இந்தியா மற்றும் சீஷெல்ஸ் இடையே பொருளாதார, கலாச்சார உறவுகளை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொழில் தொடங்க அழைப்பு

0
172
இந்தியா மற்றும் சீஷெல்ஸ் இடையே பொருளாதார, கலாச்சார உறவுகளை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொழில் தொடங்க அழைப்பு.
சென்னை தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி,  இந்தியா மற்றும் சீஷெல்ஸ் நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு, குத்துவிளக்கு  ஏற்றபட்டு தொடங்கியது.
இதில் இருநாட்டு உறவுகளையும், வாய்ப்புகளையும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.  இந்திய காமன்வெல்த் வர்த்தக கவுன்சிலின் கெளரவ வர்த்தக ஆணையர் திரு. கருணாநிதி வைத்தியநாதசாமி வரவேற்புரை வழங்கினார்.
இந்திய பொருளாதார வர்த்தக அமைப்பின் தலைவர். டாக்டர். இக்பால் இருநாட்டு உறவுகளின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு , பல்வேறு துறைகளில் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்தியாவிற்கான சீஷெல்ஸ் தூதரக அதிகாரி  திருமதி. லலாதியானா அக்கோச்  இந்தியா-சீஷெல்ஸ் உறவுகளின் வளர்ச்சி  மற்றும் வளமான எதிர்காலம்  குறித்து பேசினார். அப்பொழுது அவர் பேசுகையில் சீசெல்ஸில் தொழில் தொடங்க அனை‌த்து விதமான வசதிகளும், சூழ்நிலையும் உள்ளது. இதனை இந்திய தொழில் முதலீட்டாளர்கள் தொழில் அதிபர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.  இந்திய காமன்வெல்த் வர்த்தக கவுன்சில் குழு இந்த செயல்முறையை தொடங்க அக்டோபர் மாதம் சீஷல்ஸ் செல்லவுள்ளது என்றார்.
சீஷல்ஸ் துணை தூதர்,   சென்னை ஐஐடி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.  மேலும்  சீஷல்ஸில் மனித திறன் மற்றும் மனித ஆற்றலைக் உருவாக்க இந்தியத் திறமையாளர்களை அழைக்க ஒத்துழைப்பதாக உறுதியளித்தார்.
நிகழ்ச்சியின்,  சிறப்பம்சமாக இந்தியா-சீஷெல்ஸ் உறவுகளின் தற்போதைய நிலை பற்றிய ஆழமான பகுப்பாய்வை வழங்கும் “இந்தியா சீஷெல்ஸ் அறிக்கை 2024” வெளியிடப்பட்டது.
தொடர்ந்து சென்னை ஐஐடி, மூலான், மதுரா டிராவல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்திய காமன்வெல்த் வர்த்தக கவுன்சிலின் பொதுச் செயலாளர் ஜே. ரங்கநாதன் நன்றியுரை வழங்கினார்.