அசோக் லேலண்ட் நிறுவனம்,  படா தோஸ்த் ஐ1 (BADA DOST i1) மற்றும் படா தோஸ்த் ஐ 2 (BADA DOST i2) அறிமுகம் மூலம் தனது இலகு ரக வணிக வாகன (எல்சிவி LCV) தயாரிப்புகளை விரிவுபடுத்துகிறது!! 

0
215

அசோக் லேலண்ட் நிறுவனம்,  படா தோஸ்த் ஐ1 (BADA DOST i1) மற்றும் படா தோஸ்த் ஐ 2 (BADA DOST i2) அறிமுகம் மூலம் தனது இலகு ரக வணிக வாகன (எல்சிவி LCV) தயாரிப்புகளை விரிவுபடுத்துகிறது!! 

 • ஆண்டுவிழா பதிப்பாக படா தோஸ்த் லிமிடெட் எடிஷன் வாகனத்தையும் அசோக் லேலண்ட் வெளியிடுகிறது

சென்னை,  இந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமாகத் திகழும் இந்தியாவின் முன்னணி வணிக வாகன உற்பத்தியாளரான அசோக் லேலண்ட், படா தோஸ்த் வாகன தயாரிப்புகளில் புதிதாக படா தோஸ்த் ஐ1 மற்றும் படா தோஸ்ட் ஐ2  ஆகிய இரு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் அசோக் லேலண்ட் நிறுவனம், வணிக வாகன தொழில்துறையில் முதல் முறையாக இதுவரையில் இல்லாத பல்வேறு புதிய அம்சங்களுடன் படா தோஸ்த் லிமிடெட் பதிப்பையும் (BADA DOST Limited Edition) அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய அறிமுக வாகனங்களான படா தோஸ்த் ஐ1 மற்றும் ஐ2 பேலோட் [payload]-ஐ பொருத்தவரை முறையே 1250 கிலோ கிராம் மற்றும் 1425 கிலோ கிராம் தாங்குமளவிற்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வகைகளில் ஐ1 1750 மில்லி மீட்டர் அகலம் மற்றும் 2596 மில்லி மீட்டர் (8.5 அடி) நீளமான டெக்-கை கொண்டுள்ளது. ஐ2 2745 மில்லி மீட்டர் (9 அடி) நீள டெக்கை கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாகனம் இவ் வகையிலேயே மிகவும் மேம்பட்ட தயாரிப்பாகும். சிறந்த ஆற்றல், மைலேஜ், பேலோடு (சுமைத் திறன்), சுமை ஏற்றும் பகுதியின் நீளம் (லோட் பாடி லென்த்) மற்றும் சுமை ஏற்றுவதற்கான இட வசதி ஆகியவற்றுடன் உள்ள இந்த வாகனங்கள் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு பயணத்திலும் அதிக லாபம் ஈட்ட உதவுகின்றன. படா தோஸ்த் ஐ1 மற்றும் ஐ2 ஆகியவை நுண்ணறிவடன் குறைந்த டர்னிங் ஆரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை நகரங்களுக்குள் மற்றும் நகரங்களுக்கு வெளியே மேற்கொள்ளும் பயன்பாடுகளுக்கு மிகச் சிறந்ததாக அமையும் என்பதுடன் வெவ்வேறு வகையான நிலப்பரப்புகளுக்கும் ஏற்ற வாகனங்களாகத் திகழும்.

அசோக் லேலண்ட், புதிதாக படா தோஸ்த் லிமிடெட் எடிஷன் [BADA DOST Limited Edition]-யும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சென்ட்ரல் லாக்கிங் அம்சத்தை வழங்கும் முதல் வணிக வாகனமாகும். இது திருட்டு எதிர்ப்பு அம்சத்துடன் வாகனத்திற்குள் சாவி இல்லாத நுழைவு வசதியைக் கொண்டுள்ளது.  பொதுவாக இந்த அம்சம் பயணிகள் வாகனங்களில்தான் காணப்படும். வாகன ஓட்டும் போது ஓட்டுநர்களுக்கு கூடுதல் செளகரியத்தை அளிப்பதையும், வாடிக்கையாளர்களின் வாகன அனுபவத்தை மேம்படுத்துவதையும் முக்கிய நோக்கமாக கொண்டு இந்த வசதிகள் மிகுந்த அக்கறையுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் செயல் தலைவர் தீரஜ் ஹிந்துஜா (Dheeraj Hinduja, Executive Chairman, Ashok Leyland) இது குறித்துக் கூறுகையில், “பாடா தோஸ்த்-தின் இரண்டாம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்த தருணம் எங்களுக்கு ஒரு சிறப்பானதாகும். இந்தச் சந்தர்ப்பத்தில், எங்களின் படா தோஸ்த் வாகன வரம்பு வகையை விரிவுபடுத்தி, படா தோஸ்த் ஐ1 மற்றும் படா தோஸ்த் ஐ2 ஆகிய வகைகளை அறிமுகப்படுத்துகிறோம். ஏற்கெனவே இது தொடர்பாக நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

