சக்தி மசாலாவின்  ‘சுயசக்தி விருதுகள் 2022’-க்கான விண்ணப்பங்கள், இல்லத்திலிருந்து தொழில் புரியும் பெண் தொழில் முனைவோரிடமிருந்து வரவேற்கப்படுகின்றன!

0
158

சக்தி மசாலாவின்  சுயசக்தி விருதுகள் 2022’-க்கான விண்ணப்பங்கள், இல்லத்திலிருந்து தொழில் புரியும் பெண் தொழில் முனைவோரிடமிருந்து வரவேற்கப்படுகின்றன!

  • தமிழ்நாடு அரசின் குறுசிறுநடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மாண்புமிகு அமைச்சர் திருதா.மோ. அன்பரசன், இந்த 5-ஆவது ஆண்டு விருதாளர்களைக் கண்டறியும் நடைமுறைகளைத் தொடங்கி வைத்தார்!
  • இல்லத்திலிருந்தே தொழில் புரியும் சிறந்த பெண் தொழில்முனைவோரை தமிழக அரசின் டான்சிம் அமைப்பும் ஊக்கப்படுத்தவுள்ளது!
  • பிராண்ட் அவதார் நிறுவனம் நிறுவிய இந்த விருதிற்கு, தமிழ்நாடு முழுவதும் வீட்டிலேயே தொழில்முனையும் பெண்கள், 13 பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்கலாம். பதிவு செய்வதற்கான இணையதளம்: – https://homepreneurawards.com / www.suyasakthiawards.com

சென்னை, 7 ஜூன் 2022

சக்தி மசாலா சுயசக்தி விருதுகள் 2022’ (Sakthi Masala Homepreneur  Awards 2022)  5-ஆவது சீசனுக்கான விருதாளர்களைக் கணடறியும் நடைமுறைகளை  தமிழ்நாடு அரசின் குறுசிறுநடுத்தரத்  தொழில்களுக்கான (MSME) மாண்புமிகு அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன் இன்று (7 ஜூன் 2022),  சென்னையில்  தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த சந்தைப்படுத்துதல், தகவல் தொடர்பு, பிராண்ட் மேலாண்மை, நிகழ்ச்சி ஏற்பாடு போன்ற சேவைகளை மேற்கொண்டு வரும் பிராண்ட் அவதார் (Brand Avatar) நிறுவனம், வீட்டிலிருந்தே பெண்கள் மேற்கொள்ளும் தொழில்முனைவு முயற்சிகளை அங்கீகரிக்க நிறுவிய விருது இதுவாகும். ராடான் மீடியாவொர்க்ஸ் (இந்தியாலிமிடெட் (Radaan Mediaworks (I) Ltd) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரும்நடிகையும்தயாரிப்பாளருமான திருமதி ஆர்ராதிகா சரத்குமார்தமிழ்நாடு ஸ்டார்ட்அப் அண்ட் இன்னோவேஷன் மிஷன் (Tamil Nadu Startup and Innovation Mission -TANSIMஅமைப்பின் திட்ட இயக்குநரும்தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. சிவராஜா ராமநாதன்  ஆகியோர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் தொழில்துறை, கல்வித்துறை, அரசு, சமூக சேவை நிறுவனங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

ஆர்வமாக தொழில்முனைவை வீட்டிலிருந்தே மேற்கொண்டுவரும் பெண்களை அங்கீகரித்து கொண்டாட ஒரு தளமாக ‘சக்தி மசாலா சுயசக்தி விருதுகள் 2022’ உருவாக்கப்பட்டுள்ளது. இல்லத்திலிருந்தே சம்பாதிக்கும் பெண்கள், விவசாயம், மருத்துவம், சில்லறை விற்பனை, கலை – கலாசாரம், விளையாட்டு – ஃபிட்னெஸ்,  உணவு – பானங்கள், டிஜிட்டல், அழகு – ஆரோக்கியம், கல்வி – இலக்கியம்,  ஊடகம் – பொழுதுபோக்கு, சமூகநலன் – மாற்றுத்திறனாளி, வீட்டுத் தொழில்முறை சேவையாளர்கள், தொழில்நுட்பம் ஆகிய 13 பிரிவுகளின் கீழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

https://homepreneurawards.com / www.suyasakthiawards.com  என்ற இணையதளத்தில் சுயசக்தி விருதுக்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். கடைசித் தேதி 2 ஜூலை 2022 ஆகும்.

யங் இந்தியன்ஸ் அமைப்புடன் கூட்டிணைவு:

இந்த ஆண்டு, சக்தி மசாலா சுயசக்தி விருதுகளின் ஒரு பகுதியாக, கல்லூரியில் படிக்கும் பெண்கள் தங்கள் தொழில்முனைவு சார்ந்த சிறந்த யோசனைகளைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பாக, யங் இந்தியன்ஸ் (Young Indians)  அமைப்புடன்  இணைந்து சக்தி மசாலா வழங்கும் சுயசக்தி மாணவியர் பதிப்பு விருதுகளும் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் அவர்களின் கனவு முயற்சிகளைத் தொடங்கவும், செயல்படுத்தவும், விரிவாக்கவும் உதவிகள் உருவாக்கப்படும். இந்த முயற்சி மாணவியர்களின் சிறந்த யோசனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும்.

