கிரசண்ட் இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் கவுன்சில், இன்டெல் டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம்.
சென்னை: கிரசண்ட் இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் கவுன்சில் (Crescent Innovation and Incubation Council -CIIC – சி.ஐ.ஐ.சி) மற்றும் பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசண்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (B.S. Abdur Rahman Crescent Institute of Science and Technology – BSACIST – பி.எஸ்.ஏ.சி.ஐ.எஸ்.டி) இன்டெல் டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் உடன், டேட்டா சென்ட்ரிக் லேப்ஸ் ஃபார் எமர்ஜிங் டெக்னாலஜிஸ் திட்டத்தின் கீழ். “இன்டெல் ®உன்னதி” (“Intel ®Unnati”) என்கிற திட்டத்துக்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையொப்பமிட்டுள்ளது . இந்த இன்டெல் ®உன்னதி திட்டம், சிஸ்டம் இன்டக்ரேட்டர் பார்ட்னரான ஏ.யூ.கே கம்ப்யூட்டிங் (AUK Computing) மூலம் நிர்வகிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பி.எஸ்.ஏ.சி.ஐ.எஸ்.டி -ன் கூடுதல் பதிவாளர் டாக்டர். என். ராஜா ஹுசைன் (Dr. N Raja Hussain), சி.ஐ.ஐ.சி-ன் முதன்மை செயல் அதிகாரி & இயக்குநர் திரு. எம் பர்வேஸ் ஆலம் (Mr. M Parvez Alam), மற்றும் சி.ஐ.ஐ.சி குழுவினர் பங்கேற்றனர்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் இணையம் சார்ந்த விஷயங்கள் (Artificial Intelligence, Data Analytics, Cloud Computing and IoT – Internet of Things) ஆகியவற்றில் திறமையான நபர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்தத் திறன் இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் இன்டெல் இந்தப் புதிய திறன் முயற்சி, இன்டெல் ®உன்னதி – ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், செயற்கை நுண்ணறிவு, இயந்திர வழிக் கற்றல் (ML – Machine Learning ) மற்றும் இணையம் சார்ந்த விஷயங்கள் மற்றும் ஸ்மார்ட் மொபிலிட்டி (Smart Mobility) தொடர்பான பயிற்சி பாடத் திட்டத்தை மாணவர்கள் / ஸ்டார்ட்-அப்களுக்கு இன்டெல் ® கட்டிடக்கலை (Intel® architecture -IA) பற்றி கற்றுத்தர வழி வகுக்கும். சி.ஐ.சி.ஐ-ல் நவீன இன்டெல்® உன்னதி ஆய்வகம் நிறுவப்படும்.
இன்டெல் டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் -ன் உத்தி ஈடுபாடு பிரிவின் இயக்குநர் திரு. சுமீத் வர்மா, (Mr. Sumeet Verma, Director, Strategic Engagements – Intel Technology India Private Limited) கூறும் போது, ‘’சி.ஐ.ஐ.சி மற்றும் பி.எஸ்.ஏ.சி.ஐ.எஸ்.டி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதில் எங்கள் இன்டெல் நிறுவனம் மகிழ்ச்சி அடைகிறது. தொழில்நுட்ப உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் தொழில்துறைக்கும் கல்வித்துறைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் இன்டெல் நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும் என நம்புகிறேன்’’ எனக் கருத்துத் தெரிவித்தார்.
திரு. எம் பர்வேஸ் ஆலம்,’’ சிஸ்டம் இன்டக்ரேட்டர் பார்ட்னர் ஏ.யூ.கே கம்ப்யூட்டிங் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும் டேட்டா சென்ட்ரிக் லேப்ஸ் ஃபார் எமர்ஜிங் டெக்னாலஜிஸ் திட்டத்தின் கீழ் “இன்டெல்l ® உன்னதி” திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவையான திறன்களைப் பெறுவதற்கும், சிறந்த எதிர்காலத்திற்காக அவர்களை தயார்ப்படுத்துவதற்கும் பெரிதும் உதவும்’’ என்றார்.
இன்டெல் ஆய்வகம் (Intel lab), பிசினஸ் இன்குபேட்டருடன் (சி.ஐ.ஐ.சி) தொடர்புடையதாக இருப்பதால், ஸ்டார்ட்–அப் நிறுவனங்கள் தங்கள் ஆராய்ச்சியைச் செயல்படுத்தவும், நிஜ உலகப் பிரச்னைகளுக்குத் தீர்வுகளை வெளிப்படுத்தவும் இது ஓர் இடத்தை வழங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.