சென்னை FICCI FLO சார்பில் நடத்தப்பட்ட ஸ்பார்க் ஃபெஸ்டிவ் எடிட் நிகழ்ச்சியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், FICCI FLO சென்னை தலைவர் ராஜி ராஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சென்னை சவேரா விடுதியில் நடைபெற்ற FICCI FLO ஸ்பார்க் ஃபெஸ்டிவ் எடிட் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் ஒரு கலாச்சார கொண்டாட்டமாகும். கலைத்திறன் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றின் நேர்த்தியான கலவையான இந்த நிகழ்ச்சி, FICCI FLO வின் உறுப்பினர்கள் மற்றும் தொழில்முனைவோரால் வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளின் காட்சிபேழையாகவும் அமைந்தது.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக நடைபெற்ற ரேம்ப் வாக்கில் FLO உறுப்பினர்களுடன் மாற்றுத்திறனாளி பெண்கள் கண்கவர் நடைபோட்டு அசத்தினர். பாலம் சில்க்ஸ், காவேரி, ரஹானே உள்ளிட்ட நிறுவனங்களின் கண்கவர் ஃபேஷன் ஷோ வும் பார்வையாளர்களை பரவசப்படுத்தியதும். மேலும் ஆந்திரா மகிளா சபா சார்பில் மாற்றுத்திறனாளி நபர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தும் ஸ்டாலை ஏற்பாடு செய்திருந்தது.
ஒட்டுமொத்தமாக மாற்றுத்திறனாளி, சிறப்புத்திறன் பெண்கள் மற்றும் தனித்துவம் வாய்ந்த பெண் தொழில்முனைவோருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் செயல்படும் FICCI FLO வின் இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த FICCI FLO சென்னையின் தலைவர் ராஜி ராஜு, ரச்சனாப்குமார் மற்றும் அபர்ணா வித்யானாத் உள்ளிட்டோருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.