காசியின் தொன்மையான பாரம்பரியம் மற்றும்  கலாச்சாரத்தை கொண்டாடும் 3 நாள் “காசி உத்சவ்” பெருவிழா வாரணாசியில் கொண்டாடப்படுகிறது

0
140

காசியின் தொன்மையான பாரம்பரியம் மற்றும்  கலாச்சாரத்தை கொண்டாடும் 3 நாள் காசி உத்சவ்பெருவிழா வாரணாசியில் கொண்டாடப்படுகிறது

புதுதில்லிநவம்பர் 15, 2021

காசி நகரின் தொன்மையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கொண்டாடும் வகையிலான 3 நாள் காசி உத்சவ் எனும் பெருவிழாவிற்கு வாரணாசியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கோஸ்வாமி துளசிதாஸ், சந்த் கபீர், சந்த ராய்தாஸ், பார்தந்த் ஹரிச்சந்திரா, முன்ஷி பிரேம்சந்த், ஜெய்சங்கர் பிரசாத் போன்றவர்களை போற்றும் விதத்திலான நிகழ்ச்சிகள் வாராணாசியிலுள்ள ருத்ராக்ஷ சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கன்வென்ஷன் மையத்தில் நவம்பர் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் உத்தரப்பிரதேச மாநில அரசு மற்றும் வாரணாசி நிர்வாகத்தின் ஆதரவுடன் இந்திரா காந்தி தேசிய கலை மையம், சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவின் கீழ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. அமிர்தப் பெருவிழாவை நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளானதைக் குறிப்பிடும் வகையில் மத்திய அரசு கொண்டாடுகிறது.

உயரிய கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாறு கொண்ட காசி இந்த விழாவுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது, மிகப் பொருத்தமாகும். இந்தியாவின் நீளமான கங்கை நதி காசியின் வழியே பாய்கிறது. கலைஞர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் ஆதாரமாக காசி திகழ்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பின்கீழ் விழா கொண்டாடப்படுகிறது.

குழு விவாதங்கள், கண்காட்சிகள், திரைப்படக்காட்சிகள், இசை, நாடகம், நடன நிகழ்ச்சிகள் இதில் நடைபெறும். தேசிய நாடகப் பள்ளியின் கலைஞர்கள், ராணி லட்சுமிபாய், கூப் லாடி, மர்தாணி ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கிய நாடகமும் வரும் 18-ம் தேதி நடைபெறும்.

இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் படைப்புகளான திரைப்படங்களும் காண்பிக்கப்படும்.