சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியால் உலகம் முழுவதும் 800 மில்லியன் மக்களுக்கு மின்சாரம் கிடைக்கச் செய்ய முடியும்: ஆர்.கே.சிங்
புதுதில்லி, உலகம் முழுவதும், மின்சார அணுகல் குறைவாக உள்ள, 800 மில்லியன் மக்களுக்கு, சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணி அமைப்பால் மின்சாரம் கிடைக்கச் செய்ய முடியும் என்று மத்திய மின்சக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர்.கே.சிங் கூறியுள்ளார்.
சர்வதேச சூரியசக்தி கூட்டணியின், நான்காவது பொதுக் கூட்டத்தை மத்திய அமைச்சரும், சர்வதேச சூரியமின்சக்திக் கூட்டணியின் தலைவருமான திரு.ஆர்.கே.சிங் தொடங்கி வைத்தார். இதில் 106 நாடுகள் பங்கேற்றன. அனைத்து உறுப்பு நாடுகளையும் திரு.ஆர்.கே.சிங் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பின்பற்றும் முறை கடந்த தசாப்தத்தின் தொடக்கத்திலிருந்து வேகம் பெற்றுள்ளது. நிலையான எரிசக்திக்கான உலகளாவிய அணுகலை அடைய சூரிய மின்சக்திதான் சாத்தியமான வாய்ப்பு. நமது எரிசக்தித் துறைகளை நிலக்கரி அற்றதாக வேகமாக மாற்றுவதற்கு சூரியமின்சக்திதான் சாத்தியமான வாய்ப்பு.
சூரிய மின்சக்தித் துறையில் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக வேகமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 2030ம் ஆண்டுக்குள் 450 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. நம்மிடம் 154 ஜிகா வாட் படிமம் அல்லா மின் உற்பத்தி திறன் உள்ளது. மேலும் 67 ஜிகா வாட் மின் உற்பத்திக்கான கட்டுமானம் நடந்துவருகிறது.
மின்சாரப் பற்றாக்குறைப் பிரச்சினையைத் தீர்ப்பது மிக முக்கியம். உலகம் முழுவதும் மின்சாரம் கிடைப்பது குறைவாக உள்ள 800 மில்லியன் மக்களுக்கு, சர்வதேச சூரிய சக்திக் கூட்டணியால் மின்சாரம் கிடைக்கச் செய்ய முடியும். அனைவருக்குமான எரிசக்தி அணுகலை வழங்குவதில் சர்வதேச சூரிய சக்திக் கூட்டணி முக்கிய பங்காற்ற முடியும்.
சூரியமின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி பயன்படுத்தும் அனைவருக்கும், சர்வதேச சூரிய மின்சக்திக் கூட்டணி அமைப்பு, மின்சாரம் கிடைக்கச் செய்ய உலக நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாரு மத்திய அமைச்சர் திரு.ஆர்.கே. சிங் கூறினார்.