1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த கடம்பூர் கைலாசநாதர் திருக்கோயில்
செங்கல்பட்டு வட்டம் மறைமலைநகரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது கடம்பூர் கிராமம். இங்குள்ள கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கடம்பூர் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் 10.02.2019 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
8 ஆம் நூற்றாண்டில், காஞ்சிபுரம் மற்றும் மகாபலிபுரம் முழுவதும் பல கைலாசநாதர் கோயில்களை ராஜசிமன் மன்னர் கட்டினார். அவர் இந்தக் கோயிலைக் கட்டியபோது, அது நீண்ட காலமாக முடிக்கப்படாமல் கிடப்பதால், ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் கோயிலைக் கைப்பற்றி முடித்துவிட்டார். இந்தப் பத்தரைக்கு சுமார் 5 ஏக்கர் நிலம் அவரால் வழங்கப்பட்டது.
1200 ஆண்டுகள் பழமையான கோயில் முற்றிலும் சிதைந்த நிலையில் புதுப்பிக்கப்பட்டு பிப்ரவரி 2019 இல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இங்குள்ள சிவலிங்கத்தை சப்த ரிஷிகள் மற்றும் பெரிய சித்தர்களில் ஒருவரான அகஸ்திய முனிவர் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
ஆம் நூற்றாண்டில், காஞ்சிபுரம் மற்றும் மகாபலிபுரம் முழுவதும் பல கைலாசநாதர் கோயில்களை ராஜசிமன் மன்னர் கட்டினார். அவர் இந்தக் கோயிலைக் கட்டியபோது, அது நீண்ட காலமாக முடிக்கப்படாமல் கிடப்பதால், ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் கோயிலைக் கைப்பற்றி முடித்துவிட்டார். இந்தப் பத்தரைக்கு சுமார் 5 ஏக்கர் நிலம் அவரால் வழங்கப்பட்டது.
1200 ஆண்டுகள் பழமையான கோயில் முற்றிலும் சிதைந்த நிலையில் புதுப்பிக்கப்பட்டு பிப்ரவரி 2019 இல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இங்குள்ள சிவலிங்கத்தை சப்த ரிஷிகள் மற்றும் பெரிய சித்தர்களில் ஒருவரான அகஸ்திய முனிவர் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
கடம்பூர் கிராமம் நாயக்கர் மன்னர்களுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது மற்றும் இந்த கோவிலுக்கு பெரும் நிலம் வழங்கப்பட்டுள்ளது. மன்னர்கள் யார் என்ற விவரங்கள் அனைத்தும் கல்வெட்டுகளில் கொடுக்கப்பட்டுள்ளன.
இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை கோயில் இருக்கும் அந்தப் பகுதி ஒரு காடாக இருந்தது. சிதிலமடைந்து கிடக்கும் கூரையற்ற ஒரே ஒரு கல்கட்டுமானம் மட்டுமே அங்கு இருந்தது. தனித்து யாரும் அங்கே செல்வதில்லை. காரணம் ஆங்காங்கே பாம்புப் புற்றுகள் இருந்தன. சர்வசாதாரணமாகப் பாம்புகள் அங்கு நடமாடும். துணிந்து சிதிலமடைந்திருக்கும் ஆலயத்துக்குள் செல்பவர்கள் சிவலிங்கமூர்த்தியை தரிசிக்கலாம்.
கோயிலில் இருந்த சிற்பங்களையும் கல்வெட்டுகளையும் கொண்டு அதன் தொன்மையை அறிந்த சிவனடியார்கள் வழிபாடின்றி ஈசன் இருப்பதை எண்ணி மனம் வருந்தினர். மாதத்துக்கு இருமுறை பிரதோஷ நாள்களில் மட்டும் வந்து இடத்தைத் தூய்மை செய்து வழிபட்டுவந்தனர். அதன் பிறகு தொல்லியல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து சிற்பங்களையும் கல்வெட்டுகளையும் ஆய்வு செய்து இந்தக் கோயிலின் காலம் குறித்துச் சொன்னார்கள்.
கல்வெட்டுச் செய்திகளின் படி அந்த ஆலயம் கிருஷ்ணதேவராயர் காலமான 15-ம் நூற்றாண்டில் புனரமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. கோயிலில் இருந்த ஜேஷ்டாதேவியின் சிலையை வைத்து ஆலயத்தின் தொன்மையைக் கணக்கிட்டனர். ஜேஷ்டாதேவியின் சிலை அமைப்பு 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. எனவே இந்தக் கோயில் பல்லவர் காலத்திலேயே கட்டப்பட்டதாக இருக்கவேண்டும் என்று முடிவுக்கு வந்தனர்.
