சோழிங்கநல்லூரில் 163 உயர்தர அடுக்குமாடி குடியிருப்பினை ‘டேக் பிரத்யங்கிரா’ என்ற பெயரில் அறிமுகப்படுத்துகிறது, டேக் டெவலப்பர்ஸ்

0
204

சோழிங்கநல்லூரில் 163 உயர்தர அடுக்குமாடி குடியிருப்பினை ‘டேக் பிரத்யங்கிரா’ என்ற பெயரில் அறிமுகப்படுத்துகிறது, டேக் டெவலப்பர்ஸ்

சென்னை,

சென்னையில் மிகவும் நம்பதகுந்த கட்டுமான நிறுவனமாகிய டேக் டெவலப்பர்ஸ் (DAC Developers), சோழிங்கநல்லூரில் 163 உயர்தர அடுக்குமாடி குடியிருப்பினை “டேக் பிரத்யங்கிரா” (DAC Prathyangira) என்ற பெயரில் அறிமுகப்படுத்துகிறது. இந்த உயர்தர குடியிருப்பானது 12 குடியிருப்பு தளங்களையும், சுமார் 10,000 சதுர அடி பரப்பளவு கொண்ட மிகச்சிறந்த கிளப் ஹவுஸையும் கொண்டிருக்கும்.

ஓ.எம்.ஆர் சாலையின் மையப்பகுதியான சோழிங்கநல்லூரில் உள்ள 80 அடி சாலையில் இக்குடியிருப்பானது அமைந்துள்ளது. மிகவும் நேர்த்தியுடன் வடிவமைக்கப்படவுள்ள இந்தக் கட்டிடத்திலிருந்து பார்த்தால் பக்கிங்ஹாம் கால்வாயின் அழகிய காட்சியை காண இயலும். இது பல்வேறு வகையான வீட்டு உள்ளமைப்புகளைக் கொண்டுள்ளது. விசாலமான 2, 3 பி.ஹெச்.கே. ((2, 3 BHK)) அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் பென்ட் ஹவுஸ்கள் (PENT Houses) இதில் அடங்கும்.

கடற்கரை அழகினை பார்த்தபடி உள்ள பல்வேறு அளவுகளில் அமைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை “டேக் பிரத்யங்கிரா” கொண்டுள்ளது. 1,258 சதுர அடியில் தொடங்கி 3007 சதுர அடி வரையிலான பரப்பளவில் குடியிருப்புகள் இங்கு கட்டப்படவுள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான விலை ரூ. 93 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. நேர்த்தி மிகுந்த இந்த வீடுகளுக்கான முன்பதிவு வரும் ஜூன் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ஆரம்பமாகிறது.

சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள புனித ஸ்தலமான “ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி” கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பு, டேக் டெவலப்பர்ஸின் 101-ஆவது கட்டுமானத் திட்டமாகும். கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடித்தளப் பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளன.

இந்தத் திட்டத்தில் 50 சொகுசு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிரத்யேகமான மேற்தள ஸ்கை கிளப் ஹவுஸூம் (Rooftop Sky Clubhouse) இதில் அடக்கம். பிரம்மிக்க வைக்கும் கடல் காட்சிகளை இங்கிருந்து பார்க்கலாம். “டேக் பிரத்யங்கிரா” மிகப்பெரிய நீச்சல் குளம், இரட்டை உயரம் கொண்ட லாபி ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இங்குள்ள வீடுகள் விசாலமான ஜன்னல்களுடன் கூடிய பெரிய அறைகளைக் கொண்டிருக்கும். இதனால் போதுமான காற்றோட்டம், இயற்கை ஒளி கிடைக்கும்.

