இரண்டு புதிய இருசக்கர மின்வாகன மாடல்களை வெளியிட்டது, டியான் மின்வாகன நிறுவனம்!

0
224

இரண்டு புதிய இருசக்கர மின்வாகன மாடல்களை வெளியிட்டது, டியான் மின்வாகன நிறுவனம்!

  • தமிழகத்தின் சிறுகுறுநடுத்தரத் தொழில் நிறுவனங்கள் & நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் துறைகளின் அமைச்சர் திருதா.மோஅன்பரசன்தமிழக அரசின் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமனோ தங்கராஜ் ஆகியோர் புதிய மின்வாகனங்களை அறிமுகப்படுத்தினர்!
  • இருசக்கர மற்றும் மூன்று சக்கர மின்வாகன மாடல்களின் விற்பனைக்காக ராமாபுரத்தில் ஒரு புதிய ஷோரூமையும் திறந்ததுஇந்நிறுவனம்!

 சென்னை, பவர்ட்ரான்ஸ் மொபிலிட்டி லிமிடெட் (Powertrans Mobility Ltd) நிறுவனத்திற்குச் சொந்தமான, வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட் வாகன பிராண்டாகிய டியான் மின்வாகன (DION Electric Vehicles) நிறுவனம், அகஸ்டா எஸ்.பி. (Augusta SP) இ-ஸ்கூட்டர், அஸ்டா எஃப்.ஹெச். (Asta FH) இ-ஸ்கூட்டர் ஆகிய இரண்டு புதிய தனித்துவமான இருசக்கர மின்வாகன மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இந்நிறுவனம் தனது புதிய ஷோரூமையும் சென்னை, ராமாபுரத்தில் திறந்துள்ளது.

டியான் தயாரிப்பு போர்ட்ஃபோலியோ (portfolio) ஏழு மின்வாகன மாடல்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்திற்கென தற்போது மூன்று ஷோரூம்கள், ஐந்து சர்வீஸ் சென்டர்கள் இயங்கி வருகின்றன. விரைவில் ஒரு சேவை வழங்குநருடன் கூட்டாக இணைந்து செயல்படவுள்ளதால், தமிழ்நாடு முழுவதும் 256 சர்வீஸ் சென்டர்களில் வாடிக்கையாளர்கள் இந்த வாகனங்களுக்கான சேவையைப் பெறமுடியும்.

தமிழகத்தின் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் & நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மாண்புமிகு அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன், தமிழக அரசின் பால்வளத் துறை மாண்புமிகு அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் ஆகியோர் இருசக்கர மின்வாகன மாடல்களை அறிமுகப்படுத்தி, புதிய ஷோரூமையும் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் வி.ஜி.பி. (VGP) குழும நிறுவனங்களின் தலைவர் செவாலியே டாக்டர் வி.ஜி. சந்தோஷம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திருமதி. ராதிகா செல்வி வெங்கடேஷ் பண்ணையார், பெங்களூரு ஏ.ஐ.ஓ.எஃப்.டி. வென்ச்சர்ஸ் லிமிடெடின் (AIOFT Ventures Limited) இயக்குநர் திரு. பிரசாந்த் விஜயம்மா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

பவர்டிரான்ஸ் மொபிலிட்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. எஸ்.எம். ஆண்டனி தாமஸ், நிர்வாக இயக்குநர் திருமதி. ஏ. அனுஷா மார்கரெட், இயக்குநர்கள் திருமதி. ஏ. ஆஷிகா ரிட், திரு. ஜே. வினோத் ஜெயராஜ், நிறுவனத்தின் நிதி ஆலோசகரும் ஏ. ஜான் மோரிஸ் & கோ பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரருமான திரு. ஏ. ஜான் மோரிஸ், சட்ட ஆலோசகரான மூத்த வழக்கறிஞர் திரு. பி. ஜீசஸ் மோரிஸ் ரவி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அகஸ்டா எஸ்.பி. இ-ஸ்கூட்டர் 7.5 கிலோ வாட் பீக் பி.எம்.எஸ்.எம். ஹப் (7.5 KW Peak PMSM Hub Motor) மோட்டாருடன் உயர் செயல்திறனைக் கொண்டது. மணிக்கு 120 கிமீ வேகத்தை இந்த வாகனம் எட்டும். மேம்பட்ட பிரேக்கிங் சிஸ்டம் (braking systems), ஃபிரென்ட் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் (front telescopic suspension) மூலம் பாதுகாப்பு, சௌகரியம் இந்த வாகனத்தில் உறுதி செய்யப்படுகிறது. அகஸ்டா எஸ்.பி. பின்புற ஸ்பிரிங் லோட் ஹைட்ராலிக் சஸ்பென்ஷனையும் (rear spring load hydraulic suspension), அஸ்டா எஃப்.ஹெச். பின்புற மோனோ ஸ்பிரிங் லோட் ஹைட்ராலிக் (mono spring load hydraulic) அமைப்பையும் கொண்டுள்ளன. இரண்டு மாடல்களிலும் ஆன்ட்டி-தெஃப்ட் லாக்குகள் (anti-theft locks), தெளிவான சாலைப் பார்வைக்கு முன்புற புரொஜெக்டர் எல்.இ.டி.கள், பின்புற எல்.இ.டி.கள் ஆகியவை அடங்கியுள்ளன.