இந்து அறநிலையத் துறையின் உதவியோடு ஊர்மக்கள் மற்றும் பிற நன்கொடையாளர்களின் உதவியுடன் ஆலயம் சீரமைக்கப்பட்டுப் பலநூறு ஆண்டுகளுக்குப் பிறகு கடம்பூர் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அழகிய அமைதியான கிராமம் மற்றும் கிழக்கு நோக்கிய ஆலயம். கோயிலுக்கு எதிரே ஒரு பெரிய தாமரைக்குளம் உள்ளது. விநாயகர், முருகன், நவக்கிரகங்களுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
ஸ்ரீ கைலாசநாதர் கல்வெட்டு வரலாறு
காஞ்சிபுரம் மாவட்டம், நெ.57, கடம்பூர் கிராமம் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாதர் கல்வெட்டு வரலாறு | (கடம்பூர் கல்வெட்டு)
இடம்: காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், கடம்பூர் சிவன்கோயில் கருவறைத் தெற்குச் சுவர் காலம்: கிருஷ்ணதேவராயர், ஆங்கீரச வருஷம், பொ.ஆ.1512
1. சுவஸ்திஸ்ரீமன் மகாமண்டலேசுர மேதினி மீசர கண்ட கட்டாரி சாளுவ சாளுவ கிஷ்டம தேவமகாராயர் வாசல் நாகண்ண நாகம நாயக்கர் தம்பி .
2. நம்மிட நாயக்கற்தனமான நந்திபுரத்திற் சீர்மையில் ஆங்கீர வருஷத்தில் சிவலாத்திரை நாள்ஃகடம்பூர் உடையார் நயினார் ஸ்ரீ கயிலாயமுடை…
3. கடம்பூரில் கீழைத் தெரு மடைவிளாகமும் நஞ்சைப் பற்றில் திருப்பணிக்கு இரண்டாயிரம் குழியும் புதுக்குக்கும் கிராமம் ஒன்றும் பூ
4. தேவதானமாக விட்டோம் விஷவ்ருஷம் அற்பசி மாத தை அமாவாசையிலும் சோமவாரத்திலும் நாகமநாயக்கர் குமாரர் லிங்கப்பர் நாயக்கர்
5. கொண்டமநாயக்கர் கப்பு நாயக்கர் இவர்களுக்கும் நம்மிட கோத்திரத்திற்கும் புண்ணியமாகவிட்ட தன்மமாக நாட்டேரி கிராமம்….
6. இச்சிலமத்தான் எல்லய சோமாசியாற்கு நஞ்சைப் பற்றில் தாரைவாத்துக் குடுத்த பூதான நிலம் நீங்கலாக கிராமம் ஒன்றும் பூசை திருப்ப…..
7. கடவர்களாகவும் இந்த நாட்டேரி புதுக்குளம் கடம்பூரில் கிழைத்தெரு மடைவிளாகத்துக்கும் சீர்மையில் விலாபம் என்று கொள் (ளக்கட்)
8.வோமல்லவாகவும் மித்தன்மத்துக்கு அகிதம் பண்ணினவர்கள் கெங்கை கரையில் காறாம் பசுவைக் கொன்ற தோஷத்திலே போக கடை (வர்களாகவும்) கல்வெட்டு தரும் செய்திகள்
நந்திபுரம் சீர்மையில் உள்ள கிருஷ்ணதேவராயரின் வாசல் அதிகாரியாகப் பணியாற்றிய நாகண்ண நாகமநாயக்கரின் தம்பிக்கு நாயக்கத்தளமாக மன்னரால் வழங்கப்பட்ட கடம்பூரில் கீழைத் தெருவில் மடைவிளாகம் அமைக்கவும நஞ்சைப்பற்றில் கோயில் புதுக்கு அல்லது திருப்பணிக்கு இரண்டாயிரம் குழி நிலமும் இவரால் வழங்கப்பட்டது.
மேலும் விஷவருவம் முதல் பொ.ஆ.1521 ஐப்பசி மாதம், தை மாதம் ஆகிய இரண்டு மாதங்களிலும் வருகின்ற அமாவாசையிலும் சேரமலாரத்திலும் பூஜை எழிபாடுகள் நடத்த நாட்டேரி புதுக்குளம் என்ற கிராமமும் இக்கோயிலுக்குத் தேவதானமாகத் தரப்பட்டது. இதை நாகமநாயக்கர் மகள் லிங்கப்பநாயக்கர், கொண்டமநாயக்கர் கப்புநாயக்கர் ஆகியவர்களுக்கும் நாபக்கர்களின் கோத்திரத்துக்கும் புண்ணியம் ஏற்பட வேண்டுமென்று இந்த கிராமம் தானமாகக் கொடுக்கப்பட்டது.
இக்கிராமத்தில் ஏற்கனவே ஓச்சிலமத்தால் எல்லய சோமாசியார் என்ற பிராமணர்க்கும் திலம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த நிலம் நீங்கலாசு மீதியுள்ள நிலங்கள் இக்கோயில் வழிபாட்டுக்குக் கொடுக்கப்பட்டது என இக்கல்லெ டு குறிப்பிடுகிறது
கடம்பூரில் கீழைத் தெரு மடைவீணகப் பகுதி மற்றும் நாட்பேர் புதுக்குளம் ஆகிய நிலங்களுக்கு அதிகப்படியான வரி வாங்க மாட்டோம் என்ற உறுதியையும் கொடைபாளர்கள் கொடுத்துள்ளனர்.
கல்வெட்டு ஆராய்ச்சி : டாக்டர் இல.தியாகராஜன்
இடம்:
ஸ்ரீ கைலாசநாதர் கோவில், கடம்பூர் கிராமம், மறைமலைநகர்