சர்வதேச எண்ணை நிறுவனமான சாம்பியன்X கார்ப்பரேஷன் சென்னை தரமணியில் உள்ள ராமானுஜம் தொழில்நுட்ப பூங்காவில் புதிய தொழில்நுட்ப மையத்தை சோமா’சோமசுந்தரம்,டெரிக் பிரையன்ட் ,சிசில் மனோகர் டேனியல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

0
228
சர்வதேச எண்ணை நிறுவனமான சாம்பியன்X கார்ப்பரேஷன் சென்னை தரமணியில் உள்ள ராமானுஜம் தொழில்நுட்ப பூங்காவில் புதிய தொழில்நுட்ப மையத்தை சோமா’சோமசுந்தரம்,டெரிக் பிரையன்ட் ,சிசில் மனோகர் டேனியல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
30,000 கோடி மதிப்புடைய சாம்பியன்X நிறுவனத்தில் புதிய தொழில்நுட்ப மைய தொடக்கவிழாவில், நிறுவனத்தின் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான சிவசங்கரன் “சோமா” சோமசுந்தரம், தலைமை செயலாக்க அதிகாரி டெரிக் பிரையன்ட், நிர்வாக இயக்குநர் சிசில் மனோகர் டேனியல் மற்றும் மூத்த நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 இந்த புதிய தொழில்நுட்பமையம் நிறுவனத்தின் டிஜிட்டல் கண்டுபிடிப்பு வாய்ப்புகளை ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய சிவசங்கரன் ’சோமா’சோமசுந்தரம், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் செயலாக்கம் சர்வதேச அளவில் எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடுகளை மாற்றியுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்தியாவில் மனிதவளம், திறன் மற்றும் புதுமையான சிந்தனைகள் ஏராளமாக உள்ளதாக குறிப்பிட்ட அவர், தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் சென்னையில் புதிய மையத்தை திறந்துள்ளது பொருத்தமான ஒன்று என்றும் கூறினார்.
சாம்பியன்X நிறுவத்தின் இந்திய அளவிலான செயல்பாடுகள் இந்த தொழில்நுட்ப மையத்தின் மூலமாகதான் நடைபெற உள்ளது. மேலும் இதன் மூலம் இந்தியா முழுவதும் புதிய வேலை வாய்ப்புகளும் வழங்கப்பட உள்ளதாக சாம்பியன்X  நிறுவனம் தெரிவித்துள்ளது.