தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக ஹோம் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை சென்னையில் அறிமுகப்படுத்தியது, டேக் டெவலப்பர்ஸ்!

0
159

தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக ஹோம் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை சென்னையில் அறிமுகப்படுத்தியது, டேக் டெவலப்பர்ஸ்!

·       தரை முதல் தளம் வரை அனைத்தையும் குறுக்குவெட்டில் காண்பிக்கும் இந்த சென்டரில்இல்லங்களை உருவாக்கப்போகும் பொருட்களைப் பார்த்தும்தொட்டும் உணர முடியும்!

·       டேக் டெவலப்பர்ஸ் உருவாக்கிவரும் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்களின் 3டி மாடலையும், மாடல் வீடுகளையும் இந்த மையங்கள் கொண்டுள்ளன! 

சென்னை, 26 அக். 2023

 சென்னையின் மிகவும் நம்பகமான வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனங்களில் ஒன்றாகிய டேக் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் (DAC Developers Pvt. Ltd.) தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக மேடவாக்கம் மற்றும் தாம்பரத்தில் ஹோம் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களைத் (Home Experience Centres) திறந்துள்ளதுதரை முதல் தளம் வரை அனைத்தையும் குறுக்குவெட்டில் காண்பிக்கும் இந்த நேரடி வீட்டு அனுபவ மையங்களில்தங்கள் கனவு இல்லங்களை உருவாக்கப்போகும் பொருட்கள் எவை, எவை என்று வீடு வாங்குபவர்கள் இந்த மையங்களில் நேரடியாகப் பார்த்தும்தொட்டும் உணர முடியும்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான மாண்புமிகு விராமசுப்ரமணியன், 1050 சதுர அடி அனுபவ மையத்தை மேடவாக்கத்திலும், 800 சதுர அடி மையத்தை தாம்பரத்திலும் திறந்து வைத்தார்அத்துடன் டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் சார்பில் புதிதாக மேடவாக்கத்தில் அமையவுள்ள டேக் மெடாலியன் (DAC Medallion) மற்றும் தாம்பரத்தில் அமையவுள்ள டேக் மார்ஷல் (DAC Marshall) ஆகிய இரண்டு அடுக்குமாடி வீட்டுக் குடியிருப்பு திட்டங்களும் இந்நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்பட்டன.

டேக் மெடாலியன் என்பது மேடவாக்கத்தில் 125 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட குடியிருப்பு வளாகம் ஆகும்தாம்பரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள டேக் மார்ஷல்114 யூனிட்களை பல்வேறு அளவுகளில் கொண்டுள்ளது.

ஹோம் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களைப் பற்றி டேக் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெடின் மேலாண் இயக்குநர் திருஎஸ்சதீஷ் குமார் கூறுகையில், “பொறியியல் சார்ந்த புதுமை (ENGINEERING)வாடிக்கையாளர் விழிப்புணர்வு (EDUCATION) மற்றும் வாடிக்கையாளர் நேரடி அனுபவம் (EXPERIENCE) ஆகிய மூன்றும்தான் எங்களது முக்கியக் கொள்கைகளாகும். புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நேரடி வீட்டு அனுபவ மையங்கள் இந்தக் கொள்கைகளை உள்ளடக்கியவைதென்னிந்தியாவிலேயே முதன்முறையாக இவற்றை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்எங்கள் நேரடி வீட்டு அனுபவ மையங்களின் அறிமுகமானது வெளிப்படைத்தன்மையின் புதிய அம்சத்தை காட்சிப்படுத்துகிறதுவாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வலுப்படுத்தவும் செய்கிறது.

வீடு வாங்குபவர்கள் எப்போதும் விலையை ஒப்பிடுவதுஅமைவிடத்தைத் தேர்ந்தெடுப்பதுமாதிரி வீடுகளைப் பார்வையிடுவது ஆகியவற்றையே இது வரை மேற்கொண்டு வந்தனர்கட்டிடம் கட்டப் பயன்படுத்தப்படும் பொருட்கள்வீட்டின் மற்ற கட்டுமானக் கூறுகள் போன்றவற்றைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்ததில்லைடெவலப்பர்கள் கொடுக்கும் உத்தரவாதங்களை மட்டுமே அவர்கள் நம்ப வேண்டியிருந்ததுஅதற்கு மாறாக எங்கள் நேரடி வீட்டு அனுபவ மையங்கள் அவர்களின் கனவு இல்லங்களில் உள்ள ஒவ்வொரு கூறு மற்றும் பொருளின் தரம்விவரக்குறிப்பு பற்றிய முதல் தகவலை அவர்களுக்கு வழங்குகின்றனஎனவேஅவர்கள் இனிமேல் கண்மூடித்தனமாகஅறியாமையோடு வீடுகளை வாங்க வேண்டிய அவசியமில்லைமுடிவெடுப்பதற்கு முன் நேரடியாகப் பரிசோதித்து, தொட்டு அனுபவித்துப் பார்த்து இனி வாங்க முடியும்” என்றார்.

நேரடி வீட்டு அனுபவ மையங்கள் பதினோரு பிரிவுகளைக் கொண்டுள்ளன. இங்கு பார்வையாளர்கள் பல்வேறு அம்சங்களின் குறுக்குவெட்டுத் தோற்றம்இடைச்சுவர்கள்நெடுவரிசை தூண்கள்உத்தரத் தூண்கள்கதவுகள்ஜன்னல்கள்தரைகள்சுவிட்ச் பாக்ஸ்கள்பிளம்பிங் ஷாஃப்ட்கள்கைப் பிடிகள்மாடங்களின் தரை போன்ற வெளிப்புற கூறுகள் உட்பட பல்வேறு உறுப்புகளின் குறுக்குவெட்டுகளை நேரடியாக ஆய்வு செய்யலாம்