பிரபல  ஆடம்பர  கிஃப்ட்  நிறுவனமான  IZZHAAR – ன் புதிய கிளை சென்னையில் வெட்டிங் வோவ்ஸ் நிறுவனர் தட்சிணாமூர்த்தி முன்னிலையில்  தொடங்கப்பட்டது

0
198
பிரபல  ஆடம்பர  கிஃப்ட்  நிறுவனமான  IZZHAAR – ன் புதிய கிளை சென்னையில் வெட்டிங் வோவ்ஸ் நிறுவனர் தட்சிணாமூர்த்தி முன்னிலையில்  தொடங்கப்பட்டது.
 
மும்பையின் ஜூஹுவில் பிரமாண்ட கிளையைத் தொடங்கி வைத்த பின்னர் தற்போது தமிழ்நாட்டில் சென்னை தியாகராயநகரில் IZZHAAR தனது பிரமாண்ட கிளையை தொடங்கி உள்ளது.
ஆடம்பர கிஃப்ட் நிறுவனமான  IZZHAAR அதன் நேர்த்தி மற்றும்  தரமான கிஃப்ட் தேர்ந்தெடுக்கும் தன்மையால் ஆடம்பட கிஃப்ட் உலகில் முக்கிய இடத்தைப் பெற்று பிரபலமாக உள்ளது.
 IZZHAAR  இல் உள்ள ஒவ்வொரு பரிசுப் பெட்டியும் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டவை. , சிறந்த கலைப்படைப்புகளுடன், மகத்துவத்தை வெளிப்படுத்துவதற்கும், காலத்தால் அழியாத அழகைப் பிரதிபலிக்கும் வகையிலும் இவை உருவாக்கப்படுகின்றன.  மிகக்குறிப்பாக ஒவ்வொரு பெட்டியும் கையால் தயாரிக்கப்பட்டு, இந்திய பாரம்பரியத்தின் வளமான மரபுகள் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச வாடிக்கையாளர்களுக்காகவும் தயாரிக்கப்படுகின்றன.
 தொடக்க விழாவில் உறையாற்றிய நிறுவனர் ருச்சிதா பன்சால், உயர்தர தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான இலக்கை  இடைவிடாமல் தொடரும் வேளையில் சென்னையில் இந்த மைல்கல்லை எட்டுவதற்கு ஆதரவளித்த வெட்டிங் வோவ்ஸ் நிறுவனர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார்.
வெட்டிங் வோவ்ஸ் நிறுவனர் தட்சிணாமூர்த்தி பேட்டியளிக்கும் போது , வளர்ந்து வரும் தொழிற்துறையாக திருமணம் சார்ந்த நிகழ்வுகள் இருப்பதால் ஏராளமான வேலைவாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார். மேலும் 40 பில்லியன் டாலர் அளவிற்கு இந்த துறை வளர்ந்துள்ளது என்றும் கூறினார்.
ஒரு சிறிய வீட்டுப்பட்டறையில் திருமண கைப்பைகள் மற்றும் உறைகளை வடிவமைப்பதில் தனது வாழ்க்கையை தொடங்கிய ருச்சிதா பன்சால் தனது தொலைநோக்குப்பார்வை மற்றும் உழைப்பின் மூலம் திருமண பரிசளிப்புத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். எந்த ஒரு பரிசு என்றாலும் அதன் ஆன்மாவை மேம்படுத்துவதில் தனித்துவம் பெற்று விளங்கும் IZZHAAR ஐ இளம் தலைமுறையினர் முதல் பாரம்பரியத்தை விரும்புபவர்கள்  வரை அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதுடன், பரிசளிப்புத்துறையில்  தொடர்ந்து புதுமைகளை செய்வதிலும் சிறந்து விளங்குகிறது.
இந்நிகழ்வில் கிரிசன், திரு. அனுபம் பன்சால், திரு லட்சுமிகாந்தன், விஜயநந்தினி ஆகியோர் கலந்து கொண்டனர்.