ஜிடோ சென்னை கிரிக்கெட் லீக் போட்டிகளுக்கான வீரர்களை ஏலம் விடும் நிகழ்ச்சி

0
191

ஜிடோ சென்னை கிரிக்கெட் லீக் போட்டிகளுக்கான வீரர்களை ஏலம் விடும் நிகழ்ச்சி ரமேஷ் துகர், நேஹல் ஷா, ஜிதேந்த்ர ஜோஷி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

ஜெயின் சமுதாயத்தினருக்க்கான 3 ஆம் ஆண்டு ஜிடோ சென்னை கிரிக்கெட் லீக் போட்டிகள் ஜனவரி 29 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் விவரங்களுடன் ஏலம் விடும் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள தாஜ் கிளப்ஹவுஸில் நடைபெற்றது.

இதில் கண்கவர் ஃபேஷன் ஷோ உடன் அணிகளுக்கான ஜெர்சி மற்றும் வெற்றிக்கோப்பை வெளியிடப்பட்டது.

அதனுடன் கிரிக்கெட் வீரர்களுக்கான ஏலத்தில் 256 கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் 16 அணிகள், முப்பத்தோரு 20 -20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பங்கேற்க உள்ளன. இந்த கிரிக்கெட் போட்டி ஜனவரி 29 ஆம் தேதி முதல் 5 வாரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். 24 லீக் போட்டிகள், 4 காலிறுதி,2 அரையிறுதி போட்டிகள் பங்கேற்று வெற்றிபெறும் 2 அணிகள் பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இந்த போட்டிகள் ஓ.எம்.ஆரில் உள்ள டி.பி.ஜெயின் கல்லூரியிலும், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் ராயப்பேட்டையில் உள்ள அமீர்மஹாலிலும் நடைபெறும் என ஜிடோ சென்னை தலைவர் ரமேஷ் துகர், தலைமை செயலாளர் நேஹல் ஷா மற்றும் ஜிடோ சென்னை கிரிக்கெட் லீக் தலைவர் ஜிதேந்த்ர ஜோஷி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்த போட்டியை நோர்வூட் மற்றும் j j ஜூவல்லரி மார்ட் ஸ்பான்சர் செய்துள்ளனர். இவர்களுடன் நவோகெம் மற்றும் ஹலோ சுவிட்சுகள் & கேபிள்கள் இணைந்து
மொத்தம் 31 நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்கின்றன.