சென்னை லைஃப்லைன் பல்நோக்கு மருத்துவக் குழுவின் கூட்டு முயற்சி மற்றும் நுண்துளை நுட்ப முறையில் சிக்கலான காசநோய் பாதிப்பால் நடக்க முடியாமல் கால்கள் செயலிழந்த 21 வயது இளம் பெண் சிகிக்சை பெற்று பூரண குணமடைந்தார்

0
146
சென்னை லைஃப்லைன் பல்நோக்கு மருத்துவக் குழுவின் கூட்டு முயற்சி மற்றும் நுண்துளை நுட்ப முறையில் சிக்கலான காசநோய் பாதிப்பால் நடக்க முடியாமல் கால்கள் செயலிழந்த 21 வயது இளம் பெண் சிகிக்சை பெற்று பூரண குணமடைந்தார்.
 
 மேற்கு வங்களாத்திதிருந்து சென்னைக்கு வந்த 21 வயது இளம் பெண்ணிற்குப் புது வாழ்வு கிடைத்துள்ளது. இந்தப் பெண் லைஃப்லைன் மருத்துவ
மனைக்கு, தாங்கமுடியாத கழுத்து வலி, முதுகுவலி, கால்கள் இரண்டும் தளர்ந்து செயலிழந்த நிலை மற்றும் குழப்பமான செயல்திறன் போன்ற தீவிரமான அறிகுறிகளுடன் வந்தார்.
உடனடி நோய் கண்டறிதல் மற்றும் முதல் கட்ட சிகிச்சை இந்தப் பெண்ணை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அந்த பெண்மணிக்கு லெட்டோமெனிஞ்ஞியல் மெனிஞ்சைட்டிஸ் என்ற மிக அபூர்வமான பாதிப்பு இருப்பதாகக் கண்டறிந்தனர். இது மூளையைச் சுற்றியுள்ள படலத்தில் மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள படலத்திலும் வீக்கத்தை உண்டுபண்ணும் தன்மை உடையது.
 மேலும் சில பரிசோதனைகள் மூலம் மூளையில் அதிகமான திரவம் தேங்கியிருந்தது (Obstructive Hydrochephalus) மற்றும் தண்டுவடத்தில் கட்டிகள் இருப்பதும் கண்டறியப்பட்டது. முதல் கட்டசிகிச்சையாக (Multiple Level Laminectomy) மல்டிபில் லெவேல் லாமினெக்டமி என்ற முறையில் திரவம் / சீழை வெளியேற்றுவதற்க தீர்மானம் செய்வதாக இருந்தது.
ஆனால் பல்நோக்கு மருந்துவர்கள் இணைந்து எடுத்த கூட்டு முயற்சியாக (நரம்பியல், பொது மருத்துவம், நுண்சிகிச்சை மருந்துவம்) D6 to D8 லேமிநெக்டமி என்ற சிகிச்சை மூலம் சிறிய ட்யுல்கள் மூலமாக கீழ் அதிகமாக இந்த நிலையிலிருந்தும் பல நிலைகளிலிருந்து கீழ் மற்றும் சிதைந்த திசுக்களையும் Saline என்ற திரவத்தை செலுத்தி வெளியேற்றினார்கள்.
 இந்த புதுமையான சிகிக்சை முறையில் தண்டுவடத்தில் எற்பட்ட அழுத்தம் வெகுவாக குறைக்கப்பட்டது. மேலும் EVD என்ற குழாய் பொருத்தியதன் மூலம் மூளையிலிருந்து அதிகப்படியான CSF என்ற திரவத்தையும் வெளியேற்ற முடிந்தது. நுண்துளை சிகிக்சை நிபுணர்கள் லைஃப்லைன் மருத்துவமனையின் தலைசிறந்து நுண்துளை அறுவை
சிகிச்சை நிபுணர்களின் செய்யப்பட்டது.
ஒத்துழைப்போடு, கூட்டு முயற்சியாக புதிய கண்டுபிடிப்பு (புதுமையான) VP SHUNT என்ற வென்ட்ரிகுலோ பெரிடோனியல் ஷன்ட்டைப் பொருந்தி, மூளையில் இருந்து அதிகப்படியான திரவத்தை நோயாளியின் வயிற்றுப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டது.
 நோயாளியின் தொப்புள் பகுதியில் ஒரு நுண்துளை லாப்பரோஸ்கோப் கருவியை செலுத்தி தழும்பில்லா முறையில் செய்யப்பட்டது. இந்த முறையில் வயிற்றில் இருந்த பல சிறிய சிறிய காசநோய் கட்டிகள் கண்டறியப்பட்டன. இதே நுண்துளைக் கருவியின் வாயிலாக பயாப்ஸி செய்வதற்கு தேவையான திசுக்களும் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. தீவிர காசநோய் உள்ளதும் உறுதிபடுத்தப்பட்டது.
பல்நோக்கு மருத்துவ சிகிச்சை மூலம் குணமடைதல் குழு உடனடியாக உடனடியாக நோயின் காரணத்தைக் கண்டறிந்ததால் மருத்துவர்கள் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகளை ஆரம்பித்தனர். இந்த முறையில் 10 நாட்களுக்குள் சிறப்பான முன்னேற்றத்தை அளித்தது. நோயாளி நடக்கவைக்கப்பட்டு தழும்பில்லாத நிலையில் வீடு திரும்பினார்.
உணவு மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் இவ்வளவு கூட்டு மருத்துவ மற்றம் நுண்ணிய அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளிக்கு ஊட்டச் சத்தும், காசநோய் மூலம் தொற்றுகள் ஏற்படாமலிருக்க சிறந்த ஊட்டச் சத்து மிகவும் அவசியம். லைஃப்லைன் மருத்துவமனையின் தலைசிறந்த ஊட்டச்சத்து நிபுணர்களால் சிறந்த உணவு முறை – வைட்டமின்கள், புரதம் மற்று மினரல்கள் அடங்கிய முழுமையான ஊட்டச்சத்து அளிக்கப்பட்டது. இதனால் இந்த இளம் பெண்ணிற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கப்பட்டு வேகமாக நலமடைந்தார்.
லைஃப்லைன் மருத்துவமனை நோயாளிகளின் நம்பிக்கை 
சிக்கலான நோய்களைக்கூட, சிறந்த பல்நோக்க மருத்துவர்களின் திறமை, அர்ப்பணிப்பு, சிறந்த, மேம்பட்ட நுண்ணிய சிகிக்சை முறைகள், மூலம் சிறப்பாக சிகிச்சை அளித்து சிறந்த முறையில் குணப்படுத்த முடியும் என்பதற்கு இந்த இளம் பெண்ணின் சிகிச்சை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது போன்ற சிக்கலான நோய் அறிகுறிகளுடன் வருகின்ற நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த நம்பிக்கையை அளிக்கும்.
முன்னணி அறுவை சிகிக்சை நிபுணர்கள் Dr.M.Aquib. MBBS, MS, M.Ch (Neuro Surgery), Dr.Anirudh Rajkumar,  MBBS, DNB (Surgery), FMAS, Neuro Surgeon, Brain & Spine MRCS, FIBC (Bariatric), Advanced Surgeon Robotic & Laparoscopic Obesity Surgeon ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.