சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரியை ஆர்.பூமிநாதன் மற்றும் விஞ்ஞானி டாக்டர்.இ.கே.டி சிவகுமார் துவக்கி வைத்தனர்

0
190
சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரியை ஆர்.பூமிநாதன் மற்றும் விஞ்ஞானி டாக்டர்.இ.கே.டி சிவகுமார் துவக்கி வைத்தனர்
● 2024-25 கல்வியாண்டிலிருந்து சர்வதேச இளங்கலை மற்றும் டிப்ளமோ கல்வி படிப்புகளை இந்நிறுவனம் வழங்கவுள்ளது.
● மலேசியாவில் உள்ள யுனிவர்சிட்டி கல்லூரி ஆஃப் ஏவியேஷன் மூலம், மாணவர்கள் இரண்டு மாதம் மலேசியாவில் படிப்பார்கள்.
14 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு 25,000க்கும் மேலான வேலைவாய்ப்பினை ஓட்டல் துறையில் வழங்கி சாதனை படைத்து முன்னோடியாக திகழும் ஒரே கல்வி நிறுவனம் சென்னைஸ் அமிர்தா குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ் தான். கூடுதலாக 124 ஆண்டுகால சமையல் ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு தங்க பதக்கம் வென்று அதன் தரத்தயும் நிரூபித்துள்ளது. இப்பொழுது சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி மூலம் விமானக் கல்வியில் அடியெடுத்து வைக்கிறது. மலேசியாவில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் ஏவியேஷனுடன் இணைந்து இளங்கலை மற்றும் டிப்ளமோ படிப்புகளை இந்நிறுவனம் தொடங்க உள்ளது. சர்வதேச அனுபவத்தை தரும் இந்தப் படிப்புகள் 2024-25 கல்வியாண்டிலிருந்து தொடங்கும். தகுதியுள்ள மாணவர்களுக்கு வரையறுக்கப்பட்ட இடங்களே உள்ளன
புதிய நிறுவனத்தை சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் திரு.ஆர்.பூமிநாதன் திறந்து வைத்தார். அண்ணா பல்கலைக்கழக விஞ்ஞானியும், வருகைதரு பேராசிரியருமான டாக்டர்.இ.கே.டி. சிவக்குமார் தலைமை வகித்தார். சென்னைஸ் அமிர்தா நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி. கவிதா நந்தகுமார், தலைமை கல்வி இயக்குனர் திரு. லியோ பிரசாத், டீன் திரு. மில்டன் மற்றும் பல்கலைக்கழக தலைவர் திருமதி. பானுமதி உடன் இருந்தினர்.
சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் காலேஜ், Bsc ஏவியேஷன் மற்றும் BBA ஏர்லைன் மற்றும் ஏர்போர்ட் மேனேஜ்மென்ட் என இரண்டு பாடத்திட்டத்துடன் advance cabin crew training, ground staff training, communication and personality development ஆகிய மதிப்பு கூட்டப்பட்ட படிப்புக்கான   பயிற்சிகளை வழங்கும். இந்த படிப்புகளை வழங்க அனுபவம் வாய்ந்த பிஎச்டி பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
மாணவர்கள் தங்கள் படிப்பின் ஒரு பகுதியாக. மலேசியாவில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் ஏவியேஷன்யில் இரண்டு மாத காலம் படிப்பார்கள்.
சென்னை அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி நகரின் மையப்பகுதியான ஆயிரம் விளக்கு மெட்ரோ அருகே மவுண்ட் ரோட்டில் 40,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இது உயர் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. சர்வதேச விமான நிலைய சூழலையும் கொண்டுள்ளது. மாணவர்கள் தங்கள் எதிர்கால பணியிட சூழலை இங்கே கற்கும் போதே அனுபவிப்பதை இது உறுதிசெய்கிறது. விமான வடிவில் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு சிறந்த நடைமுறை அனுபவத்தை வழங்குவதற்காக இங்கு ஆய்வகங்கள் விமானப் போக்குவரத்து துறையில் சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் விமானப் போக்குவரத்துக் கல்வியில் முதன்முறையாக, ‘கற்கும் போது சம்பாதிக்கும்’ திட்டத்தை சென்னைஸ் அமிர்தா அறிமுகப்படுத்துகிறது. இதில் நிதி உதவி கோரும் மாணவர்களுக்கு படிக்கும் போதே மாதம் ரூ. 8,000 முதல் 15,000 வரையிலான சம்பளத்தில் பகுதி நேர வேலைகள் வழங்கப்படும்.
சென்னைஸ் அமிர்தாவின் தலைவர் திரு.ஆர்.பூமிநாதன் கூறுகையில், “ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வித் துறையில் இந்தியாவிலேயே சென்னைஸ் அமிர்தா தான் ஒரு முன்னோடி. வேலை சார்ந்த படிப்புகளை வழங்குவதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். இந்தியா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் விமானத் துறை சார்ந்தும், விமானத் திறன்களுக்கான தேவையும் வேகமாக அதிகரித்து வருவதால் இந்தத் துறை கணிசமான வளர்ச்சிக்கு தயாராக உள்ளது” என்றார். மேலும் தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் 100% வேலைக்கான உதவி சென்னைஸ் அமிர்தா கல்லூரி வழங்கும் என்றும் அவர் கூறினார்.
For details contact :9363300400