நிதி ஆண்டு 2022-ல் ரூ.1000 கோடி மனைகள் விற்பனை செய்ய ஜி ஸ்கொயர் நிறுவனம் இலக்கு

0
214

நிதி ஆண்டு 2022-ல் ரூ.1000 கோடி மனைகள் விற்பனை செய்ய ஜி ஸ்கொயர் நிறுவனம் இலக்கு

 • நிதி ஆண்டு இறுதிக்குள் 15க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்த திட்டம்
 • சிறந்த வீட்டு மனைகளை வாங்க நினைப்பவர்களுக்காக பிளாட் பெர்ஃபெக்ஷன்என்ற கருத்தை கொண்டு வருகிறது.
 • ஈசிஆர் சாலைக்கு மிக அருகாமையில் நீலாங்கரையில் தனது புதிய ‘ஜி ஸ்கொயர் பீச்வாக்’ மனைகள் திட்டத்தை துவக்கியது

சென்னை, செப். 8- 2021: தென்னிந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனம் பல்வேறு வீட்டு மனை திட்டங்களை சென்னை மற்றும் கோவையில் அறிமுகம் செய்து வெற்றிகரமாக அவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்நிறுவனத்தின் ‘ஜி  ஸ்கொயர் பீச்வாக்’ வீட்டு மனைகள் திட்டம் சென்னை நகர எல்லைக்குள் நீலாங்கரையில் ஈசிஆர் சாலைக்கு மிக அருகில் துவக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு வீட்டு மனை திட்டங்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்து வருவதன்மூலம் 2022-ம் நிதி ஆண்டின் இறுதிக்குள் சென்னை மற்றும் கோவையில் 15க்கும் மேற்பட்ட திட்டங்களை அறிமுகம் செய்து 1000 கோடிக்கு வர்த்தகம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

 இது குறித்து ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என். ஈஸ்வர் கூறுகையில், இந்த நிதியாண்டில் எங்களின் 7வது திட்டமான ‘ஜி  ஸ்கொயர் பீச்வாக்’ வீட்டு மனை திட்டத்தை அறிமுகம் செய்வதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இரு இடங்களிலும் எங்களின் திட்டங்களுக்கு கிடைத்த வரவேற்பால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம். இதற்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட எங்களின் அனைத்து திட்டங்களும் நல்ல வரவேற்பை பெற்றதோடு 20 நாட்களில் அனைத்து மனைகளும் விற்பனையாகியது. சிறந்த விலையில் பிரதான சாலைகளுக்கு மிக அருகில் உயர்தரமிக்க மனைகளை மட்டுமே விற்பனை செய்வதில் எங்கள் நிறுவனம் நிபுணத்துவம் பெற்றது. இது எங்களின் தனித்துவமிக்க செயல்பாடாகும். தமிழ்நாட்டில் முதல் மற்றும் இரண்டாவது பெரிய நகரங்களில் ‘பர்பெக்ட் பிளாட்’ கலாச்சாரத்தை கொண்டு வந்ததில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இந்நிறுவனம் சமீபத்தில் ஈசிஆர் பகுதியில் 160 கோடி ரூபாய் சொத்துக்களை வாங்கியது உள்ளது. மதிப்புமிக்க ஜி ஸ்கொயர் மனைகளை வாங்குவதால் கிடைக்கும் பலன்கள்? அது குறித்த விவரம் வருமாறு:-

 • சரியான நிலம்: அனைத்து ஜி ஸ்கொயர் மனைகளும் நன்கு மேம்படுத்தப்பட்டுள்ளன.
 • சரியான அளவு: இதன் அனைத்து மனைகளும் சரியான அளவுகளைக் கொண்டுள்ளன. (ஈசிஆரில் 1 கிரவுண்டில் மனைகளை வழங்கும் ஒரே நிறுவனம் ஜி ஸ்கொயர்)
 • சரியான விலை: இந்த மனைகள் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
 • பொருத்தமான அமைவிடங்கள்: இந்த மனைகள் அனைத்தும் மிக முக்கியமான இடங்களில் அமைந்துள்ளன.
 • சரியான சட்ட ஆவணம்: அனைத்து ஜி ஸ்கொயர் மனைகளும் முறையான ஒப்புதல்களுடன் விற்பனை செய்யப்படுகின்றன.

ரியல் எஸ்டேட் சந்தை தற்போது தொடர்ந்து நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. முதல் காலாண்டு ஊரடங்கிற்கு பிறகு தற்போது இதன் தேவை அதிகரித்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதிலிருந்து மனை வாங்குவது வரை வாடிக்கையாளர்களின் செயல்பாடுகளில் ஒரு தெளிவான மாற்றம் ஏற்பட்டுள்ளது. கோவிட்டுக்கு பிந்தைய நிலையில் முற்றிலும் தனித்துவமிக்க இடங்களுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். தற்போதைய மனைகள் விற்பனையானது 5 சதவீதத்திலிருந்து அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 15 சதவீதமாக உயரும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் ஈஸ்வர் தெரிவித்தார்.

