இந்துஸ்தான் கல்விக்குழுமம் சார்பில் இளங்கலை மருந்தியல் படிப்பை தேசிய மருந்தியல்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் வி.ரவிச்சந்திரன், சார்லஸ் ஜேசுதாசன்,டாக்டர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

0
158
இந்துஸ்தான் கல்விக்குழுமம் சார்பில் இளங்கலை மருந்தியல் படிப்பை தேசிய மருந்தியல்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் வி.ரவிச்சந்திரன், சார்லஸ் ஜேசுதாசன்,டாக்டர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சென்னை படூரில் உள்ள இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் வளாகத்தில் இந்த இளங்கலை மருந்தியல் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட  தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் வி. ரவிச்சந்திரன் சர்வதேச மரபியல் மருந்துகளில் இந்தியாவின் பங்கு குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மருந்துகள்  கண்டுபிடிப்பில் இந்தியாவின் பங்கை வலியுறுத்தும் வகையில்,  திறமையான  நபர்களை உருவாக்குவது எவ்வளவு  முக்கியமானது என்றும்,  இந்த படிப்பை தொடங்கி மருந்தியலில் இந்துஸ்தான் கல்விக்குழுமம் எடுத்துள்ள முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில்  ஜோகோ ஹெல்த் பொது மேலாளர் சார்லஸ் ஜேசுதாசன், இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸின் வேந்தர் டாக்டர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ், சார் வேந்தர்  அசோக் வர்கீஸ் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.