தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முதல் அரையாண்டு நிதிநிலை அறிக்கை 2022 – 2023 (H1)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, 1921ம் ஆண்டு துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியம் மிக்க பழமையான தனியார் துறை வங்கியாகும். வங்கியானது தனது வரலாற்றில் தொடர்ந்து 100 வருட காலத்திற்கு மேலாக லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
வங்கியானது 509 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. நாட்டில் உள்ள 16 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் தனது விரிவாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு ஏறத்தாழ 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது.
27.10.2022 அன்று சென்னையில் நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில் 2022 – 23 முதல் அரையாண்டின் நிதிநிலை தணிக்கை முடிவுகள் இறுதி செய்யப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. S. கிருஷ்ணன் அவர்கள் தணிக்கை செய்யப்பட்ட முதல் அரையாண்டு நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டார். பொது மேலாளர்கள், தலைமை நிதி அதிகாரி மற்றும் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.
Bank’s Results at a glance (₹ in Crores)
Parameters | September 2021 (HY) | September 2022 (HY) | Growth YoY |
Total Deposits (₹) | 41,022.21 | 43,136.65 | 5.15% |
Total Advances (₹) | 31,597.66 | 34,876.53 | 10.38% |
CASA (₹) | 11,439.32 | 13,192.64 | 15.33% |
Operating Profit (₹) | 688.94 | 763.63 | 10.84% |
Net Profit (₹) | 392.08 | 496.51 | 26.63% |
Net Interest Income | 874.75 | 1032.57 | 18.04% |
Gross NPA (₹) | 1045.26 | 593.34 | -43.25% |
Gross NPA (%) | 3.31 | 1.70 | -48.64% |
Net NPA (₹) | 564.95 | 295.97 | -47.61% |
Net NPA (%) | 1.79 | 0.86 | -51.96% |
Provision Coverage Ratio | 80.50 | 88.58 | 10.04% |
ROA | 1.63 | 1.93 | 18.40% |
ROE | 16.53 | 16.84 | 1.88% |
2022 – 23 முதல் அரைநிதியாண்டில் வங்கியின் செயல்பாட்டினை விளக்கும் சிறப்பம்சங்கள்
2022 – 23 முதல் அரை நிதியாண்டில் வங்கியானது பல்வேறு குறிப்பிடத்தக்க சாதனைகளை புரிந்துள்ளது. இதற்க்கு வங்கியின் திட்டமிட்ட நேர்த்தியான கொள்கைகளும், இயக்குனர் குழு தரும் உற்சாகம், உயர் நிர்வாகக் குழுவின் சீரிய திட்டம் மற்றும் அதனை செயல்படுத்தும் அணுகுமுறை, வங்கி ஊழியர்களின் அயராத உழைப்பும் மற்றும் இவற்றிற்கு எல்லாம் மேலாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தரும் பொன்னான ஆதரவு ஆகியவை தான் இச்சாதனைகளை எட்டிட உதவியது என்றால் அது மிகையாகாது.
2022 – 23 முதல் அரை நிதியாண்டில் வங்கியானது தனது மொத்த வணிகத்தில் 7.43% வளர்ச்சி அடைந்து `78,013.12 கோடியை எட்டியுள்ளது
வைப்புத் தொகை `43,163.65 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது. கடன்களை பொறுத்தமட்டில் `34,876.53 கோடி என்ற நிலையில் உள்ளது
நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கு தொகை (CASA) 15.32% வளர்ச்சி அடைந்து `13,192.64 கோடியாக உள்ளது
கடன் வழங்கல் துறை
வங்கியானது விவசாயம் குறு, சிறு தொழில் கடன், வியாபாரக் கடன், வீட்டுக் கடன் மற்றும் கல்விக்கடன் துறைகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
2022 – 23 முதல் அரை நிதியாண்டில் முன்னூரிமைத் துறைகளுக்கு (Priority Sector) வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் `22,878.78 கோடியில் இருந்து `25,079.09 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 9.61% ஆகும். முன்னுரிமைத் துறைகளுக்கான கடன்கள் பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கான 40% என்ற இலக்கை விட அதிகமாக 66.64% என்ற விகிதத்தில் உள்ளது
விவசாயத் துறைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள் `10,386.43 கோடியாக உள்ளது. விவசாய துறைக்கு, ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவு 18% மட்டுமே ஆகும். இத்துறைக்கு வங்கி மொத்த கடன்களில் 29.78% கடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
MSME துறைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள் `11,662.74 கோடியில் இருந்து `12,689.76 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 8.81% ஆக உள்ளது.
