கொரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசி: வெளிநாடு செல்பவர்கள் சில ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்

0
171

கொரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசி: வெளிநாடு செல்பவர்கள் சில ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்

கல்வி மற்றும் வேலைக்காக வெளிநாடு செல்பவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள, சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் வேலைக்காக வெளிநாடு செல்பவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள, சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்கு செல்பவர்கள், தாங்கள் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை சமர்ப்பிக்கவும் கூறப்பட்டுள்ளது.மேலும், பாஸ்போர்ட்டை அடையாள அட்டையாக கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும்,தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணே அச்சிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டோஸ் போடும்போது வேறு ஆவணங்களை கொடுத்திருந்தால், அந்த விவரங்களே அச்சாகும் எனக் கூறியுள்ள அதிகாரிகள்,பாஸ்போர்ட் விவரங்கள் தேவை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றொரு சான்றிதழை தயாரித்துக் கொடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும், இந்த விலக்கு, ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு முன் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.