கல்வித் துறையை உருமாற்றும் இன்டராக்டிவ் டிஸ்பிளேயை சென்னையில் நிறுவியுள்ளது ஸ்மார்ட் டெக்னாலஜீஸ்!
சென்னை, இன்டராக்டிவ் டெக்னாலஜீயில் (Interactive Technology) உலகளாவிய முன்னணி நிறுவனமாகிய ஸ்மார்ட் டெக்னாலஜீஸ் (SMART Technologies), சென்னையில் தனது சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் போர்டு எம்.எக்ஸ். சீரீஸ்® (SMART Board MX Series®) மற்றும் ஸ்மார்ட் போர்டு ஜி.எக்ஸ். சீரீஸ்® (SMART Board GX Series®) ஆகிய இரு இன்டராக்டிவ் டிஸ்ப்ளேகளை (Interactive Displays) இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இன்டராக்டிவ் தொழில்நுட்ப சந்தையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான உலகளாவிய அனுபவத்துடன் உள்ளூர் விநியோக நிறுவனங்கள், இந்தியாவிலேயே உற்பத்தி, திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட உள்ளூர் கல்வி சார்ந்த உள்ளடக்கம் ஆகியவற்றை இது கொண்டுள்ளது. இந்தியக் கல்வி சூழல்களில் ஏற்படும் உருமாற்றத்தை ஆதரிக்கும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, கற்றல் விளைவை மையமாகக் கொண்ட தொழில்நுட்பத்துடன் இந்தியப் பள்ளிகளுக்கு ஏற்ற வகையில் ஸ்மார்ட் டிஸ்பிளே தனித்துவமாக அமைந்துள்ளது.
ஸ்மார்ட்டின் இன்டராக்டிவ் டிஸ்ப்ளேக்கள் மற்றும் மென்பொருளானது, ஆசிரியர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும், மாணவர்களை கற்றலில் ஈடுபடுத்தும் வகையிலும் பயன்படுத்த எளிதான அம்சங்களுடன் வாழ்க்கைக்கான கற்றலைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எம்.எக்ஸ் சீரிஸில் ஸ்மார்ட் ஐ.க்யு.® (SMART iQ®) உட்பட – தனித்துவமான அம்சங்கள் மற்றும் விருப்பங்களுடன் கூடிய இந்த ஸ்மார்ட் டிஸ்பிளே உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்விக்காக வடிவமைக்கப்பட்ட, கணினி தீர்வைக் கொண்ட இந்த டிஸ்பிளே முதல் நாளிலிருந்து பயன்படுத்த எளிதானது. சந்தையில் தனித்துவமான மாணவர் ஈடுபாடு மற்றும் மேம்படுத்தல் விருப்பங்கள் ஆகியவற்றை இந்த ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்கள் கொண்டுள்ளன. மேலும் மற்ற பிராண்டுகளைவிட குறைவான சக்தியை இவை பயன்படுத்துகின்றன. ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்கள் நீடித்து நிலைத்திருப்பது மட்டுமில்லாமல், வகுப்பறையின் தேவைகளுக்கு ஏற்றவாறும் உருவாக்கப்படுகின்றன.
இந்த நிறுவனம் இந்தியாவில் உள்நாட்டிலேயே உற்பத்தியை மேற்கொள்கிறது. தன் உற்பத்தி திறன்களை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், இந்திய சந்தை மீதான தன் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்திவருகிறது. நிரூபிக்கப்பட்ட திறன் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரானிக் உற்பத்திச் சேவை நிறுவனங்களில் ஒன்றான இ.எம்.எஸ். (Electronic Manufacturing Services – EMS) நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் ஸ்மார்ட் நிறுவனமானது, துல்லியமான தரத்துடன் இன்டராக்டிவ் பிளாட் பேனல்களை உற்பத்தி செய்கிறது. இந்த உள்ளூர் பணியானது விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துதல், உள்ளூர் உற்பத்தித் திறனை அதிகரிப்பது, பிராந்தியத்திற்குள் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
இது குறித்து ஸ்மார்ட் டெக்னாலஜீஸின் நிர்வாகத் துணைத் தலைவர் திரு. ஜெஃப் லோவ் (Mr. Jeff Lowe) கூறுகையில், “இன்டராக்டிவ் டச் தொழில்நுட்ப வெளியில் முன்னோடிகளாகவும் தலைமையாகவும் இருக்கும் எங்கள் நிறுவனம், இந்தியாவில் அறிமுகமாகியிருப்பது மாறிவரும் சந்தைக்கான எங்கள் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வித் துறைத் தலைவர்கள் ஆகியோரிடையே முக்கியமான தொடர்புகளை உருவாக்க உதவுவோம் என்பதே நாங்கள் அளிக்கும் வாக்குறுதி. இந்த வாக்குறுதியையும் எங்கள் முன்னணி தயாரிப்புகளையும் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்களிடம் கொண்டு செல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஸ்மார்ட் நிறுவனம் இங்கே தொடர்ந்து தாக்கம் செலுத்தப் போகிறது என்பதை தனியாகச் சொல்லத் தேவையில்லை. மேலும் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்றார்.
கூடுதலாக, இந்தியாவில் மூன்று முதல்கட்ட ஸ்மார்ட் முன்மாதிரி பள்ளிகளை அறிவிப்பதில் ஸ்மார்ட் நிறுவனம் மகிழ்ச்சி அடைகிறது. கல்வி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நேர்மறையான கற்றல் விளைவுகளை வழங்குவதில் புதுமையான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் மதிப்புமிக்க 35-க்கும் மேற்பட்ட உலகளாவிய பள்ளிகளுடன் இந்த மூன்று இந்தியப் பள்ளிகளும் பெருமையுடன் இணைகின்றன. மும்பையில் உள்ள ஜி.இ.ஐ.-யின் சுபேதார் வாடா மீடியம் பள்ளி (GEI’s Subhedar Wada Medium School), சென்னையில் உள்ள சுரானா ஹைடெக் இன்டர்நேஷனல் பள்ளி (Surana High Tech International School), பெங்களூருவில் உள்ள சென்ஸ் கலைடாஸ்கோப்ஸ் (Sense Kaleidoscopes) ஆகியவை ஸ்மார்ட் எக்செம்ப்ளரி பள்ளிகளாக (SMART Exemplary Schools) இனி அறியப்படும். நாட்டிலேயே இந்த கௌரவத்தைப் பெறும் முதல் பள்ளிகள் இவை.
கூடுதல் விவரங்களுக்கு: www.smarttech.com