மாதவிடாய் சுகாதாரம் குறித்த இணைய கருத்தரங்கிற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சக செயலாளர் தலைமை வகித்தார்
புதுதில்லி, ஜனவரி 21, 2021
மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்த மாதவிடாய் சுகாதாரம் குறித்த இணைய கருத்தரங்கிற்கு அமைச்சகத்தின் செயலாளர் திரு ராம் மோகன் மிஷ்ரா தலைமை வகித்தார்.
2021 ஜனவரி 21 முதல் 26 வரை நடைபெறும் தேசிய பெண் குழந்தை வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பெண் குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் மகளிர் தொடர்பான விஷயங்கள் குறித்த இணைய கருத்தரங்குகளை மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
கருத்தரங்கில் பேசிய திரு மிஷ்ரா, மாதவிடாய் மற்றும் பருவமடைதல் குறித்து விழிப்புணர்வு உருவாக்கப்பட வேண்டும் என்றும் பெண் குழந்தைகளுக்கு ஒட்டுமொத்த சமுதாயமும் ஆதரவளிக்க வேண்டுமென்றும் கூறினார்.
இது தொடர்பாக நிலவி வரும் மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிய வேண்டும் என்றும், விழிப்புணர்வை உருவாக்குவதில் கல்வி மற்றும் பஞ்சாயத்து அமைப்புகள், சுகாதார பணியாளர்கள், தாய்மார்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
எய்ம்ஸ் மருத்துவமனை இணை பேராசிரியர் டாக்டர் சுமித் மல்ஹோத்ரா உடல் நலம் மற்றும் மாதவிடாய் சுகாதாரம் குறித்த சிறப்பான உரையை வழங்கினார். தெலங்கானா, மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் இந்த இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
ALSO READ:
Secretary Ministry of Women and Child Development chairs a Webinar on Menstrual Hygiene