இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் சர்வதேச நடுவர்கள் முன்னிலையில் நடைபெறும் மாபெரும் சமையல் சவால் போட்டியை சுற்றுலாத்துறை தலைமை செயலாளர் மணிவாசன் தொடங்கிவைத்தார்

0
189
இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் சர்வதேச நடுவர்கள் முன்னிலையில் நடைபெறும் மாபெரும் சமையல் சவால் போட்டியை சுற்றுலாத்துறை தலைமை செயலாளர் மணிவாசன் தொடங்கிவைத்தார்.
சென்னை நந்தம்பாக்கதில் உள்ள வர்த்தக மையத்தில் தென்னிந்திய செஃப் அசோசியேஷனின் 6 வது சமையல் சவால் சர்வதேச செஃப் அசோசியேசன் சமூக (WACS) ஒப்புதலுடன் இந்த போட்டிகள், தென்னிந்திய செஃப் அசோசியேஷன் தலைவர் செஃப் தாமு, மற்றும் பொதுச்செயலாளர் செஃப் சீதாராம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில்  தொடங்கியுள்ளது.
 17 ஆம் தேதி வரை இந்த சமையல் போட்டி மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது. 18 ஆம் தேதி வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்ப்படுகின்றன. முதல் நாளான இன்று, சமையல் துறை வல்லுனர்கள், 5 நட்சத்திர உணவு விடுதிகளி்ன் முன்னணி சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட சுமார் 1000 பேர் போட்டிகளில் பங்கேற்றனர். இன்று த்ரீ டயர் வெட்டிங் கேக்,  பட்டர் மற்றும் மார்கரின் ஸ்கல்ப்சர், பரோட்டா மற்றும் லைவ் பிரியாணி பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவு போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.