகலை பட்டமும் பெறும் வகையில் நிர்வகிக்கப்படுகிறது.

இந்த பாடத்திட்டத்தில் அதிமுக்கிய மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகள், ஸ்கில் சர்டிஃபிகேஷன், கேப்ஸ்டோன் பிராஜெக்ட்ஸ் மற்றும் ஆக்ஷன் லெர்னிங் செக்மெண்ட்களை உள்ளடக்கியதாகும். மேலும், புதுமையான யோசனைகள் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் மனநிலைக்கொண்ட மாணவர்களுக்கு இதுவொரு ஆக்ஷன் ஓரியெண்டெட் மற்றும் அவுட்கம்-பேஸ்டு பாடத்திட்டமாகும். முதுகலைப் பட்டம் பெறுவதற்கு கல்வி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்ட்ரபிரினர்ஷிப் மற்றும் பிராக்டீஸ் வென்சர் பாதையில் பயணிக்கவும், கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் தங்கள் சிந்தனைகளை வணிக மாதிரிகளாக மாற்ற ப்ரி-இன்குபேஷன் மற்றும் இன்குபேஷன் ஆதரவை பெறுவார்கள். மேலும், தங்கள் தயாரிப்புகளின் காப்புரிமைகளை பெறுவதன் படி வழி நடத்தப்படுகிறார்கள். அதோடு, IP வளர்ச்சியில் தகுதி வாய்ந்த நிபுணர்களின் உதவியோடு, சாத்தியமான வென்சர்களை செய்யும் விதமாக மாணவர்கள் மாற்றப்படுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட, டாக்டர் பீர் முஹம்மது, துணை வேந்தர் BSACIST, அவர்கள், “MBA IEV பாடத்திட்டம், இளம் வயதில் தொழில் முனைவோராக வரவேண்டும் என்று கனவு காண்பவர்களுக்கு மற்றும் தங்களின் சொந்த ஸ்டார்ட்-அப்பை தொடங்க விரும்பம் உள்ள மாணவர்களுக்கு மிகவும் உகந்ததாகும்” என்று கூறினார்.

“இந்தியாவின் ஸ்டார்ட்-அப் தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, பொருளாதார வளர்ச்சியுடன் ஸ்டார்ட்-அப் அமைப்புகளை உருவாக்குவதில் இந்தியா மூன்றாம் மிகப் பெரிய நாடாக திகழ்கிறது. தவிர இந்த பாடத்திட்டம் மாறுபட்ட ஸ்டார்ட்-அப்களை தொடங்க உருவாக்கப்பட்டது”, என டாக்டர் எ. ஆசாத், BSACISTJ¡யின் பதிவாளார் (ரிஜிஸ்ட்ரார்) தெரிவிக்கிறார். “நாங்கள் வழங்கும் ‘மணி, மெண்டர் அண்ட் மார்கெட் (MMM) என்ற நோக்கம் ஸ்டார்ட்-அப் தொடக்கதிற்கு பேருதவியாக இருப்பதோடு, MBA IEV பாடத்திட்டம் உங்கள் சொந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை உருவாக்க உதவுகிறது என்று சொல்கிறார் திரு. எம்.பர்வேஸ் ஆலம், CEO & Director, CIIC. மேலும், “உங்கள் சொந்த வியாபாரத்தை நடத்துவது என்பது உங்களின் தனித்துவம் மற்றும் சுதந்திரம் சார்ந்ததாகும். இது நிதி மற்றும் முதலீட்டிற்கான வருமானம் தொடர்பானது அல்ல. நீங்கள் எவ்வளவு துரிதமாக இதை செய்கிறீர்களோ, அத்தனை வருடங்களுக்கு உங்களை நிரூபிக்கவும் மற்றும் உங்கள் எதிர்காலத்தை திட்டமிடவும் முதலீடு செய்யலாம். MBA IEV பாடத்திட்டம் ஒரு புதிய தலைமுறைக்கான தொழில் முனைவோராக உங்களை மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டது”. என்று கூறுகிறார் டாக்டர் கே.ஸ்ரீனிவாசன், Dean – CSB.

மேலும், இந்த நிகழ்ச்சியில் திரு. சிவராஜ ராமநாதன், Founder & CEO, Nativelead, திரு.செந்து நாயர், ஸ்டார்ட்-அப் அட்வைசர், திரு. ரெஜி ஜோசப், அட்வைசர் இன்வெஸ்டர், திரு.ராஜன் ஸ்ரீகாந்த், தலைவர், Keiretsu Forum சென்னை, ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

ALSO READ:

B.S. Abdur Rahman Crescent Institute of Science and Technology Introduces MBA in Innovation, Entrepreneurship and Venture Development (MBA IEV)