இந்தியா சுதந்திரத்தின் 75-வது ஆண்டை முன்னிட்டு இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான முதல் வழிகாட்டல் திட்டத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்

0
97

இந்தியா சுதந்திரத்தின் 75-வது ஆண்டை முன்னிட்டு இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான முதல் வழிகாட்டல் திட்டத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.

புதுதில்லிஇந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டை முன்னிட்டு இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான முதல் வழிகாட்டல் திட்டத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தொடங்கி வைத்தார்.

நாட்டில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதன் மூலம், மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்க பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். பயோடெக்னாலஜி துறையின் ஆதரவுடன் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நட்சத்திரக் கல்லூரியை திட்டமிடும் அனைத்திந்திய திட்டம் இது என்றார் அவர்.

உயிரி தொழில்நுட்பத் துறையின் வழிகாட்டுதல் முன்முயற்சியான ஸ்டார் காலேஜ் மென்டர்ஷிப் திட்டம், குழுவாக செயல்படுதல், பயிற்சி மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றுக்கு உதவும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். மாதந்தோறும் பயிற்சி பட்டறைகள், கூட்டங்களை ஏற்பாடு செய்வதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் அல்லது குறைந்த வசதியுள்ள பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் அரசு பள்ளிகளுடன் இணைந்து தகவல் தொடர்பு செயல்பாடுகளை நடத்தப்படும்.

தொடக்க விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் இடையே உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், நட்சத்திரக் கல்லூரித் திட்டத்தின் கீழ் கல்லூரிகளின் வழிகாட்டுதல் நிகழ்ச்சி பிரதமரின் சுதந்திர தின உரையுடன் ஒத்துப்போகிறது என்று தெரிவித்தார்.

நாடு முழுவதும் மொத்தம் 278 இளங்கலை கல்லூரிகள் தற்போது நட்சத்திர கல்லூரி திட்டத்தின் கீழ் ஆதரவு பெறுவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். 2018-19-ம் ஆண்டில் இந்தத் திட்டத்தை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்களாக வகைப்படுத்தியதன் மூலம், நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு சமமான களம் உறுதி செய்யப்பட்டுள்ளது.