ஒவ்வொரு குடியிருப்பும் தனிப்பட்ட உரிமைகளை பாதிக்காத வகையிலும், அமைதிக்கு முன்னுரிமை தரும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. பகிர்ந்துகொள்ளப்பட்ட சுவர்கள், எதிரெதிர் வாசல் கதவுகள் இல்லாமல் சுதந்திரமான குடியிருப்புகளாக இவை இருக்கும். மூன்று பக்கம் வெளிச்சம் வரக்கூடிய அம்சம், குடியிருப்புகளின் தனி அழகை வெளிப்படுத்துகிறது. அனைத்து குடியிருப்புகளுக்குமான பிரதான கதவுகளில் ஸ்மார்ட் பூட்டுகள், உயர்தர பிராண்டட் தயாரிப்புகள், தனித்தன்மையுடன் அமைக்கப்படும். அனைத்து குடியிருப்புகளும் வாஸ்து அடிப்படையில் அமைக்கப்படுகிறது.

ஆரோக்கியம், உடற்தகுதிக்கு தேவையான வசதிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் திறந்தவெளி யோகா தளம் (Open Yoga Deck), பிரத்யேக ஸூம்பா அறை (Zumba Room), அமைதியான ரிஃப்ளெக்சாலஜி பாதை (Serene Reflexology Pathway), அமைதி ததும்பும் ஜென் தோட்டம் (Tranquil Zen Garden) ஆகியவை ஏற்படுத்தப்படவுள்ளன. நீராவி அறையுடன், அனைத்து வசதிகளும் கொண்ட ஜிம்மும் இருக்கும். பில்லியர்ட்ஸ், டேபிள் டென்னிஸ் போன்ற உள்ளரங்க விளையாட்டுகளுக்கு பிரத்யேக உள்ளரங்கமும் இங்கு வரவுள்ளது. குழந்தைகளை மனதில் வைத்து வசதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒரு மினி தியேட்டர் (Mini Theatre), விருந்துகளை நடத்துவதற்கான பல்நோக்கு அரங்கம் (Versatile Multipurpose Hall), அமைதியான தருணங்களுக்கான மேற்தள பரப்பு (Rooftop Landscape), ஒரு பார்பெக்யூ கார்னர் (Barbecue Corner) ஆகியவை ஓய்வு, பொழுதுபோக்கிற்கான வசதிகளில் அடங்கும். அனைத்து பொதுவான பகுதிகளுக்கும் சூரிய சக்தி பதிலி மின்சாரம் (Solar Power Backup), தானியங்கி அதிவேக லிஃப்ட் (Automatic High-speed Lifts), இ.வி.சார்ஜிங் தளங்கள் (EV Charging Bays), டி.ஜி. பவர் பேக்கப் (DG Power Backup), மையப்படுத்தப்பட்ட டி.டி.ஹெச். (Centralised DTH), டேட்டா வசதி (Data Provision) உள்ளிட்ட அத்தியாவசிய அம்சங்களும் இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இடம்பெறவுள்ளன. அருகிலேயே சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம் வர உள்ளதால், நகரின் அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற, எளிதான போக்குவரத்து வசதியை இங்கு குடியிருப்பவர்கள் எதிர்பார்க்கலாம்.

இது குறித்து டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குனர் டாக்டர். எஸ். சதீஷ்குமார் கூறுகையில், “டேக் பிரத்யங்கிரா” மிகப் பெரிய மதிப்பைப் கொண்டுள்ளது. இந்தக் குடியிருப்பு சோழிங்கநல்லூர்க்கு தனிப்பெருமையினை சேர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம். பக்கிங்ஹாம் கால்வாயின் எதிர்ப்புறம் அமைந்திருக்கும் இந்தக் குடியிருப்பு, பக்கிங்ஹாம் கால்வாயின் அழகான இயற்கை காட்சியினை ரசிக்கும் வகையில் நீர்நிலை அருகில் அமைந்த குடியிருப்பு வளாகமாக உள்ளது.

டேக் டெவலப்பர்ஸ் பல்வேறு விரிவாக்கத் திட்டங்களைக் கொண்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் இந்த நிறுவனத்தின் 12 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னையைத் தாண்டியும் இந்நிறுவனம் விரைவில் கோயம்புத்தூர் போன்ற பிற நகரங்களிலும் தங்களின் திட்டங்களை விரிவுபடுத்த உள்ளது.