உலகளவில் வணிக வாகன உற்பத்தியாளர்களின் ’க்ளோபல் டாப் 10 பட்டியலில்’ இடம்பெற்றிருக்கும் ஒரு நிறுவனமாக முண்ணனி வகிக்க வேண்டுமென்பதே எங்களது தொலைநோக்குப் பார்வையாக இருக்கிறது. அந்த இலக்கை அடைவதற்கான எங்களது பாதையில், அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு பெரும் வளர்ச்சியை அளிக்கும் ஒன்றாக எங்களது இலகு ரக வணிக வாகனங்கள் (LCV) முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் படா தோஸ்த் வாகனங்கள் எங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச விற்பனையை விரிவுபடுத்துவதில் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றன.” என்றார்.

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இலகு ரக வணிக வாகனப் பிரிவுத் தலைவர் ரஜத் குப்தா (Rajat Gupta, Head – Light Commercial Vehicle, Ashok Leyland) கூறுகையில், “எங்களது தோஸ்த் மற்றும் படா தோஸ்த் பிரிவு வாகனங்கள் அவ்வாகனப்  பிரிவில் மிகவும் வெற்றிகரமான, பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் வாகனங்களாக உள்ளன. இந்நிலையில் எங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். படா தோஸ்த், வாடிக்கையாளர்களை மையமாக கொண்டு, மிகுந்த அக்கறையுடன் அறிமுகப்படுத்தப்படும் தயாரிப்பாக இருக்கிறது. மேலும் இத்தயாரிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு இதுவரையில்லாத சிறப்பான அனுபவத்தை அளிப்பதோடு, இதுவரை அவர்களிடம் பெற்றிருக்கும் நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையையும் மேலும் வலுப்பெற செய்யும். இந்த வகை வாகனங்கள் தற்போது 35,000-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் சாலைகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இது இந்த வாகனங்களின் அபாரமான வலிமையை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய தயாரிப்புகள் எங்கள் தயாரிப்புகளின் வரிசையை விரிவுபடுத்துவதோடு, இதுவரையில் இல்லாத அளவு சுமை தாங்கும் (பேலோட்) திறன் மற்றும் பயன்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கும். இதன் மூலம் எங்கள் இலகு ரக வணிக வாகனப் பிரிவு மேலும் வலுப்படும். இந்த இலகு ரக வாகனப் பிரிவில் தொடர்ந்து சந்தைப் பங்கை தீவிரமாகப் அதிகரிப்பதே எங்கள் நோக்கமாகும்.” என்றார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இரண்டு வகை வாகனங்களிலும், ஏஆர்ஏஐ (ARAI) எனப்படும் இந்திய வாகன ஆய்வு சங்கத்தால் சான்றளிக்கப்பட்ட 3-சீட்டர் வாக்த்ரூ கேபின் உள்ளது. இந்த அம்சம் சிறந்த வசதித் தன்மை மற்றும் இட வசதியை வழங்குகிறது. இது இந்த பிரிவிலேயே அகலமான கேபினுடன் வருகிறது. இதனால் மிகவும் விசாலமான பரப்பு மற்றும் இடவசதி கிடைக்கிறது. அகலமான இருக்கை வடிவமைப்பானது, பயணங்களுக்கு இடையே வசதியாக ஓய்வெடுக்க உதவும். இதை வாடிக்கையாளர், படுக்கையாக மாற்றி ஓய்வு எடுக்கலாம். பணியிலிருக்கும் போது கூட செளகரியத்தை அளிக்கும் வகையில் பணிச்சூழலியல் ரீதியாக அமைக்கப்பட்ட டேஷ் பொருத்தப்பட்ட கியர் ஷிப்ட் லீவர், டூயல் டோன் டேஷ்போர்டு மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை அழகியலை மேம்படுத்துவதோடு வாடிக்கையாளருக்கு சொகுசு கார் போன்ற அனுபவத்தை வழங்குகிறது. இந்த வாகனத்தில் ஏசி பொருத்தப்பட்டிருப்பதால், மிக கடுமையான கோடைக்காலத்தில் கூட வாடிக்கையாளர்கள் சோர்வடையாமல் கூடுதல் தூரம் ஓட்ட முடியும்.