அகஸ்டா எஸ்.பி. ஆனது 4.3 கி.வா. லித்தியம்-அயன் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 110 கிலோ மீட்டர் வரை ஒரு சார்ஜில் செல்லக்கூடியது. அதே நேரத்தில் அஸ்டா எஃப்.எஃச். இ-ஸ்கூட்டர் உச்சபட்ச செயல்திறனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு வாகனங்களும் 1 கே.வி.ஏ. சார்ஜர் மூலம் 4-5 மணி நேரத்தில் திறன்மிக்க வகையில் சார்ஜ் ஆகி, வேகம் – நவீன தொழில்நுட்பத்தை விரும்பும் வாகன ஓட்டிகளுக்கு நம்பகமான தேர்வாக விளங்குகின்றன. அகஸ்டா எஸ்.பி. இ-ஸ்கூட்டரின் விலை ரூ. 1,79,750, அஸ்டா எஃப்.ஹெச். இ-ஸ்கூட்டரின் விலை ரூ. 1,29,999 ஆகும். இரண்டு மாடல்களின் பேட்டரியும் 5 வருட வாரண்டியுடன் வருகிறது. இந்த இரண்டு மின்வாகனங்களுக்கும் வரும் செப். 23-ஆம் தேதி வரை ரூ. 22,000/- தள்ளுபடி சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பவர்டிரான்ஸ் மொபிலிட்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருஎஸ்.எம்ஆண்டனி தாமஸ் இது குறித்து கூறுகையில், “இரண்டு புதிய இருசக்கர மின்வாகன மாடல்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். புதுமை கண்டறிதல், சிறப்பை அடைதலுக்கான எங்கள் அர்ப்பணிப்புக்கு இவை சான்றாகும். இந்த வாகனங்களில் மேம்பட்ட பி.எம்.எஸ்.எம். மோட்டார்கள், அதிநவீன பேட்டரிகள், ஒவ்வொரு மாடலின் தேவைக்கு ஏற்ப சமீபத்திய மின் / மின்னணு அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. 2020-ஆம் ஆண்டில் நிறுவனத்தை நாங்கள் தொடங்கியதிலிருந்து, 3-சக்கர மற்றும் 2-சக்கர வாகனப் பிரிவுகளில் தலா இரண்டு மாடல்களை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளோம். அவற்றின் செயல்திறனுக்காக சந்தையிலிருந்து கிடைத்த நேர்மறையான எதிர்வினை நம்பமுடியாத அளவிற்கு எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. நாங்கள் தொடர்ந்து வளர்ந்து வருவதால், எங்களின் வாகன மாடல்களை விரிவுபடுத்துவதற்கும், இந்தியா முழுவதும் கிடைக்கும் வகையில் விநியோக வளையத்தை மேம்படுத்துவதற்கும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

மின்வாகனங்கள், அவற்றின் பாகங்களை பவர்ட்ரான்ஸ் மொபிலிட்டி லிமிடெட் உற்பத்தி செய்து வருகிறது. சார்ஜிங், ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை நிறுவுவதற்கான திட்டங்களையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் மின் பைக்குகள், இ-ஸ்கூட்டர்கள், மின் லோடு வாகனங்களை தயாரிப்பதில் தற்போது கவனம் செலுத்தி வருகிறது. ஆராய்ச்சி, மேம்பாடு, வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான பிரத்யேக குழுக்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்குப் பாருங்கள்: www.dionev.com