சென்னைஸ் அமிர்தா விமானக் கல்லூரியில் மாணவர்களுக்காக FASHIONISTA -2025 பிரத்தியேக பேஷன் ஷோ CABIN CREW உடை அலங்காரத்துடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஊடகத்துறை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் CELEBRITY அனிதா சம்பத் மற்றும் பேஷன் ஷோ சார்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர்.
அனிதா சம்பத் அவர்கள் சென்னைஸ் அமிர்தா விமான கல்லூரி வளாகத்தை சுற்றி பார்த்தார்.
இதில் Airport check in counter, model Aircraft, மாதிரி விமான நிலையம் (Airport) போன்ற அதிநவீன வசதிகளுடன் கூடிய செயல்முறை சார்ந்த கல்வியை சென்னைஸ் அமிர்தா கல்வி நிறுவனம் மாணவர்களுக்கு அளிப்பது குறித்து பாராட்டி பேசினார்.
இந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியை சுவாரசியமாக மாற்றும் வகையில் கேபின் க்ரூ (cabin crew) யூனிபார்ம் அணிந்த மாணவர்கள் மாடல் விமானத்திலிருந்து வெளியே வந்து ராம்பில் (Ramp walk) நடை போட்டு போட்டி நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தனர்.
திரு அனிதா சம்பத் அவர்கள் நடுவர் குழுவுடன் இணைந்து சிறப்பாக பேஷன் வாக் (fashion walk) செய்த அணியை தேர்வு செய்து பாராட்டுகளுடன் பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
இந்த பேஷன் ஷோ மாணவர்களின் திறமையையும் தன்னம்பிக்கையும் வெளிப்படுத்தும் மேடையாக சென்னைஸ் அமிர்தா விமானக் கல்லூரி நிர்வாகத்தால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.