‘உயர்மேன்மையை ஒரு பழக்கமாக ஆக்குவது’ (Making Excellence a habit) – என்ற தலைப்பில் டாக்டர் வி. மோகன் அவர்களின் சுய வரலாறு நூல் வெளியீடு

0
260

‘உயர்மேன்மையை ஒரு பழக்கமாக ஆக்குவது’ (Making Excellence a habit) – என்ற தலைப்பில் டாக்டர் வி. மோகன் அவர்களின் சுய வரலாறு நூல் வெளியீடு

நேர்மறை சிந்தனை வழியாக தனது வெற்றிப்பயணத்தை விவரிக்கிறார்

~ அச்சங்களையும், தோல்விகளையும் புறம்தள்ளி வெற்றியினை எட்டுவது குறித்து பேசும் இந்நூல், டாக்டர் வி. மோகன் அவர்களின் வாழ்க்கை பயணத்தின் பல்வேறு கட்ட நிகழ்வுகளை சுவைபட சித்தரிக்கிறது ~

சென்னை, 3 மார்ச் 2021: நீரிழிவியலில் ஆராய்ச்சி மற்றும் புதிய மேம்பாடுகள் என்ற இலக்கிற்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்திருக்கிற இந்தியாவின் முன்னணி நீரிழிவியல் நிபுணரும், பத்மஸ்ரீ விருதால் இந்திய அரசால் கௌரவிக்கப்பட்டவருமான டாக்டர் வி. மோகன், ‘உயர்மேன்மையை ஒரு பழக்கமாக ஆக்குவது’ (Making Excellence a habit) என்ற பெயரில் அவர் எழுதியிருக்கும் நூலை இம்மாநகரில் இன்று வெளியிட்டார். இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த சுகாதார பராமரிப்பு அமைப்பை உருவாக்குவதன் பின்புலத்திலிருந்த இரகசியங்களை வெளிப்படுத்துகிற டாக்டர். வி. மோகன் அவர்களின் அண்மை நூலான இது, அனைத்து வயது பிரிவையும் சேர்ந்த மக்களுக்கு ஊக்கமும், உத்வேகமும் நிச்சயமாக தரக்கூடிய ஆற்றல் வாய்ந்த வாழ்க்கை நிகழ்வுகளது குறிப்புகளின் வழியாக வெற்றியை ஈட்டுவதற்கான ஒரு கையேடாக திகழ்கிறது. பென்குயின் ரேண்டம் ஹவுஸ்-ஆல் பதிப்பிடப்பட்டுள்ள ‘உயர்மேன்மையை ஒரு பழக்கமாக ஆக்குவது’ (Making Excellence a habit) என்ற இந்நூல், டாக்டர் வி. மோகன்-ன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்கள் வழியாக பயணிக்கிறது. மருத்துவம் மற்றும் அறிவியலோடு ஆன்மிகமும், கனிவான புரிந்துணர்வும் எப்படி நேர்த்தியாக சங்கமம் ஆக முடியும் என்று இப்புத்தகம் எடுத்துரைக்கிறது.

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி மற்றும் சுந்தரம்-கிளேட்டன் லிமிடெட்-ன் தலைவர் திரு. வேணு ஸ்ரீனிவாசன் அவர்கள் இப்புத்தகத்தை வெளியிட, ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான திரு. ராஜீவ் மேனன், சங்கர நேத்ராலயாவின் விழிப்படிக சேவைகள் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ராஜீவ் ராமன், மெட்ராஸ் ஈஎன்டி ரிசர்ச் பவுண்டேஷனின் நிர்வாக இயக்குநர் டாக்டர். மோகன் காமேஷ்வரன், மற்றும் சூரியா ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் பப்ளிக் ஹெல்த் சென்டரின் இதய – நெஞ்சக அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் எம். பி. நரேஷ் குமார் ஆகிய பிரபல ஆளுமைகள் இந்நூலின் முதல் பிரதிகள் பெற்றுக் கொண்டனர்.

டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் தலைவரும், நீரிழிவியல் துறையின் முதன்மை நிபுணருமான டாக்டர் வி. மோகன் இந்த நூல் வெளியீடு குறித்து பேசுகையில், “நீரிழிவியலோடு எனது பயணம் தொடங்கிய சென்னை மாநகரில் எனது சுய வரலாற்று நூலை வெளியிடுவதில் நான் மகிழ்கிறேன். இந்த நீண்ட பயணத்தை எழுத்துகளில் இடம்பெறுமாறு செய்திருக்கும் இந்த படைப்பாக்க அனுபவம், என்னை தாழ்ச்சி உணர்வுக்கு உட்படுத்திய அதே வேளையில், உயர்மேன்மை நிலையை விடா முயற்சியோடு எட்டுவதற்கும் எனக்கு ஊக்கமளித்தது. நீரிழிவியல் துறையில் பல புத்தாக்கங்களை எப்படி நாங்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு பல புதிய கண்டுபிடிப்புகளை செய்து இந்தியாவை நோக்கி உலகமே திரும்பிப் பார்க்கிறவாறு  செய்தோம் என்று சித்தரிக்கிற ஒரு நூலாக ‘மேக்கிங் எக்செலென்ஸ் ய ஹேபிட் (Making Excellence a Habit) திகழ்கிறது. மன உறுதி, விடா முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் தளர்ச்சியிலிருந்து மீண்டெழும் திறன் ஆகிய பண்புகள் எத்தகைய மாற்றத்தை மக்களுக்கு ஏற்படுத்தும் என்பதை வாசகர்களுக்கு எடுத்துக்கூறுவதே இந்நூலில் இடம்பெற்றுள்ள பல்வேறு நிகழ்வுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் வாழ்க்கைக் கதையின் சித்தரிப்புக்கான நோக்கமாகும். இப்பண்புகள் அனைத்தும் நேர்மறை சிந்தனையின் சக்தியோடு ஒன்று சேரும்போது வியக்கத்தக்க மாற்றமும், வெற்றியும் சாத்தியமாகும். இப்புத்தகத்திலுள்ள பல்வேறு நிகழ்வுகள் வாசகர்களை இதனோடு ஈடுபாட்டுடன் ஒன்றிக்குமாறு தூண்டி எனது பயணத்தில் இணைந்து பயணிக்குமாறு செய்யும் என்று நான் நம்புகிறேன்,” என்று கூறினார்.

ALSO READ:

Dr. V. Mohan launches his autobiography – Making Excellence a habit; Charts the journey of success through positive thinking

டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர். ஆர். எம். அஞ்சனா, அவரது தந்தையின் உத்வேகமும், பயணம் பற்றி ஒரு விரிவான கண்ணோட்டத்தை தனது உரையில் வழங்கினார். ஒரு மருத்துவராக, ஆராய்ச்சி அறிவியலாளராக மற்றும் ஒரு தொழில் நிறுவன தலைவராக வெற்றிபெற்றிருக்கும் அவரது குறிப்பிடத்தக்க பண்புகளையும், அம்சங்களையும் சுருக்கமாக கோடிட்டு காட்டினார். இந்த நூல், பல இளம் மற்றும் எதிர்கால மருத்துவர்கள், அறிவியலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு அவர்களது மனதில் சாதிக்க வேண்டும் என்ற தீப்பொறியை உருவாக்கும் என்றும் அவர் விளக்கிக்கூறினார்.

