சென்னையில் ஐரிஸ் ஈவென்ட்ஸ் நடத்திய ஹட்சன் லிட்டில் மிஸ் அண்ட் மாஸ்டர் செஃப் (CHEF) போட்டியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு தங்கள் சமையல் திறனை வெளிப்படுத்தினர்.

0
250
சென்னையில் ஐரிஸ் ஈவென்ட்ஸ் நடத்திய ஹட்சன் லிட்டில் மிஸ் அண்ட் மாஸ்டர் செஃப் (CHEF) போட்டியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு தங்கள் சமையல் திறனை வெளிப்படுத்தினர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள ஏரோஹப் மாலில் ஹட்சன் லிட்டில் மிஸ் அண்ட் மாஸ்டர் செஃப்(CHEF ) போட்டி நடைபெற்றது.
இதில் 7 முதல் 12 வயது வரையிலான சுமார் 200 குழந்தைகள் கலந்து கொண்டு ஹட்சன் பன்னீரை பயன்படுத்தி தங்கள் சமையல் திறனை வெளிப்படுத்தினர்.
புகழ்பெற்ற சமையல் கலை நிபுணர் உமாசங்கர், செஃப் நித்யா பிராங்க்ளின் மற்றும் செஃப் ஆர்த்தி ஆகியோர் அடங்கிய நடுவர்குழு, திறமை மிக்க இளம் சமையல் வல்லுனர்களை கண்டறியும் விதத்தில் இந்த போட்டி நடத்தப்பட்டது.
ஒருபுறம் இந்த சமையல் போட்டிகள் அரங்கேற, மற்றொருபுறம் ஐரிஸ் நிறுவனத்தின் 11 வது லிட்டில் பிரின்ஸ் அண்ட் பிரின்ஸஸ் நிகழ்ச்சியும் களைகட்டியது. இதில் 3 முதல் 10 வயது வரையுள்ள குழந்தைகள் பாடல், நடனம் மற்றும் தங்களது தனித்திறமைகள் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்தனர். குறிப்பாக விதவிதமான சிவப்பு வண்ண ஆடைகளில் குழந்தைகள் மேடையில் தோன்றி நிகழ்ச்சிக்கு கூடுதல் வண்ணம் சேர்த்தனர். இந்த நிகழ்வில் நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார்,  நடிகர் பரத் கல்யாண், நடிகை ஜெயா முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கூடுதல் சிறப்பு சேர்த்தனர்.
கலைச்செல்வி காருண்யா குழுவைச் சேர்ந்த குழந்தைகளின் கண்கவர் நடனமும் இந்த நிகழ்ச்சியை அலங்கரித்தது.
சமையல் மற்றும் பல்வேறு போட்டிகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்திய குழந்தைகள் அனைவருக்கும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
மேலும் சீனியர் பிரிவில் வெற்றிபெற்ற டீனா ரோஸ், அனுஷ்மிதா தத்தா சவுத்ரி, துரோனா கிரண் மற்றும் ஜூனியர் பிரிவில் வெற்றி பெற்ற தீக்ஷிதா, ஹாரீனா பாத்திமா, அன்வித் ஆகிய குழந்தைகளுக்கு  Just Bicycle நிறுவனம் வழங்கிய பை  சைக்கிள்கள், பரிசுகள் மற்றும் கூப்பன்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வின் ஆதி முதல் அந்தம் வரை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும்  நடைபெற,  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் 24 வருடங்கள் அனுபவம் மிக்க ஐரிஸ் ஈவெண்ட்ஸ் அமைப்பாளர்களின் திட்டமிடல் முக்கிய காரணமாக அமைந்தது. அதுவே ஹட்சன் லிட்டில் மிஸ் அண்ட் மாஸ்டர் செஃப்(CHEF) நிகழ்ச்சிக்கு மறக்க முடியாத வெற்றி அனுபவத்தை தந்துள்ளது.