பாதியில் நிறுத்தப்பட்ட ஆர்.ஆர்.ஆர். தியேட்டரை சூறையாடிய ரசிகர்கள்
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் நேற்று வெளியானது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தியேட்டரில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் வாக்குவாதம் செய்து, தியேட்டரில் இருந்த கண்ணாடிகளை நொறுக்கி சேதப்படுத்தினர் மேலும் திரைமுன் அமைக்கப்பட்டிருந்த முள்வேலியையும் தகர்த்தனர். இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் ரசிகர்களை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.