சென்னையில் 3 நாட்கள் நடைபெற்ற சமையல் சவால் போட்டியில் செஃப் சவுந்தரராஜன் நினைவுக் கோப்பையை கிராண்ட் ஜி.ஆர்.டி. சென்னை கைப்பற்றியது

0
163
சென்னையில் 3 நாட்கள் நடைபெற்ற  சமையல் சவால் போட்டியில் செஃப் சவுந்தரராஜன் நினைவுக் கோப்பையை கிராண்ட் ஜி.ஆர்.டி. சென்னை கைப்பற்றியது.
இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச நடுவர்கள் முன்னிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தென்னிந்திய செஃப் அசோசியேஷனின் 6 வது சமையல் சவால் போட்டி நடைபெற்றது.
 சர்வதேச செஃப் அசோசியேசன்  (WACS) ஒப்புதலுடன் கடந்த 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதி புனித தோமையார் மலை ராடிசன் ப்ளூ நட்சத்திர விடுதியில் பரிசுகள் வழங்கப்பட்டன.
 ஆச்சி மசாலாவின் நிறுவன தலைவர் பத்மசிங் ஐசக்  தென்னிந்திய செஃப் அசோசியேஷன் தலைவர் செஃப் தாமு, மற்றும் பொதுச்செயலாளர் செஃப் சீதாராம் பிரசாத் ஆகியோர் கோப்பையை வழங்கி சிறப்பித்தனர்.
 முதல் நாள்  த்ரீ டயர் வெட்டிங் கேக்,  பட்டர் மற்றும் மார்கரின் ஸ்கல்ப்சர், பரோட்டா மற்றும்  பிரியாணி பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
 இரண்டாம் நாள் பழங்கள் காய்கறிகளை அழகு படுத்துதல், அறைகளை அழகுபடுத்தும் போட்டி, இந்திய சமையல், குழு போட்டிகள் நடத்தப்பட்டன.
மூன்றாம் நாள் பேஸ்ட்ரி மற்றும் பேக்கரி உணவுகள், குழு பஃபே, கேக்குகளை அலங்கரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
இந்த போட்டிகளில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் தலைசிறந்த சமையல் வல்லுனர்கள், நட்சத்திர விடுதிகளின் சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட சுமார் 1500 க்கும் மேற்பட்டவர்கள் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.
குறிப்பாக தென்னிந்திய செஃப் அசோசியேஷன் சார்பில் செஃப் ராஜ்மோகன் உருவாக்கிய 1121.6 கிலோ எடையுள்ள பீன் சாலட் கின்னஸ் உலக சாதனை படைத்தது.
 உணவு பழக்க வழக்க விழிப்புணர்வுக்காக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.  3 நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு புனித தோமையார் மலைபகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.