தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN)-ஐரோப்பிய ஒன்றிய மூத்த அதிகாரிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது

0
236

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN)-ஐரோப்பிய ஒன்றிய மூத்த அதிகாரிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது

சென்னை கிண்டியில் உள்ள ரமடாபிளாஸா விடுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மியான்மர் தூதர் மியொ கியாவ் ஆங், சிங்கப்பூர் தூதர் எட்கர் பாங், மலேசியா தூதர் சரவணகுமார், மியான்மர் கவுரவ தூதர் ரங்கநாதன், ஆசியான் வர்த்தக ஆணையர் திரு ஹர்விந்தர் பால் சிங்  மற்றும் இந்தோனேசியா தூதர் , தாய்லாந்து நாடுகளின் பிரதிநிதிகளும் தலைமை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் உலகின் முக்கிய இரு பிராந்தியங்களான  தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் இந்தியாவின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன. உலகின் இருபிராந்தியங்களிலும் வேகமாக மாறிவரும் அரசியல் நிலப்பரப்பு மற்றும் வளர்ந்து வரும் சவால்கள் மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கான வழிமுறையான உறுதிப்பாட்டை இக்கூட்டம் தெளிவுபடுத்தியது சர்வதேச ஒழுங்கு அடிப்படை விதிகளுக்கு ஏற்ப பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் வளம் மற்றும் பலதரப்புவாதத்தை ஊக்குவித்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஆட்கடத்தல் மற்றும் அகதிகள், கடல்சார் பாதுகாப்பு,நாடுகடந்த குற்றங்கள், பயங்கரவாதம் மற்றும் வன்முறை, வறுமை, நிலையான வளர்ச்சி மற்றும் பருவனிலை மாற்றம் குறித்தும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்ட இக்கூட்டத்தில்  ஆசியான்-இந்தியா பேச்சுவார்த்தை உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கான அரசியல் உத்வேகமும் உறுதி செய்யப்பட்டது.