ஃபேஷன் துறையில் சாதனை : ஊட்டியைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கு, ஆஸ்திரேலியாவின் புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

0
184
ஃபேஷன் துறையில் சாதனைகள் பல புரிந்துள்ள ஊட்டியைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கு, ஆஸ்திரேலியாவின் புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ளது. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த பல்கலைக் கழகம், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் தொலைதூர பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கல்விச் சேவையில் பல ஆண்டுகளாக சிறப்பான பங்களிப்பை அளித்து வந்த புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம், தற்போது உலகளவில் வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை சிறப்பிக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, கடந்த 10 ஆண்டுகளில் தத்தம் துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளவர்களுக்கு, புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக ஃபேஷன் துறையில் பல சாதனைகளைப் படைத்துள்ள ஊட்டியைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜான் அமலனின் பரிந்துரையின் பேரில், சதீஷ்குமாருக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. சென்னையை அடுத்த பாலவாக்கத்தில் நடைபெற்ற விழாவில், சதீஷ்குமாருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.