டான்சிம் உடன் கூட்டிணைவு:

மாநிலத்தில் தொழில்முனைவோருக்கான சூழலை வளர்த்தெடுக்க தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ள முன்முயற்சியான டான்சிம் (TANSIM) உடன் ‘சக்தி மசாலா சுயசக்தி விருதுகள் 2022’ இந்த ஆண்டு கைகோர்க்கிறது. டான்சிம் நிறுவனம் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 பேர் வரையிலான – வீட்டிலேயே தொழில்முனைவு மேற்கொள்வோரின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் இலவசத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. டான்சிம்மின் தகுதி, கொள்கைகளின் அடிப்படையில் இதற்கான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் ஸ்டார்ட்அப் தொழில் முனைவோராக மாற்றப்படுவார்கள். டான்சிம் நிர்ணயித்துள்ள அனைத்துத் தகுதிகளையும் பூர்த்தி செய்து, நம்பிக்கைக்குரிய வகையில் செயல்படும் ஸ்டார்ட்அப்களுக்கும் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்குவது குறித்தும் டான்சிம் பரிசீலிக்கும்.

‘சக்தி மசாலா சுயசக்தி விருதுகள் 2022’ குறித்து பிராண்ட் அவதார்  நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான  திரு.ஹேமச்சந்திரன் கூறுகையில், “பெண்கள் எப்போதும் நமது சமூகத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்பவர்களாக உள்ளனர். தங்கள் குடும்பக் கடமைகளை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், சிறிய அல்லது நடுத்தர வணிக நிறுவனங்களை வீட்டிலிருந்தே நடத்துவதன் மூலம் தங்கள் குடும்பங்களை பொருளாதார ரீதியாக அவர்கள் ஆதரிக்கின்றனர்.

அவர்கள் வெளியிலிருந்து வேலையை எடுத்து வீட்டிலேயே செய்து தருகிறார்கள். தரமான தயாரிப்புகள், சேவைகளை வழங்குவதன் மூலம் இந்தப் பெண்கள் உள்ளூர் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். வளர்வதற்கு சரியான தளம் கொடுக்கப்பட்டால், அவர்கள் தங்கள் முயற்சியை மேம்படுத்தலாம், வணிகத் தலைவர்களாகவும் மாறலாம். சமூகம், பொருளாதாரத்திற்கு பெண்கள் ஆற்றும் இந்த அமைதியான, குறிப்பிடத்தக்க பங்களிப்பை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காகவே சுயசக்தி விருதை நாங்கள் நிறுவியுள்ளோம்” என்றார்.

ஸ்பான்சர்கள்:

சக்தி மசாலா (Sakthi Masala), எஸ்.எஸ்.வி.எம்.  (SSVM) கல்வி நிறுவனங்கள், ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் (GRT Jewellers), ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (Sree Balaji Medical College and Hospital), மில்க்கி மிஸ்ட் (Milky Mist) ஆகிய நிறுவனங்கள் இந்த விருதிற்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன.

ஆலோசகர்கள்:

ஃபிக்கி ஃப்ளோ சென்னை (FICCI Flo Chennai), டை சென்னை (TiE Chennai). ரைட் ஃபிரிக்குவன்சி (Right Frequency) மற்றும் எக்ஸ்ட்ராகட் (Xtracut) ஆகியவை ஆலோசகர்களாகக் கைகோர்த்துள்ளன.

சுயசக்தி விருதுகள் – ஓர் அறிமுகம்:

கார்ப்பரேட் திறமைகளுக்குப் பதிலாக, வீட்டிலேயே தொழில்முனைவை மேற்கொண்டுவரும் பெண்களை கௌரவிக்கும் வகையில் தனித்துவமாக உருவாக்கப்பட்டவை ‘சுயசக்தி விருதுகள்’. இந்த விருது 2017-ல் நிறுவப்பட்டது.  இதுவரை நான்கு சீசன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் மூன்று விருது வழங்கும் விழாக்கள் சென்னையிலும், 4-ஆவது விழா டிஜிட்டல் முறையிலும் நடைபெற்றன. 2022 விருது வழங்கும் விழா தேசிய அளவிலான நிகழ்வாக நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்வை 2025-ஆம் ஆண்டில் சர்வதேச நிகழ்வாக மாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தை பிராண்ட் அவதார் கொண்டுள்ளது.

பிராண்ட் அவதார் நிறுவனம் பிரைடு ஆஃப் தமிழ்நாடு விருதுகள், ஃபேஷன் பிரீமியர் வீக், வில்லேஜ் டிக்கெட், செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் உள்ளிட்ட பல சிறந்த  நிகழ்வுகளை முழுமையாகத் திட்டமிட்டும், நடத்தியும் வருவது குறிப்பிடத்தக்கது.