உலகின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக 2வது இடத்தில் உள்ள பாண்டிச்சேரியில் உள்ள சுற்றுலா மையங்களை மேம்படுத்தும் வகையில் அதிரடி சலுகைகளை அறிவித்து அசத்திய அமைச்சர் திரு. கே. லட்சுமி நாராயணன் மற்றும் விக்ரம் கோட்டா.
ஜிஆர்டி ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸின் ஒரு அங்கமான ராடிசன் ரிசார்ட் பாண்டிச்சேரி பே சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
ராடிசன் ப்ளூ ஹோட்டல், ஜி. ஆர். டி சென்னையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் சந்திப்பில் புதுச்சேரியின் மாண்புமிகு பொதுப்பணித்துறை, சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. கே. லட்சுமி நாராயணன் மற்றும் ஜி. ஆர். டி ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி திரு விக்ரம் கோட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரபல சுற்றுலா இணையதளமான லோன்லி பிளானட்- இன் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் புதுச்சேரி உலகின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக 2 வது இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக நடப்பாண்டில் இந்தியாவில் இருந்து இடம்பெற்ற ஒரே இடம் இதுதான். லோன்லி பிளானட்டின் சிறப்புத் தேர்வான பாண்டிச்சேரியை அனுபவிக்க, பயண தொகுப்பை வெளியிட்டு, பாண்டிச்சேரியின் உலகளாவிய அங்கீகாரத்தைக் கொண்டாடுவதற்காக ராடிசன் ரிசார்ட் பாண்டிச்சேரி பே ஒரு புதிய சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த தொகுப்பில் சுற்றுலாப் பயணிகளுக்கு, சூரிய ஒளி பஃபே காலை உணவு, வரவேற்பு வசதிகள், அரை நாள் நகர சுற்றுப்பயணம், பே பிஸ்ட்ரோவில் ஒரு பிராங்கோ-தமிழ் உணவு அனுபவம், உணவு, பானங்கள் மற்றும் ஸ்பா சேவைகளில் தள்ளுபடிகள் மற்றும் ஒரு சிறப்பு பிரியாவிடை பரிசு உள்ளிட்ட ஒரு தொகுக்கப்பட்ட பயணத்திட்டத்தை வழங்குகிறது. இது அற்புதமான மனதுக்கு நெருக்கமான மற்றும் மறக்கமுடியாத பாண்டிச்சேரி சுற்றுலா அனுபவத்தை வழங்குகிறது.
இந்நிகழ்ச்சியில் முக்கியமான 3 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
1. ஜிஆர்டி ஹோட்டல்கள் அதன் அனைத்து கிளைகளிலும் பசுமை கூட்டங்களைத் தொடங்குவதாக அறிவித்தன.கார்பன் தடம் கண்காணிப்பு, மரம் நடுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல், பிற பசுமை நடைமுறைகள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்வுகளை நடத்த கார்ப்பரேட் விருந்தினர்களுக்கு ஜி.ஆர்.டி அங்கீகாரம் அளிக்கிறது
2. மரங்களை நடுவதற்கும், நிகழ்வுகளின் போது உருவாகும் கார்பன் தடத்தை ஈடுசெய்வதற்கும் விருக்ஷம் அறக்கட்டளையுடன் ஜி.ஆர்.டி புரிந்துணர்வு மேற்கொண்டுள்ளது.
3. சுற்றுச்சூழல் தொழில்நுட்ப தளமான ஈக்கோஇண்டெக்ஸ் உடன் இணைந்து, அவர்களின் திறமையான கார்பன் தடம் கால்குலேட்டர் பயன்பாட்டைப் பயன்படுத்தி கார்பன் உமிழ்வை துல்லியமாக கணக்கிட முயற்சி மேற்கொண்டுள்ளது.
மேலும் இந்நிகழ்ச்சியில், திரு. விக்ரம் கோட்டா எழுதிய GReaT Butterfly Effect” GRT இன் நிலைத்தன்மை பயணம் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. இது ஜி. ஆர். டி ஹோட்டலின் நிலைத்தன்மையை நோக்கிய எழுச்சியூட்டும் பயணத்தை ஆவணப்படுத்துகிறது. சுற்றுச்சூழல் மற்றும் சமூக மாற்றத்திற்கு விருந்தோம்பல் அதாவது ஹாஸ்பிடாலிடி எவ்வாறு வழிவகுக்கும் என்பதை இந்த புத்தகம் காட்டுகிறது,
புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றிய திரு. விக்ரம் கோட்டா, பாண்டிச்சேரியின் சுற்றுலா மைல்கல்லை கொண்டாடுவதில் பெருமிதம் கொள்வதாகவும், அதே நேரத்தில் சுற்றுச்சூழல் உணர்வுள்ள தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்தார். GREAT பசுமை கூட்டங்கள் மற்றும் ‘லோன்லி பிளானட்டின் தேர்வு சலுகை ஆகியவை, நிலையான கண்ணோட்டத்தின் மூலம் பயண அனுபவங்களை மறுபரிசீலனை செய்வதற்கான தேர்வு என்றும் அவர் தெரிவித்தார்.