டிபிஎஸ் வங்கி இந்தியா, பதிவுசெய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கடனுதவியில் முன்கூட்டியே குறிப்பிட்ட தொகையை செலுத்தவும், முன்கூட்டியே கடன் கணக்கை முடிக்கவும் வசூலிக்கப்படும் கட்டணங்களை தள்ளுபடி செய்கிறது!
- அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் கட்டண தள்ளுபடியை முதல் முறையாக இந்தியாவில் வழங்கும் வங்கிகளில் ஒன்றாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது டிபிஎஸ் வங்கி இந்தியா.
சென்னை, டிபிஎஸ் வங்கி இந்தியா லிமிடெட் (DBS Bank India Limited (DBIL)), ‘உத்யம்’ [UDYAM]-ல் பதிவுசெய்யப்பட்ட அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSMEs) மகிழ்ச்சியளிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் படி இந்நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் கடனுதவியில் முன்கூட்டியே குறிப்பிட்ட தொகையை செலுத்துவதிலும் [prepayment], முன்கூட்டியே கடன் கணக்கை முடிப்பதிலும் [foreclosure] வசூலிக்கப்படும் கட்டணங்களை தள்ளுபடி செய்துள்ளது. இந்த கட்டண தள்ளுபடி சலுகையானது வணிக நிறுவனங்கள் எந்தவித தடைகளும் இல்லாலமல் எளிதில் கடனுதவி பெறுவதையும் பணப்புழக்கத்தை சுலபமாக நிர்வகிப்பதையும் எளிதாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன தினத்தன்று [MSME Day] அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த தள்ளுபடி சலுகை, இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக டிபிஎஸ் வங்கி இந்தியா காட்டிவரும் உறுதிப்பாட்டை வெளிபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த தள்ளுபடியானது, ஏற்கனவே கடனுதவி வாங்கியிருக்கும் நிறுவனங்களுக்கும், தற்போது புதிதாக கடனுதவி பெறும் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உற்சாகமளிக்கும் இந்த நடவடிக்கை, நிறுவனங்கள் கடனுதவியை தங்களுக்கு ஏற்றவகையில் எளிதில் கையாள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், கடன் வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் அமைந்துள்ளது. பல குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், முன் கூட்டியே கடனை அடைப்பதற்கும், மீண்டும் கடனுதவி பெறுவதற்கும் குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருப்பதால், நிறுவனங்களிடையே தயக்கம் இருந்து வருகிறது. இந்த தயக்கம் நிறுவனங்களிடையே பணப்புழக்க நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் தடையாக இருக்கிறது. இப்பிரச்சினைகளுக்கு ஒரு நல்ல தீர்வாக இந்த கட்டண தள்ளுபடி நடவடிக்கை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து டிபிஎஸ் வங்கி இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், எஸ்எம்இ வங்கி செயல்பாடுகள் பிரிவின் தலைவருமான திரு. சுதர்சன் சாரி [Sudarshan Chari, Managing Director, and Head – SME Banking, DBS Bank India] கூறுகையில், “நிறுவன வாடிக்கையாளர்கள் தங்களுக்கேற்ற வகையில் கடனை செலுத்தும் வசதி மற்றும் அவர்களால் எளிதில் திருப்பி செலுத்த கூடிய கடன் வசதி கிடைப்பது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு இன்னும் ஒரு முக்கியமான தேவையாக இருந்து வருகிறது. முன்கூட்டியே பணம் செலுத்துதல் மற்றும் முன்கூட்டியே கடனை அடைக்கும் கட்டணங்களைத் தள்ளுபடி செய்வதன் மூலம், பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு பொதுவான சவாலுக்கான தீர்வை நாங்கள் வழங்குகிறோம்..
கடனுதவி கட்டணங்களில் நாங்கள் மேற்கொண்டிருக்கும் இந்த மாற்றம், வணிக நிறுவனங்கள் எந்தவித அபராதமும் இல்லாமல் தங்களது கடன்களை முன்கூட்டியே திருப்பிச் செலுத்த உதவும். மேலும், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் அல்லது சரக்கு கையிருப்புகள், தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் விரிவாக்கம் போன்ற முக்கிய அம்சங்களுக்கு நிதியை மறு ஒதுக்கீடு செய்யவும் உதவுகிறது. .இது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நிலைத்தன்மையையும் நீடித்த வளர்ச்சியையும் ஊக்குவிக்கும், குறிப்பிட்ட தேவைக்கான தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது’’ என்றார்.
டிபிஎஸ் வங்கி இந்தியா, மதிப்புச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் நிறுவனங்களுடன் கூடவே பயணித்து, அவர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்குடன் இயங்கி வருகிறது. ஆழ்ந்த நிபுணத்துவத்துடன் கூடிய புதுமையான நிதிச் சலுகைகளை ஒருங்கிணைத்து வழங்குவதன் மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் டிபிஎஸ் வங்கி இந்தியாவின் கடனுதவி திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
டிபிஎஸ் வங்கி இந்தியா, இணையத்தில் வங்கிக் கணக்கை ஆரம்பிக்கும் ஆன்லைன் அக்கெளண்ட் வசதியின் மூலம், தொழில்முனைவோர் நடப்புக் கணக்குகளை விரைவாகவும் எந்தவித தடையும் இல்லாமல் எளிதில் தொடங்கும் வாய்ப்பை வழங்குகிறது. மேலும், சிக்கலான ஆவணப் பணிகளுக்கான தேவையை தவிர்க்கிறது. இதன் தொடர்ச்சியாக எந்தவித தொந்தரவுகளும் இல்லாத வணிகக் கடன்களையும் வழங்குகிறது. இதன்மூலம் நிறுவன வளர்ச்சி மற்றும் செயல்பாட்டு மூலதனத் தேவைகளுக்கான நிதியை மிக துரிதமாக பெற ஆதரவுக்கரம் நீட்டுகிறது. விருது பெற்ற அந்நிய செலாவணி தீர்வுகள் மற்றும் ஏபிஐ [API] மூலமான வங்கி ஒருங்கிணைப்பு மூலம், டிபிஎஸ் வங்கி இந்தியா வணிகங்கள் தங்களது செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், பணிமுறைகளை தானியங்கு முறையில் செயல்படுத்தவும், சந்தை வாய்ப்புகளுக்கு ஏற்றவாறு விரைவாக செயல்படவும் முடியும்.
மொபைல் ஃபோன் மூலம் இயங்கும் டிபிஎஸ் வங்கியின் பெருநிறுவனங்களுக்கான வங்கி தளமான டிபிஎஸ் ஐடியல் [DBS IDEAL, the bank’s mobile-enabled corporate banking platform], வணிகங்கள் தங்களுடைய பணப்பரிவர்த்தனைகளை நிகழ்நேரத்தில் நிர்வகிக்கவும், பணப்புழக்கத்தை கண்காணிக்கவும், பரிவர்த்தனைகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும் உதவுகிறது. மேலும், Tally ERP உடனான ஒருங்கிணைப்பு அம்சமானது,, இணைக்கப்பட்ட கணக்கியல் செயல்பாடுகளை மேற்கொள்ளவும், தங்களது நிதி நிலையை தாமாகவே மறு ஆய்வு செய்யவும், நிதி அறிக்கைகளில் தங்களது சூழலுக்கேற்ற வகையில் சிறப்பாக செயல்படவும் உதவுகிறது.