சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகைக்கான நம்ம சென்னை’ஸ் எஃப்.பி. விருதினை நடிகை இனியா தட்டிச் சென்றார்

0
1027

சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகைக்கான நம்ம சென்னை’ஸ் எஃப்.பி. விருதினை நடிகை இனியா தட்டிச் சென்றார்

ஃபைஷாகான், பெனிட்டா ஆகியோரின் எஃப்.பி. ஃபேஷன் மற்றும் பிசினஸ் நிறுவனம் சார்பில், *நம்ம சென்னை’ஸ் எஃப்.பி. விருதுகள்* வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பல்துறை சார்ந்த 2020-2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதில், சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகை விருதினை நடிகை இனியா பெற்றார். சிறந்த பன்முகத்தன்மை வாய்ந்த நடிகருக்கான விருதினை நடிகர் ரியாஸ்கானும், அவரது மனைவியும் நடிகையுமான உமா ரியாஸ்கான் பெஸ்ட் எண்டர்டெய்னருக்கான விருதினையும் பெற்றனர்.

மிகவும் ஸ்டைலான நடிகருக்கான விருது நடிகர் பப்லூ பிரித்விராஜ் மற்றும் மிகவும் ஸ்டைலான நடிகைக்கான விருது நடிகை சாக்‌ஷி அகர்வால் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

மிகவும் பேசப்படும் நடிகைக்கான விருதினை நடிகை யாஷிகா ஆனந்த் தட்டிச் சென்றார். சிறந்த புகைப்பட முகம் கொண்ட நடிகைக்கான விருது நடிகை ஐஸ்வர்யா தத்தா வுக்கு வழங்கப்பட்டது.

நடிகைஅபிராமி* சித்ரபதங்கா என்ற விருதினை பெற்றார். சிறந்த செல்வாக்கு மிக்க நபருக்கான விருதினை நடிகை சுஜா வரூணி யும், வளர்ந்து வரும் கன்னட நடிகைக்கான விருதினை சுபரக்‌ஷாவும் பெற்றனர்.

மேலும், பலதுறைகளில் சிறந்த சாதனையாளர்கள் பலருக்கும் எஃப்.பி. விருதுகள் வழங்கப்பட்டன.