அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் ஏற்பாடு செய்த சுவாச மண்டலம் தொடர்பான நெஞ்சக சிகிச்சை மாநாட்டில் [Chest Summit] முன்னணி மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பு!
- இன்ப்ளூயன்ஸா பாதிப்புகளும் நீண்டகாலமாகத் தொடரும் கோவிட்டும் நோய்த்தொற்றுக்குப் பிறகான சூழலில் நிலையான சுகாதாரப் பிரச்சனைகளாக இருப்பதற்கு எதிராகத் திரண்டணர் மருத்துவ நிபுணர்கள்
சென்னை, அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் இன்று அப்போலோ செஸ்ட் சம்மிட் 2023 [Apollo Chest Summit 2023]-யை நடத்துவதன் மூலமாக இன்ப்ளூயன்ஸா பாதிப்பு அதிகரிப்பு மற்றும் நீண்டகால கோவிட் பாதிப்பினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமான முக்கிய நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளது. மருத்துவ நிபுணர்கள் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வை அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் நிர்வாக துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி [Ms. Preetha Reddy, Executive Vice Chairperson of the Apollo Hospitals Group] தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் மூத்த சுவாச மண்டல மருத்துவரும், எண்டோபிரான்சியல் அல்ட்ராசவுண்ட் மற்றும் பிரான்சியல் தெர்மோபிளாஸ்டி சர்வீசஸின் பொறுப்பாளருமான டாக்டர் ஆர்.நரசிம்மன் [Dr R Narasimhan, a Senior Respiratory Physician and In-charge of the Endobronchial Ultrasound and Bronchial Thermoplasty Services] இந்த மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். சுவாசக் கோளாறுகளுக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட ஆய்வுக் கலாசாரத்தை வளர்த்தெடுத்தாலும், சுவாச நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதை ஊக்குவிப்பதே இதன் முக்கிய இலக்காகும். சுவாச மண்டல மருத்துவத்தில் புகழ்பெற்று விளங்கும் மருத்துவ நிபுணர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்; அதில் சமீபத்திய இன்ப்ளூயன்ஸா அதிகரிப்பு, நீண்டகாலமாகத் தொடரும் கோவிட்டின் தாக்கம், நுரையீரல் மருத்துவச் சிகிச்சைகளில் நிகழ்ந்த சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த நுண்ணறிவுத் தரவுகளைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்நிகழ்வு குறித்து அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் நிர்வாக துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி (Ms. Preetha Reddy, Executive Vice Chairperson of Apollo Hospitals) பேசுகையில், “நோய்த்தொற்று உருவாக்கிய புதிய சவால்களுக்கு ஏற்ப சுகாதாரப் பராமரிப்பில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்கள் தயாராவது மிகவும் முக்கியம். அப்போலோ ஹாஸ்பிடல்ஸை பொறுத்தவரை, அந்த கிருமியின் புதிய உருமாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்; அதன் பாதிப்பைத் தவிர்ப்பதற்காக அதிநவீன சிகிச்சைகளை, அறுவைச்சிகிச்சை செயல்பாடுகளை, நோயைக் குணமாக்கும் மருத்துவ நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறோம். எங்களது தயார்நிலை, நிபுணத்துவம், பேரிடர் காலங்களில் எங்களது தீவிரமான சிகிச்சையளித்தல் செயல்பாடுகளை விளக்குவதற்கான ஒரு அற்புதமான தளமாக அப்போலோ செஸ்ட் சம்மிட் 2023 அமைந்துள்ளது” என்று தெரிவித்தார்.
இந்த மாநாட்டின்போது, தற்போது இந்தியாவில் பரவிவரும் இன்ப்ளூயன்ஸா தொற்றானது இன்ப்ளூயன்ஸா ஏ மற்றும் பி வகைகளின் கலவையாக இருப்பது குறித்து மருத்துவர்கள் விவாதித்தனர்; இது எளிதாகத் தொற்றுவதோடு, சிகிச்சையளிப்பதற்குச் சவாலாகவும் உள்ளது பற்றியும் கலந்துரையாடினர். அப்போலோ ஹாஸ்பிடல்ஸின் தொற்றுநோய்கள் பிரிவு சிறப்பு மருத்துவரான டாக்டர் சுரேஷ்குமார் (Dr. Suresh Kumar, an Infectious Diseases Specialist at Apollo Hospitals) இன்ப்ளூயன்ஸா மற்றும் நீண்டகாலமாகத் தொடரும் கோவிட்டுக்கு இடையேயான தொடர்பைக் குறிப்பிட்டார்; இறப்பை ஏற்படுத்தும் முக்கியக் காரணிகளில் ஒன்றாக வைரஸ் தொற்றான நிமோனியா இருப்பதைச் சுட்டிக்காட்டினார். நோய்த்தன்மை மற்றும் மரணத்திற்குக் காரணமாக விளங்கும் கடுமையான வைரஸ் பாதிப்புகள், இடைநிலை நுரையீரல் நோய்களைத் தடுப்பூசிகளால் தடுக்க முடியும் என்று தெரிவித்தார்.
அப்போலோ ஹாஸ்பிடல்ஸின் சுவாச மருத்துவ நிபுணரான டாக்டர் அஜய் நரசிம்மன் [Apollo Hospital’s Respiratory Medicine expert Dr. Ajay Narasimhan] அதிநவீன சிகிச்சைகள் எந்தளவில் கிடைக்கின்றன என்பதைக் குறிக்கும் வகையில் ரோபாடிக் தோரசிக் அறுவைச்சிகிச்சையில் (robotic thoracic surgery) உள்ள சிறப்பு வசதிகளைச் சுட்டிக்காட்டினார். சுகாதாரப் பராமரிப்பில் அப்போலோ ஹாஸ்பிடல்ஸின் அதிநவீனச் சிகிச்சை செயல்பாடுகளுடன் இணைந்து இந்த சிகிச்சைமுறைகள் குறிப்பிடத்தக்க அளவில் வலியைக் குறைக்கிறது மற்றும் நோயாளியின் திருப்தியை அதிகப்படுத்துகிறது என்பதை வலியுறுத்தினார்.