மிகப்பெரிய அளவில் ஆராய்ச்சி, கல்வி மற்றும் அறச்செயல்பாடுகளுக்கு பங்களிப்பு செய்து இந்தியாவில் தற்போது மருத்துவப் பணியை தொடர்ந்து செய்கிற சில மருத்துவர்களில் ஒருவரது வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட ‘Making Excellence a Habit’ என்ற இந்நூல், அர்த்தமுள்ள வெற்றியை சாதிக்குமாறு ஒரு நபரை செய்வது எவை என்ற அடிப்படை அம்சங்களை ஆவணப்படுத்துகிறது. கடும் உழைப்பு, தளராத பேரார்வம் மற்றும் கூர்நோக்கம் ஆகியவை வெற்றிக்காண பாடங்களாக இருக்கின்ற நிலையில் கனிவான புரிந்துணர்வு மற்றும் ஆன்மிகம் போன்ற அம்சங்களும் டாக்டர் மோகன் அவர்களின் வாழ்க்கையில் கவனத்திற்குரிய கற்றல்களாக இருந்திருப்பது இப்புத்தகத்தில் தவறவிடப்படவில்லை. புத்திசாலித்தனமான மற்றும் நட்புறவான டாக்டர் மோகன் அவர்களது குரல் மற்றும் நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்நூலில், நீரிழிவுக்கான ஒரு கண்காட்சி அல்லது நாடுமுழுவதிலும் நீரிழிவு மீதான ஒரு ஆய்வை நடத்துவது போன்ற அவரது தைரியமான வழக்கத்திற்கு மாறான சிந்தனைகள் ஆகியவற்றின் எடுத்துக்காட்டுகள் வெவ்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. நீரிழிவு பாதிப்புள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு புதிய பாதை படைக்கும் உயர் சிகிச்சை பராமரிப்பை வழங்கியதற்காக சர்வதேச அளவில் கௌரவிக்கப்பட்ட ஒரு நபரின் வாழ்க்கையில் திரைக்கு பின்னே நிகழ்ந்த நிகழ்வுகளின் சித்தரிப்பாக இந்நூல் திகழ்கிறது.

டாக்டர் வி. மோகன் அவர்களுடன் தங்களது அனுபவங்கள் மற்றும் பயணம் குறித்து தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்ட கௌரவ விருந்தினர்கள் இந்த சிறப்பான சாதனை மரபை இன்னும் உயரத்திற்கு எடுத்துச் செல்வதற்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை டாக்டர் வி. மோகன் அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டனர். மக்களுக்கு சேவையாற்றுவதில் அவர் கொண்டிருக்கும் பேரார்வம், நன்னெறி, நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புறுதி ஆகிய சிறப்பான பண்புகளையும் மற்றும் உலகில் நீரிழிவு மீதான ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையில் இந்தியாவே முன்னிலை பெறுமாறு செய்ய உலகத்தரத்தில் சிகிச்சைக்கான கட்டமைப்பை உருவாக்கியதற்காகவும் புகழ்ந்து பாராட்டினர்.

இந்நூலின் ஆசிரியர் குறித்து:டாக்டர். வி. மோகன் அவர்கள், இந்தியாவில் 8 மாநிலங்களில், 32 நகரங்களில் மற்றும் 50 மையங்களின் வழியாக 5,00,000 நபர்களுக்கு நீரிழிவுக்கான சிகிச்சையை வழங்கிய அனுபவத்தைக் கொண்ட இந்தியாவின் முன்னணி நீரிழிவியல் நிபுணராவார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதால் கௌரவிக்கப்பட்டிருக்கும் டாக்டர் மோகன், நீரிழிவியல் துறையில் அவரது பணி மற்றும் ஆராய்ச்சிக்காக தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார். டாக்டர். பி. சி. ராய் விருது (இந்திய மருத்துவ கவுன்சில்), டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் நூற்றாண்டு விருது (ICMR) ஆகியவை இவற்றுள் சிலவாகும். ரூ. 699/- (கனமான அட்டையுடன்) என்ற விலையில் வெளிவந்திருக்கும் ‘Making Excellence a Habit’ இந்நூல், முன்னணி புத்தக கடைகள் அனைத்திலும் மற்றும் மின்-வர்த்தக செயல்தளங்களில் கிண்டில் பதிப்பாகவும் கிடைக்கிறது.