எலான் மஸ்க் செலுத்தப்போகும் வரித்தொகை இத்தனை கோடியா?

0
137

எலான் மஸ்க் செலுத்தப்போகும் வரித்தொகை இத்தனை கோடியா?

அமெரிக்கா, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான இவரை, அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் மாத இதழ், இந்த ஆண்டுக்கான சிறந்த நபராக சமீபத்தில் தேர்வு செய்திருந்தது.

இவருக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும், இவருக்கு எதிராக ஒரு பிரிவினரும் எப்போதும் சமூக வலைத்தளத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிடுவது வழக்கம். இந்த நிலையில் இவர் சரியாக வருமான வரி கட்டுவதில்லை என சமூக வலைத்தளத்தில் இவருக்கு எதிராக சிலர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி தரும் விதமாக தற்போது எலான் மஸ்க் டுவிட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் தான் இந்த வருடம் ரூ.83,000 கோடி வரி செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வரி தொகையை அவர் செலுத்தும் பட்சத்தில் அமெரிக்காவில் ஒரு தனிநபர் செலுத்திய அதிகபட்ச வரியாக அது இருக்கும்.