பரோடா பிஎன்பி பரிபாஸ் ஸ்மால் – கேப் ஃபண்டு அறிமுகம்

0
125

பரோடா பிஎன்பி பரிபாஸ் ஸ்மால் – கேப் ஃபண்டு அறிமுகம்

ஸ்மால் – கேப் பங்குகளில் மிக அதிகமாக முதலீடு செய்யும் ஒரு திறந்தமுனை கொண்ட ஈக்விட்டி செயல்திட்டம்

முக்கிய அம்சங்கள்:

  • 2023 அக்டோபர் 9 அன்று தொடங்கும் இதற்கானNFO, 2023 அக்டோபர் 20 அன்று முடிவுக்கு வரும்
  • குறைந்த முதலீடு உள்ள ஸ்மால் கேப் நிறுவனங்களின் விரிவான அணிவரிசையிலிருந்து, நீண்டகால அடிப்படையில் முதலீட்டின் மீது ஆதாயத்தைப் பெறுவது இந்த ஃபண்டு செயல்திட்டத்தின் நோக்கமாகும்.

மும்பை, பரோடா பிஎன்பி பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்டு, குறைந்த முதலீடுள்ள ஸ்மால் கேப் நிறுவன பங்குகளில் பெருமளவு முதலீடு செய்யும் ஒரு திறந்தமுனை ஈக்விட்டி திட்டத்தை பரோடா பிஎன்பி பரிபாஸ் ஸ்மால் கேப் ஃபண்டு என்ற பெயரில் தொடங்கப்படுவதை அறிவித்திருக்கிறது.  இந்த ஃபண்டை ஷிப் சனானி (முதுநிலை நிதிய மேலாளர்) நிர்வகிப்பார்.  24 ஆண்டுகளுக்கும் கூடுதலான அனுபவத்தை கொண்டவர் இவர்.  நடுத்தர மற்றும் சிறிய மூலதனம் கொண்ட நிறுவனங்கள் தளத்தில் ஆழமான அனுபவம் இவருக்கு இருக்கிறது.  இந்த ஃபண்டு, நிஃப்டி ஸ்மால் கேப் 250 TR இன்டெக்ஸ் – க்கு எதிராக பெஞ்ச்மார்க் செய்யப்படும்.

இந்த ஸ்மால் கேப் ஃபண்டின் சிறப்பம்சங்கள் கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கும்:

  • நிகர சொத்தில் 65%-க்கும் அதிகமான தொகையை ஸ்மால் – கேப் நிறுவனங்களில் இந்த ஃபண்டு முதலீடு செய்யும்.
  • கீழிருந்து மேல்நோக்கி பங்குகளை தேர்வு செய்யும் அணுகுமுறையை இந்த ஃபண்டு பின்பற்றும். வலுவான ஆதாரங்கள், தரமான பிசினஸ் மாதிரிகள் மற்றும் உறுதியான, திறன்மிக்க மேலாண்மை குழுக்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும் நிறுவனங்களை தேர்வு செய்வது மீது இதன் முக்கிய கவனம் இருக்கும்.
  • இந்த ஃபண்டு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் மீது முதலீடு செய்யும்
  • எதிர்காலத்தில் முன்னணி நிறுவனங்களாக வளர்ச்சியடையும் சாத்தியமிருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வதன் வழியாக, முதலீட்டாளர்களுக்கு வருவாயை பெருக்கும் குறிக்கோளுடன் இது செயல்படும்.

“இந்திய பொருளாதாரத்தில் பெரிய கட்டமைப்பு சார்ந்த வளர்ச்சி வாய்ப்பிலிருந்து ஆதாயமடையும் குறிக்கோளைக் கொண்டிருக்கும் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு ஒரு பொருத்தமான விருப்பத்தேர்வாக பரோடா பிஎன்பி பரிபாஸ் ஸ்மால் – கேப் ஃபண்டு இருக்கும்.  ஸ்மால் – கேப் பிரிவு, விரிவுபட்ட பல்வேறு துறைகளிலும் முதலீட்டிற்கான விருப்பத்தேர்வுகளை வழங்குகிறது மற்றும் ஒப்பீட்டளவில் அதிக வளர்ச்சி விகிதங்கள் கொண்டதாக இருக்கிறது.  கடந்த 10 ஆண்டுகள் காலஅளவில் நிஃப்டி ஸ்மால் கேப் ட்ரை இன்டெக்ஸ், பிரமிக்கத்தக்க 21% CAGR – ஐ வழங்கியிருக்கிறது.  BMV (பிசினஸ், மேலாண்மை மற்றும் மதிப்பீடு) ஆகியவை மீது சிறப்பு கவனம் செலுத்தும் எமது ஒழுங்கு கட்டுப்பாடு மிக்க முதலீட்டு செய்முறை, வலுவான இடர் மேலாண்மை கட்டமைப்பு மற்றும் அனுபவம் மிக்க முதலீட்டு நிபுணர்கள் அடங்கிய குழு ஆகியவை, எமது முதலீட்டாளர்களுக்கு சிறப்பான ஆதாயத்தை தரும் திறன்நிலையில் எங்களை நிலைநிறுத்துகிறது என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று பரோடா பிஎன்பி பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்டு -ன் செயல் தலைவர் திரு. சுரேஷ் சோனி கூறினார்.

இந்திய பங்குச் சந்தை வழியாக நீண்டகால அடிப்படையில் சிறப்பான சொத்து உருவாக்கத்தை மேற்கொள்ள விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இந்த ஃபண்டு திட்டம் பொருத்தமானது.  ஸ்மால் கேப் பங்குகள் வழக்கமாகவே மிக அதிக வளர்ச்சி சாத்தியத்திறனை கொண்டவை.  எனினும், குறுகிய காலஅளவில் அதிக ஏற்ற இறக்கத்தை வெளிப்படுத்துவதாக அவைகள் இருக்கின்றன; ஆகவே, மூன்று ஆண்டுகளுக்கும் அதிகமான காலஅளவிற்கு முதலீடு செய்யப்படுவதை முதலீட்டாளர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.

2023 அக்டோபர் 06-ம் தேதியன்று, தொடங்கும் இந்த NFO, 2023 அக்டோபர் 20 அன்று முடிவுக்கு வரும்.  பரோடா பிஎன்பி பரிபாஸ் ஸ்மால் – கேப் ஃபண்டு – ரெகுலர் திட்டம் மற்றும் பரோடா பிஎன்பி பரிபாஸ் ஸ்மால் – கேப் ஃபண்டு நேரடி திட்டம் என்ற இரு விருப்பத்தேர்வுகளை இது வழங்குகிறது.  ஒவ்வொரு திட்டமும் வளர்ச்சி விருப்பத்தேர்வையும் மற்றும் வருவாய் வினியோகம்  & மூலதனத்தை திரும்பப் பெறுதல் (IDCW) விருப்பத்தேர்வையும் வழங்குகிறது.  IDCW விருப்பத்தேர்வு கீழ்வரும் இருவாய்ப்புகளை பெறுகிறது: வருவாய் வினியோகத்தின் பேஅவுட் & மூலதனத்தை திரும்பப்பெறும் வாய்ப்பு மற்றும் வருவாய் வினியோகத்தின் மறுமுதலீடு  & மூலதனத்தை திரும்பப்பெறும் வாய்ப்பு.