படா தோஸ்த் ஐ1 (BADA DOST i1) மற்றும் ஐ2 (i2) வகைகளின் முக்கிய அம்சங்கள்:

 • ஐ1-ல் 1250 கிலோ கிராம் மற்றும் ஐ2-வில் 1425 கிலோ கிராம் பேலோடு எனப்படும் சுமைத் திறன்
 • இந்தப் பிரிவிலேயே அதிகமான டெக் அகலம் – 1750 மில்லி மீட்டர்
 • இந்தப் பிரிவில் மிக நீளமான டெக் நீளம் – ஐ1 – 2596 மில்லி மீட்டர் (5 அடி) மற்றும் ஐ2 – 2745 மில்லி மீட்டர் (9 அடி)
 • ஏஆர்ஏஐ (ARAI) சான்றளிக்கப்பட்ட டி+2 (D+2) இருக்கை அமைப்பு
 • இந்தப் பிரிவிலேயே அகலமான கேபின் – இது ஓட்டுநருக்கு சிறந்த வசதியை வழங்குகிறது
 • இந்தப் பிரிவிலேயே குறைந்த திருப்புதல் ஆரம் (turning radius) – ஐ1-இல் 6 மீட்டர் மற்றும் i2-வில் 11.3 மீட்டர்
 • 3 ஆண்டுகள் / ஒரு லட்சம் கிலோ மீட்டர் உத்தரவாதம்

படா தோஸ்த் லிமிடெட் எடிஷனின் முக்கிய அம்சங்கள்:

 • இந்த வாகனப் பிரிவிலேயே முதல் முறையாக திருட்டு எதிர்ப்பு அம்சத்துடன், வாகனத்திற்குள் சாவி அற்ற (கீலெஸ்) நுழைவு வசதியுடன் சென்ட்ரல் லாக்கிங் வசதி
 • மொபைல் இணைப்பு மற்றும் புளூடூத் அழைப்பு அம்சத்துடன் 7-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம். இது ஒவ்வொரு பயணத்தையும் மகிழ்ச்சிகரமானதாகவும் எளிதாகவும் மாற்றுகிறது.
 • சிறந்த பார்க்கிங் உதவிக்காக ரிவர்ஸ் கேமரா வசதி

அசோக் லேலண்ட் நிறுவனம் வணிக வாகனப் பிரிவில் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளரும் நெட்வொர்க் வசதிகளைக் கொண்ட நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. 1700-க்கும் மேற்பட்ட பிரத்தியேக விற்பனை நிலையங்களைக் கொண்ட இதன் வலுவான தொடர் செயல்பாட்டு வசதிகள் (நெட்வொர்க்) முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 75 கிலோ மீட்டருக்கும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட சேவை மையம் இருப்பதை உறுதி செய்கிறது. இத்துடன் கூடுதலாக லேகார்ட், அல் கேர் மற்றும் ஐ அலெர்டு (Leykart, ALCare & iALERT) ஆகியவற்றின் டிஜிட்டல் கருவிகளுடன் சந்தைக்குப்பிறகான ஆதரவை அசோக் லேலண்ட் வழங்குகிறது. இவற்றுடன் உள்ள 53 ஆயிரம் தொடர்பு முனைய மையங்கள் (டச் பாயிண்ட்) வாடிக்கையாளர்களை 4 மணி நேரத்திற்குள் சென்றடைந்து 48 மணிநேரத்தில் அவர்களை மீண்டும் சாலைப் போக்குவரத்துக்குக் கொண்டு வருவதற்கான வசதிகளை இந்த நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் அசோக் லேலண்ட் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்குல விரைவாக சேவை வழங்கி குறைகளைத் தீர்த்தல் (“Ashok Leyland Quick Response”) என்ற தனது வாக்குறுதியை நிறைவேற்றுகிறது.