வைகுண்ட ஏகாதேசி : பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு கட்டணம் சிறப்பு சேவை ரத்து – அமைச்சர் சேகர் பாபு!

0
65

வைகுண்ட ஏகாதேசி : பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு கட்டணம் சிறப்பு சேவை ரத்து – அமைச்சர் சேகர் பாபு!

சென்னை திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதேசி முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளோடு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.அதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “108 திவ்ய தேசங்களில் 84 வது திவ்ய தேசங்களாக போற்றக்கூடிய பார்த்தசாரதி திருக்கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு 10,11 ஆகிய இரண்டு நாட்களில் 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் சிறப்பு கட்டணம் சிறப்பு சேவை ரத்து செய்யப்படுகிறது.

அனைவருக்கும் பொதுவான சாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வரக்கூடிய பக்தர்களுக்கு ஷிப்ட் 600 காவலர்கள் நியமிக்கப்பட்ட இருக்கிறார்கள். மொத்தாக 1800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட உள்ளனர். 5 இடங்களில் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் ஏற்கனவே இருப்பதோடு சேர்த்து 32 கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவர்களோடு கூடிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் இரண்டு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு க்யூ வரிசையை அதிகப்படுத்த உத்தரவு விட்டு இருக்கிறோம். தடுப்புகள் அமைத்து சீட் அமைத்து வெயில் இல்லாமல் பார்த்துக் கொள்கிறோம். 20 அடி இடத்தில் காவலர்களும் குடிநீரும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழிப்பிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாள் முழுவதும் கட்டணம் இல்லாத பிரசாதம் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருக்கோவில் சார்பில் வெவ்வேறு திருக்கோவிலில் இருக்கின்ற இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் என மொத்தமாக 500 பணியாளர்கள் மூன்று ஷிப்டுகளிலும் திருக்கோவில் சார்பாக திருவிழாவில் உதவியாக இருப்பார்கள். தீயணைப்பு வாகனங்கள் இரண்டு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பாக தலைமை பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் 300 தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட உள்ளனர்.

சிறப்பு தரிசனம் என்று வரும்போது பரமபத வாசல் திறப்பின் போது ஒருவருக்கு 500 ரூபாய் கட்டணம் 1500 பேருக்கு எப்பொழுது போல் வழங்குகிறார்கள். ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களில் முன்னுரிமை அடிப்படையில் 500 நபர்களுக்கு இலவசமாக டிக்கெட்கள் விநியோகிக்கப்படுகிறது. பரமபத வாசல் காலை 4:30 மணிக்கு திறக்கப்படும் சிறப்பு தரிசனம் அனைத்தும் ஆறு மணிக்கு உள்ளாக முடிந்த பிறகு பொது வரிசை 6 மணியிலிருந்து அனுமதிக்கப்படும் என தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் காலை 8 மணியிலிருந்து 10 மணி வரை தனியாக வரிசைப்படுத்தி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதியம் 2 மணியிலிருந்து 4 மணி வரை தனியாக அவர்களுக்கு வழி அமைத்து சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முடிந்த அளவிற்கு கடந்த ஆண்டு விட முழு அளவில் நிவர்த்தி செய்து இருக்கிறோம். அனைத்து கோவில்களிலும் அந்தந்த மாவட்ட சார்ந்த கூடுதல் ஆணையாளர்கள் இணை ஆணையாளர்கள் துணை ஆணையாளர்கள் உதவி ஆணையாளர்கள் திட்டமிட்டு அனைத்து திருக்கோவில்களிலும் இந்த இரண்டு தினங்களிலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளை ஏற்பாடு செய்ய உத்தரவிட்டு இருக்கிறோம்”என்று கூறியுள்ளார்.