சென்னையில் IMPA மற்றும் Mangaldeep ஏற்பாட்டில் நடைபெற்ற பன்னிரு திருமுறை திருவிழா மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருமண விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் 10 ஆதீனங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சென்னை நீலாங்கரை, ஆர்.கே.கண்வென்ஷன் சென்டரில் மிகப்பிரமாண்டமாக IMPA அமைப்பின் ஏற்பாட்டில் பன்னிரு திருமுறை திருவிழா மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னையில் முதன்முறையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை IMPA President அருணாச்சலம், IMPA Treasurer அப்பு சந்திரசேகர், நிர்வாகிகள் வாசு, ஜோதிடர் செல்வி,ஜெகதீஷ் கடவுள், முத்துக்குமார சுவாமி உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
காலை 8 மணிக்கு தொடங்கிய திருமுறை திருவிழா நிகழ்ச்சியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது மனைவியுடன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

மேலும் திருமுறைகளால் நாம் அதிக பயன் பெறுவது பொருளா? அருளா? என்கிற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவாளரும், பிரபல பட்டிமன்ற தலைவருமான சுக்கிசிவம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
மேலும் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், பேரூர் ஆதீனம், மயிலம் பொம்மபுற ஆதீனம், சிரவை ஆதீனம், செங்கோல் ஆதீனம், துழாவூர் ஆதினம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட ஆன்மீக பெரியவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
IMPA ஓரங்கிணைப்பாளர்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு வெள்ளி வேல் ஒன்றை நினைவு பரிசாக வழங்கினர்.