Y-O-Y செயல்திறன்
வைப்புத்தொகை `41,022.61 கோடியில் இருந்து `43,136.65 கோடியாக உயர்ந்துள்ளது
CASA `11,439.32 கோடியில் இருந்து `13,192.64 கோடியாக உயர்ந்துள்ளது. இது 15.33% வளர்ச்சியை எட்டியுள்ளது
கடன் தொகை `31,597.66 கோடியில் இருந்து `34,876.53 கோடியாக உயர்ந்துள்ளது. இது 10.38% வளர்ச்சியை எட்டியுள்ளது
செயல்பாட்டு லாபம் (Operating Profit) `763.36 கோடியாக உள்ளது (முந்தைய அரையாண்டு `688.94 கோடி)
நிகர லாபம் `496.51 கோடியாக உள்ளது (முந்தைய அரையாண்டு `392.08 கோடி) 26.63% வளர்ச்சியடைந்துள்ளது
நிகர வட்டி வருவாய் (NII) `1,032.57 கோடியாக உள்ளது (முந்தைய அரையாண்டு `874.75 கோடி) 18.04% வளர்ச்சியடைந்துள்ளது
NIM – 4.47% (முந்தைய அரையாண்டு – 4.04%)
ROA – 1.93% மற்றும் ROE – 16.84% (முந்தைய அரையாண்டு – 1.63% மற்றும் 16.53%)
நிகரமதிப்பு (Networth) `6,461.20 கோடியாக உயர்ந்துள்ளது (முந்தைய அரையாண்டு `4,905.87 கோடி) இது 1,555.33 கோடி உயர்ந்து 31.70% வளர்ச்சியை எட்டியுள்ளது
மொத்த வாராக்கடன் மொத்த கடனுக்கு 1.70% ஆகவும், நிகர வாராக்கடன் 0.86% ஆக உள்ளது (முந்தைய அரையாண்டு – 3.31% மற்றும் 1.79%)
PCR (Provision Coverage Ratio) 88.58% ஆக உள்ளது (முந்தைய அரைநிதி யாண்டு – 80.50%)
2022 – 23 முதல் அரைநிதியாண்டில் மூலதன பெருக்கம்
முதல் அரைநிதியாண்டில் பொது வெளியீட்டின் மூலம் (IPO) `831.68 கோடி திரட்டியுள்ளது. இது மூலதனப் பெருக்கத்திற்கு பங்களித்துள்ளது. பங்குகள் BSE மற்றும் NSEல் பட்டியலிடப்பட்டதால் RBI வங்கி கிளை விரிவாக்கத்திற்குரிய கட்டுப்பாட்டினை 21.10.2022 அன்று விலக்கி கொண்டது
விரிவாக்கம்
புதியதாக 4 ஏடிஎம் மையங்கள் திறக்கப்பட்டுள்ளது, வங்கியின் மொத்த ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கை 1,145 ஆகும்
வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிதாக 9 Cash Recycler Machines திறக்கப்பட்டுள்ளது. வங்கி கிளைகள் / ATM மையத்தில் நிறுவப்பட்டுள்ளது, வங்கியின் மொத்த cash Recycler Machines எண்ணிக்கை 291 ஆகும்
2022 – 23 முதல் அரைநிதியாண்டில் எடுக்கப்பட்ட புதிய முயற்சிகள்
Finacle 10X Migration அதிக செயல்பட்டு திறன் மற்றும் வணிக வாய்ப்புகளை வழங்கியுள்ளது
வங்கி கிளைகள் விரிவாக்கம் சாத்தியமான இடங்களில் அதிக அளவில் விரைவாக நிறுவப்பட உள்ளது
டிஜிட்டல் முயற்சிகள் மற்றும் டிஜிட்டல் பேங்கிங் யூனிட் (DBU) வணிகம் பன்மடங்கு வளர புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது
புதிய கணக்கு விரைவாக துவக்கத்திற்குரிய அனுபவம் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதற்கு VKYC பிரபலப்படுத்தப்படுகிறது
Centralised Account opening அறிமுகப்படுத்தப்பட்டதின் மூலம் புதிய கணக்கு துவக்கும் செயல்முறைக்குரிய காலம் குறைக்கப்பட்டுள்ளது இது புதிய வாடிக்கையாளர்களுக்கு துரித அனுபவத்தை வழங்குகிறது
FISDOM புரிந்துணர்வு ஒப்பந்தம் வாடிக்கையாளர்களுக்கு Mutual Fund Investmentல் பாதுகாப்பான மற்றும் வசதியான வழிமுறைகளை வழங்குகிறது
மிகவும் திறம்பட்ட மற்றும் வசதியான E-tax Payment சேவையை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது
RBI வங்கி கிளை விரிவாக்கத்திற்குரிய கட்டுப்பாடு நீக்கப்பட்டதின் மூலமாக, அரசு நிறுவன வணிகத் துவக்கத்திற்குரிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது
புதிய வகை கடன் அட்டைகள் (Credit Card) சேமிப்பு / நடப்புக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் சுழற்சி முறை கடன் (Revolving Credit) பெற இயலும்.
QR குறியீடு வசதி, வெகுமதி, Loyalty programme டெபிட் / கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு Fintech Tie up மூலமாக வழங்கப்பட உள்ளது
புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் புதிய ஆயுள் காப்பீடு, பொதுக் காப்பீடுகளை பாதுகாப்பான, வசதியான காப்பீடு சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது
புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் புதிய DP சேவை Digital on boarding வழியாக பங்குச்சந்தை பரிவர்த்தனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.