இந்தியாவின் முதல் ‘புளூ சர்க்கிள்’ டவுன்ஷிப், சென்னையில் அறிமுகம்!

0
262
Lancor Launches “Harmonia”, India’s First ‘Blue Circle’ Townships for Senior Residences with Cross Generational Communities (L-R)  Mr. C. Murali, LANCOR Holdings Ltd.  Mr. R.V. Shekar, Chairman & Managing Director, LANCOR Holdings Ltd.  Mrs. Malliga Ravi, Former Managing Director, LANCOR Holdings Ltd.  Mr. V.K. Ashok, Chief Operating Officer, LANCOR Holdings Ltd.

இந்தியாவின் முதல் ‘புளூ சர்க்கிள்’ டவுன்ஷிப், சென்னையில் அறிமுகம்!

சென்னை, ஜூலை 05, 2022

தென்னிந்தியாவின் பிரபல கட்டுமான நிறுவனமாகிய – சென்னையைச் சேர்ந்த லான்கார் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (Lancor Holdings Limited), மூத்த குடிமக்களுக்கென ‘ஹார்மோனியா’ (Harmonia) என்ற பெயரில் புதிய டவுன்ஷிப்பை உருவாக்கவுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக அனைத்து தலைமுறையினரும் இடம்பெறும் வகையில் ‘புளு சர்க்கிள்’ (Blue Circle) என்னும் புதிய கான்செப்ட்டில் இந்த டவுன்ஷிப் வடிவமைக்கப்படவுள்ளது. இவை ஸ்ரீபெரும்புதூர், கூடுவாஞ்சேரி மற்றும் சோழிங்கநல்லூரில் கட்டப்படும்.

மூத்த குடிமக்கள், அவர்களுக்குப் பிடித்தமான வாழ்க்கையை வாழ ஏதுவான சூழல் இருக்கக்கூடிய வகையில் ‘புளூ சர்க்கிள்’ குடியிருப்புகள் அமையவுள்ளன. குறிப்பாக அவர்களது உடல் நலன், மகிழ்ச்சியான வாழ்க்கை, இளைய தலைமுறை உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுடன் உற்சாகமாக இணைந்து வாழ்வது போன்ற சூழலில் இது உருவாக்கப்படும்.

இந்த டவுன்ஷிப்பில் வில்லாக்கள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், மூத்த குடிமக்களுக்கேற்ப சுதந்திரமாகவும், அவர்களது தனிமை மற்றும் சவுகர்யம் பாதிக்கப்படாத வகையிலும் இருக்கும். மேலும் அனைத்து தலைமுறையினரும் அருகருகே வசிக்க இருப்பதால், மூத்த குடிமக்கள் இந்தக் குடியிருப்புகளில் தலைமுறைகளைக் கடந்து சந்தோஷமாக வாழ முடியும்.

ஸ்ரீபெரும்புதூரில், 900 சதுர அடி நிலப்பரப்பில் – 1,700 சதுர அடி அளவில் கட்டப்படும் 2 படுக்கையறைகள் கொண்ட குடியிருப்பின் விலை ரூ. 63 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரியில், 2 படுக்கையறைகள் கொண்ட வீட்டின் விலை ரூ. 30 லட்சம் முதல் ரூ. 48 லட்சம் வரையாகும். சோழிங்கநல்லூரில் 2 மற்றும் 3 படுக்கையறைகள் வீட்டின் விலை ரூ. 62.50 லட்சத்தில் ஆரம்பமாகிறது.

இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. வி.கே. அசோக் இது குறித்து கூறுகையில், “மூத்த குடிமக்களுக்கான குடியிருப்புகளை வடிவமைப்பதில் நிலவும் இடைவெளியைக் கருத்தில் கொண்டு ‘புளூ சர்க்கிள்’ குடியிருப்புகளை இந்நிறுவனம் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது. மூத்த குடிமக்களின் தேவையை உணர்ந்து இவை உருவாக்கப்பட்டுள்ளன. அவர்கள் வெறுமனே தங்களது பட்ஜெட்டை அடிப்படையாகக் கொண்டு வீடுகளை எதிர்நோக்கவில்லை, மாறாக அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க பயிற்சி பெற்றவர்களையும் எதிர்நோக்கியுள்ளனர். அனைவருடனும் இணைந்து அவர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நாங்கள் உணர்ந்தே இத்தகைய ஹார்மோனியா குடியிருப்புகளில் அனைத்து தலைமுறையினரும் இடம்பெறும் வகையில் உருவாக்கவுள்ளோம்” என்றார்.

ஹார்மோனியா ‘புளூ சர்க்கிளில்’ மூத்த குடிமக்களின் எதிர்பார்ப்புகளான சுகாதாரமான உணவு, சுறுசுறுப்பான வாழ்க்கை சூழல் உள்ளிட்டவை, இளைய சமுதாயத்தினருடன் இணைந்து உற்சாகமாக அனுபவிக்கும் வகையில் ஏற்படுத்தப்படும்.

இக்குடியிருப்புகளில் கிளப் ஹவுஸ், பூங்கா, நீச்சல் குளம், உடற்பயிற்சி அரங்கம், ரெஸ்டாரென்ட், விருந்தினருடன் உரையாட வரவேற்பறை, நூலகம், டென்னிஸ் மைதானம், பாட்மிண்டன் மைதானம், கோவில் மற்றும் அனைத்து பொருள்களும் கிடைக்கும் அங்காடி உள்ளிட்டவை இடம்பெறும்.