ஜி.ஆர்.டி ஹோட்டல் தலைசிறந்த சமையல் கலைஞரான  செஃப் தாமுவுடன் இணைந்து  ‘தலைவன் விருந்து’ எனும் சமையல் திருவிழாவை தொடங்கியுள்ளது

0
207

ஜி.ஆர்.டி ஹோட்டல் தலைசிறந்த சமையல் கலைஞரான  செஃப் தாமுவுடன் இணைந்து  ‘தலைவன் விருந்து’ எனும் சமையல் திருவிழாவை தொடங்கியுள்ளது

ஜூன் 25 ஆம் தேதி முதல் ஜூலை 9 ஆம் தேதி வரை 15 நாட்கள் நடைபெறும் இந்த உணவு திருவிழா சென்னை தி.நகரில் உள்ள கிராண்ட் பை ஜி.ஆர்.டி. ஹோட்டல்ஸ் பஜாரில் நடைபெறும்.
பஜாரில் நடைபெறும் ‘தலைவன் விருந்து’ ஒரு அற்புதமான சமையல் அனுபவத்தையும், தென்னிந்திய சமையல்களின் அற்புதமான சுவையையும் வழங்க செஃப் தாமுவால்  வடிவமைக்கப்பட்டுள்ளது.
தாமு ஸ்டைல் மீன் குழம்பு, சிக்கன் சிந்தாமணி, ஆத்தங்குடி காரி சாப்ஸ், மா இஞ்சி பருப்பு உருண்டை குழம்பு, காலன் கரு மிளகு வருவல், வெற்றிலை ரசம், கரும்பு சாறு பாயாசம் உள்ளிட்டவை நாவுகளில் நாட்டியமாடும் சுவையை வழங்கும் என்பது உறுதி.  இந்த சுவைகளின் திருவிழா, செஃப் தாமுவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சமையல் திறமைகளை ருசிக்கும்  வாய்ப்பை வழங்குகிறது.  இவை அனைத்தும் பஜாரில் டின்னர் பஃபேவில் வழங்கப்பட உள்ளன.  .
இந்த உணவு திருவிழாவின் ஒரு தனித்துவமான அம்சம் செஃப்ஸ் தியேட்டர் ஆகும். இது விருந்தினர்களுக்கு செஃப் தாமுவின் சமையல் திறனை நேரில் காணும் தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. பங்கேற்கும் விருந்தினர்கள்,  சமையல் செயல் விளக்கங்களோடு, கேள்வி பதில் அமர்வுகள் மற்றும் புகழ்பெற்ற சமையல் களைஞர்களுடன் சமையல் பாடங்களில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெறுவார்கள்.
தலைவன் விருந்து தொடக்கத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில்  விஜய் டிவி பிரபலங்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் தலைசிறந்த சமையல் கலைஞர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற புகழ்பெற்ற சமையல் கலைஞர் செஃப் சீதாராம்,  செஃப் தாமு மற்றும் ஜிஆர்டி ஹோட்டல் & ரிசார்ட் இணைந்து நடத்தும் இந்த திருவிழா மிகப்பெரிய கவுரவம் என்றார்.  அவரது சமையல் திறன் மற்றும் பஜாரின் பிரமாண்ட அமைப்பு விருந்தினர்களுக்கு நேரடியான சுவையின் மந்திரத்தை உறுதி அளிக்கும் என்றும் தெரிவித்த அவர், எதிர்காலத்திலும் செஃப் தாமுவுடன் இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கிறோம் என்றார்.
பின்னர் பேசிய செஃப் தாமு, தலைவன் விருந்து நடைபெறும் 15 நாட்களும் நாம் மறந்து போன மற்றும் மறைந்து போன பாரம்பரிய உணவுகளை வழங்க இருப்பதாக தெரிவித்தார் மேலும் தென் தமிழகத்தின் மிகச் சிறந்த இனிப்பு வகைகளான தேன் மிட்டாய், எள்ளுருண்டை, பர்பி உள்ளிட்ட வையும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாள்தோறும் 40 வகையான உணவுகள் பரிமாறப்படும் என்றும் ஒவ்வொரு நாளும் இந்த மெனு மாறிக்கொண்டே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.