இளைஞர்களின் கிரிக்கெட் கனவை நினைவாக்கும் வகையில் தொடங்கப்படவுள்ள South India Schools Cricket Associations  அமைப்பின் தலைவராக ஜான் அமலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

0
86
இளைஞர்களின் கிரிக்கெட் கனவை நினைவாக்கும் வகையில் தொடங்கப்படவுள்ள South India Schools Cricket Associations  அமைப்பின் தலைவராக ஜான் அமலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 இளைஞர்களின் கிரிக்கெட் கனவை நனவாக்கும் விதமாக சௌத் இந்தியன் ஸ்கூல் கிரிக்கெட் அசோசியேசன்  (South India Schools Cricket Associations) அமைப்பு தொடங்கப்பட உள்ளதாக அமைப்பின் நிர்வாகிகள்  ஜான் அமலன்,பிரதீப் குமார், ஏபிஜேஎம்ஜே ஷேக் சலீம், ஜோஷ்வா எடிசன், குடந்தை அஷ்ரப், விக்னேஷ் மாஜினி  ஆகியோர்  அறிவித்துள்ளனர்
 
இந்தியாவில் அதிக மக்களால் விளையாடப்படும் மற்றும் விரும்பப்படும் விளையாட்டு கிரிக்கெட் போட்டி ஆனால், பலர் திறமை இருந்தும் கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்க முடியாமல் போகிறது. காரணம், இளம் வயதில் திறமையாக கிரிக்கெட் விளையாடும் பலருக்கு அடுத்த கட்டத்திற்கு செல்ல வழி தெரியாததும், சரியான வழிகாட்டி இல்லாததும் தான்.
 
அந்த வகையில் கிரிக்கெட்டில் திறமை மிக்க இளைஞர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வதோடு  திறமையாளர்களை தேசிய அளவிலான போட்டிகளில்  பங்கேற்க வைப்பதற்கான தளமாக South India Schools Cricket Associations தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
 
பள்ளி காலத்திலேயே இளைஞர்களை ஊக்குவித்து கிரிக்கெட் உலகில் ஜொலிக்க வைக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவராக ஜான் அமலன்  தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 
 மேலும் பொதுச்செயலாளராக பிரதீப்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். செயலாளராக ஜோஸ்வா எடிசன், பொருளாளராக குடந்தை அஷ்ரப் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
 
மேலும், South India Schools Cricket Associations கௌரவத் தலைவராக சினேகா நாயரும், தமிழ்நாடு ஸ்கூல் கிரிக்கெட் பெடரேஷன் கௌரவத் தலைவராக அப்துல்கலாம் அவர்களின் பேரனுமான ஏ.பி.ஜே.எம்.ஜே.ஷேக் சலீம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
 
தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெற உள்ள பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பதவி ஏற்க உள்ளனர்.