ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் பிரமாண்ட துவக்கம்: தமிழக சினிமாவில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அறிமுகமாகிறார்!

0
273

ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் பிரமாண்ட துவக்கம்: தமிழக சினிமாவில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அறிமுகமாகிறார்!

சென்னை, இந்தியா – ஜூலை 2025:
புதிய தயாரிப்பு நிறுவனமாக மலர்ந்துள்ள ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான “புரொடக்‌ஷன் நம்பர் 1” மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதிப்பைத் தெரிவித்துள்ளது. மான் கராத்தே ரெமோ, கெத்து போன்ற படங்களிலும் விரைவில் வெளியாகவிருக்கும் ரெட்டத்தல திரைப்படத்தில் டயலாக் ரைட்டராகவும் பணியாற்றிய இயக்குனர் லோகன் இயக்கும் இந்த படத்துக்கான அறிமுக நிகழ்வு, திரையுலக பிரபலங்களும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரமுகர்களும் திரண்ட மகிழ்வான ஒரு இரவாக மாறியது.

இந்திய அணியின் முன்னணி வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மின்னும் ஆட்டக்காரர் ஷிவம் டூபே, நிகழ்வின் துவக்கமாக விளக்கேற்றும் விழாவில் கலந்து கொண்டார். தொகுப்பாளருடன் நகைச்சுவை கலந்த உரையாடலில் ஈடுபட்ட அவர், “இது ஒரு வரலாற்றுப் பொழுது. இத்தகைய ஒரு படத் திட்டத்தின் தொடக்கத்தில் இருக்கிறேன் என்பது பெருமை!, இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் என் வாழ்த்துக்கள்” என தனது உற்சாகத்தையும் வாழ்த்துகளையும் பகிர்ந்தார்.

AGS என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் பல முக்கியப் படங்களில் தயாரிப்பு பொறுப்பாளராக பணியாற்றிய அனுபவம் கொண்ட டி. சரவணகுமார், இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராக செயல்படுகிறார்.

புரொடக்‌ஷன் நம்பர் 1 படத்தின் தொழில்நுட்பக் குழுவில் உள்ள முக்கியமான தொழில்நுட்ப நிபுணர்கள்:
🎶 சந்தோஷ் நாராயணன் – இசையமைப்பாளர்
🎥 சந்தீப் கே. விஜய் – ஒளிப்பதிவாளர்
🛠 முத்துராஜ் – கலை இயக்குநர்
🔊 ரசூல் பூக்குட்டி – ஒலி வடிவமைப்பாளர் (ஆஸ்கார் விருது பெற்றவர்)
💥 சுப்ரீம் சுந்தர் – ஃபைட் மாஸ்டர்

இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, படத்திற்கான வீரர் அறிமுகம், படத்தின் பெயர் கூட அறிவிக்கப்படுவதற்கு முன்பே நடந்தது! அனைவரும் எதிர்பார்த்த அந்த நடிகர் — இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தனது திரையுலக அறிமுகம் இந்த படத்தின் மூலம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. நிகழ்வில் பேசிய ரெய்னா, தனது தோழரான எம்.எஸ். தோனியும் இப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதா எனக் கேட்டபோது, “அவர் தான் அதுக்கு பதிலளிக்க வேண்டும!” எனச் சிரித்தபடி பதிலளித்தார்.

இந்த விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துகளை தெரிவித்த திரை பிரபலங்கள்:
எடிட்டர் மோகன், இயக்குநர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன், நடிகர் சதீஷ், இயக்குநர் விஜய் மில்டன், இயக்குநர் திருக்குமரன், இயக்குநர் பக்யராஜ் கண்ணன்
“இத்தனை திறமைமிக்க அணி மற்றும் ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் போன்ற உறுதியான ஆதரவு கொண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் என் இயக்குநர் பயணத்தைத் தொடங்குவது ஒரு கனவு நனவாகும் தருணம்,” என இயக்குநர் லோகன் உருக்கமாக தெரிவித்தார். “சந்தோஷ் நாராயணனும், ரசூல் பூக்குட்டியும் போன்ற உலகத் தரம் வாய்ந்த கலைஞர்களுடன் வேலை செய்வது சிறப்பான அனுபவமாக இருக்கும்,” என்றார்.

புரொடக்‌ஷன் நம்பர் 1 குறித்த மேலும் தகவல்களும், ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் நிறுவனம் இயக்கவிருக்கும் எதிர்காலப் படைப்புகள் குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாக உள்ளன.