ஏர்டெல் அதிரடி முடிவு: பிரீபெய்டு கட்டணம் 25% உயர்வு!

0
209

ஏர்டெல் அதிரடி முடிவு: பிரீபெய்டு கட்டணம் 25% உயர்வு!

ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்ட் திட்டங்களுக்கான கட்டணத்தை, 20 முதல் 25 சதவிகிதம் உயர்த்துவதாக இன்று அறிவித்துள்ளது. புதிய கட்டணங்கள் நவம்பர் 26-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் அதன் போஸ்ட் பெய்டு திட்டங்களுக்கான கட்டண விகிதத்தை கடந்த ஜூலை மாத்ம் அதிகரித்தது. இந்நிலையில் தற்போது ப்ரீ பெய்டுக்கான கட்டண விகிதத்தையும் ஏர்டெல் அதிகரித்துள்ளது. உயர்த்தப்படும் கட்டண விவரம் பின்வருமாறு:

ரூ .79 ஆக இருந்த ரீசார்ஜ் பிளான் இனி, ரூ.99-ஆகவும், ரூ.149 ஆக இருந்த ரீசார்ஜ் பிளான் ரூ.179 ஆகவும் அதிகரிக்கப்பட இருக்கிறது. இதே போல ரூ.1,498 ஆக இருந்த ரீசார்ஜ் பிளான் ரூ. 1,799 ஆகவும் ரூ. 2,498 ஆக இருந்த பிளான் ரூ. 2,999 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.

இதுபோல, டாப் அப்களுக்கு இப்போது ரூ.48 பிளான் ரூ.58 ஆகவும், ரூ.98 பிளான் ரூ.118 ஆகவும் ரூ.251 பிளான் ரூ. 301 ஆகவும் உயர்த்தப்படுகிறது. இந்த திடீர் கட்டண உயர்வு ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.