 ஒரு நிலத்தை வாங்குவது முதல் அதில் வீடு கட்டி குடியேறுவது வரையிலான பயணம் என்பது எவ்வளவு கடினமானது என்பதை ஜி ஸ்கொயர் புரிந்து கொண்டு மனைகள் வாங்குபவர்களின் வாழ்க்கையை எளிதாக்க, இந்நிறுவனம் பின்வரும் ஆதரவை வழங்குகிறது.

 • வில்லா மற்றும் முன்புற வடிவமைப்பிற்கான ஆலோசனை
 • வாஸ்துடன் கூடிய வடிவமைப்பு
 • உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வில்லாக்களை அமைத்து தருதல்
 • வில்லாக்கள் கட்டுமான அங்கீகாரத்திற்கு உதவுதல்
 • கட்டுமானப் பொருட்கள் கொள்முதல்
 • குறைந்த விலையில் தரமான வில்லாக்களை கட்டித் தருதல்
 • பசுமை புல்வெளிகளை அமைத்துத் தருதல்
 • வில்லாக்களின் உட்புற வடிவமைப்பு
 • வீட்டின் உள் அலங்காரத்திற்கான பொருட்களை சிறந்த விலையில் வழங்குதல்
 • கிரஹப் பிரவேசம் செய்வதற்கு தேவையான உதவிகளை வழங்குதல்

ஜி ஸ்கொயர் பீச்வாக்

ஜி ஸ்கொயர் பீச்வாக் வீட்டு மனைகள் நீலாங்கரையில் ஈசிஆர் சாலை அருகே கடற்கரைக்கு நடந்து செல்லக்கூடிய தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு 2,422 சதுர அடி முதல் 3,579 சதுர அடி வரை மனைகள் விற்பனைக்கு உள்ளன. இங்கு 5.4 ஏக்கரில் 40 உயர்மதிப்புக்க வில்லா மனைகள் உள்ளன. நடந்து செல்லும் தூரத்தில் கடற்கரையுடன் அழகுபடுத்தப்பட்ட நிலப்பரப்புகள் மற்றும் அழகிய சூழல்களுடன் ஒரு பசுமையான, அமைதியான சூழ்நிலையில் உள்ள இந்த
ஜி ஸ்கொயர் பீச்வாக் ஒரு தனித்துவமான கனவு இல்லத்தை உருவாக்க உங்களுக்கான சுதந்திரத்தை வழங்குகிறது. இங்கு நீங்கள் உடனடியாக வீடு கட்டி குடியேறலாம். இந்த வீட்டு மனைகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் இங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கு உட்புற சாலைகள், தெரு விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மனைகள் 5 ஆண்டுகளுக்கு இலவசமாக பராமரிக்கப்படும். மிக முக்கியமாக எந்தவிதமான வில்லங்கங்களும் இல்லாத முறையான ஆவணங்கள் உள்ளது.

 ஜி ஸ்கொயர் பீச்வாக் வீட்டு மனைகள் அமைந்துள்ள இடத்தை சுற்றி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவை உள்ளன. ஷாப்பிங் மால்கள், மருத்துவமனைகள் மற்றும் உணவகங்கள் இந்த மனைகளுக்கு அருகாமையில் இருப்பதால், இந்த இடம் உண்மையிலேயே உங்களுக்கு வசதியான வாழ்க்கையை வழங்கும். இந்த இடம் திருவான்மியூரில் இருந்து 5 நிமிட தூரத்திலும் கேசுவரினா டிரைவில் இருந்து 2 நிமிட தூரத்திலும் அமைந்துள்ளது. ஆனால் அந்த பகுதியில் உள்ள இடங்களின் விலையைக் காட்டிலும் இதன் விலை பாதியாகும். இங்கிருந்து சென்னையின் எந்த பகுதிக்கும் செல்ல போக்குவரத்து வசதிகள் உள்ளது.

துவக்க விழாவிற்கு முந்தைய சலுகையாக ஒரு சதுர அடி 9,583 ரூபாய்க்கு மனைகள் விலை 2.30 கோடி ரூபாய் முதல் துவங்குகிறது.

G SQUARE Beachwalk RERA no.: TN/29/Layout/0308/2021 | www.rera.tn.gov.in

ALSO READ:

G SQUARE TARGETS INR 1000-CR SALES IN FY22