மகாபலிபுரத்தில் உள்ள ராடிசன் ப்ளூ ரிசார்ட் டெம்பிள் பே, புத்துணர்வு நிரம்பிய மறு உருவாக்கம் செய்யப்பட்ட கடற்கரை சமையல் உணவகம் WHARF 2.0. வை திறந்தது.
ராடிசன் ப்ளூ ரிசார்ட் டெம்பிள் பே இன்றைய கடலோர எபிக்யூரியனுக்காக அதாவது சுவை நாடுபவர்களுக்கான WHARF 2.0 எனும் மறுவடிவமைக்கப்பட்ட பிரத்யேக கடற்கரை உணவுவிடுதியை தொடங்குவதாக அறிவிக்கிறது.
வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ள WHARF 2.0 ஒரு உணவகத்தை விட மேலான உணர்வைத் தரக்கூடியது. இது உலகளாவிய சர்ஃப் கலாச்சாரத்திற்கு ஒரு சுதந்திரமான மரியாதையை வழங்குகிறது. உலகின் மிகவும் புகழ்பெற்ற சர்ஃப் தளங்களான, ஹவாய், போண்டி, கலிபோர்னியா, கோவளம் மற்றும் பாலி ஆகிய இடங்களிலிருந்து உத்வேகம் பெற்று, புதிதாக மறுவடிவமைக்கப்பட்ட வார்ஃப் 2.0 கடல் சாகசத்தின் சிலிர்ப்பை சுவையான மற்றும் புதுமையான உணவு மற்றும் உணர்வுப்பூர்வமான வாழ்க்கையுடன் இணைக்கிறது.
வார்ஃப் 2.0 இன் மறுதொடக்கம் ஒரு மறக்க முடியாத கடற்கரையோர முழு நிலவு ஓட்ட விருந்துடன் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு சர்ஃப் கலாச்சாரத்தின் உணர்வை உயிர்ப்பித்தது.தங்கத்துகள்கள் போன்ற மணற்பரப்பின் பின்னணியில், இதமான நிலவொளியில் உயிரோட்டம் நிறைந்த சர்ஃப் ஃபேஷன் ஷோ, பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.
DJ சாண்டனாவின் துடிப்பான இசைக்கோர்வையில் கடற்கரை ஆடைகளுடன் ஃபேஷன் ஷோ நடைபெற்றது புதிய அனுபவத்தை பகிர்ந்தது. அதே நேரத்தில் விருந்தினர்கள் வார்ஃப் மெனுவிலிருந்து சுவையான உணவுகள் மற்றும் பானங்களின் உன்னத சுவையை அனுபவித்தனர்.
ஹவாய், போண்டி, கலிபோர்னியா, கோவளம் மற்றும் பாலி ஆகிய சர்ஃப் இடங்களின் சமையல் திறமையைக் குறிக்கும் ஐந்து நேரடி கவுண்டர்கள் உலகளாவிய சுவையை சேர்த்தன. ஃபயர் க்ரில்ட் கடல் உணவுகள் மற்றும் ஸ்மோக்கி தந்தூரி வகைகள் முதல் புதிய சாலடுகள், உலகளாவிய உணவு வகைகள் மற்றும் மகிழ்ச்சியான இனிப்புகள் வரை மெனுவில் இடம்பிடித்து, கடலோர இன்பத்தின் காட்சிப் பொருளாக அமைந்தது. மேலும் பானங்களின் பட்டியலில், காக்டெய்ல்கள், சிறந்த ஒயின்கள், கிராஃப்ட் பியர்கள் மற்றும் புதிய மற்றும் பருவகால பழங்களால் நிரப்பப்பட்ட கைவினைஞர்களின் மாக்டெய்ல்கள் ஆகியவை இடம்பெற்று உறுதியான மற்றும் மகிழ்வுக்கான இடமாக WHARF 2.0 வை உறுதி செய்தது. ஒவ்வொரு முறை உண்ணும்போது மற்றும் பருகும்போது கரையின் தாளத்தையும் கடலின் ஆன்மாவையும் பிரதிபலிக்கும் வகையில் WHARF 2.0 வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடற்காற்றை அனுபவித்துவாறு கடலின் ஆன்மாவுடன் உரையாடி, மணற்பரப்பில் வெறுங்கால்களோடு நடைபோடும் அனுபவத்தை நினைத்தாலே மனம் பூரிக்கும். அந்த அனுபவத்தை வார்ஃப் 2.0 இல் உள்ள ஒவ்வொரு உணவும் எதிரொலிக்கிறது-ஃபயர் க்ரில்ட் கடல் உணவு, கடல் உணவுகளின் புதிய சுவை ஆகியவற்றின் கொண்டாட்டம் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்க வல்லது.
ஜி. ஆர். டி ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி திரு விக்ரம் கோட்டா, “WHARF 2.0 மீண்டும் தொடங்கப்பட்டதன் மூலம், கடல் உணவுகளின் சிறந்த விருந்தோம்பலின் ஆன்மாவை சந்திக்கும் ஒரு இடத்தை நாங்கள் மீண்டும் அறிமுகப்படுத்துகிறோம். இது ஒரு உணவகம் மட்டுமல்ல-இது விருந்தினர்களை கரை, சுவை மற்றும் சாகசத்தின் சிலிர்ப்புடன் மீண்டும் இணைக்க அழைக்கும் ஒரு அனுபவமாகும். மகிழ்வான தருணங்களுக்கு வரவேற்கிறோம் என்று கூறினார்.
நீங்கள் ஒரு கடலோர நடைப்பயணத்திலிருந்து திரும்பி வருகிறீர்களோ அல்லது நட்சத்திரங்களின் கீழ் ஒரு மாலைக்கு வருகிறீர்களோ, WHARF 2.0, கடல் மட்டுமே சொல்லக்கூடிய கதைகளைக் கண்டறிய உங்கள் ஆழ்மனதில் அழைத்துச் செல்கிறது.
ரேடிசன் ப்ளூ ரிசார்ட், டெம்பிள் பே மாமல்லபுரம்,ஆடம்பரமும் பாரம்பரியமும் ஒன்றிணைந்த ஒரு கடலோர சிறப்பு இன்பத் தளம். இங்கிருந்து வங்காள விரிகுடாவின் காட்சிகளைக் கண்டு லயிக்கலாம். மேலும் ரிசார்ட்டில் ஸ்பா, உடற்பயிற்சி மையம் மற்றும் ஏராளமான நீச்சல் குளம் ஆகியவற்றை அனுபவிக்க முடியும். ரிசார்ட்டில் ஒன்பது சந்திப்பு அறைகள் மற்றும் இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய தூண் இல்லாத பால்ரூம் உள்ளது. நீங்கள் ஒரு அழகான அல்லது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வை நாடினால், இது ஒரு வசதியான தங்குதலுக்காக பரந்த அளவிலான சேவைகளையும் வசதிகளையும் வழங்கும் சிறந்த தேர்வாக இருக்கும்.